திங்கள், 14 ஏப்ரல், 2014

பின்புலம்

rjini and modi-3
ஒருவர் எந்த இடத்தை பின்புலமாக கொள்கிறார்களோ அதாவது சுருங்கச் சொன்னால் எந்த இடத்தில் பிறக்கிறார்களோ அந்த வாசத்துடன்தான் சிந்திகிறார்கள் என்பது உண்மை..


தமிழகம் என்றால் ஆதிக்க எதிர்ப்பு பகுத்தறிவு பழமை மறுப்பு,  கர்நாடகம் என்றால் பழமைவாதம் இந்து மத உணர்வு,  கேரளம் என்றால் பொது உடமை மனப் பாங்கு என்று ஒவ்வொரு மாநிலக் குழந்தையும் ஒவ்வொரு விதம்தான்...

ஆகையால் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது... நான்தான் உயர்வானவன் என் கருத்துதான் தலைசிறந்தது என்று கூறுவதும் அபத்தம்தான்..... தவறுதான்....

ரஜினியும் அதைப் போலத்தான்...  தொடர்ச்சியாக துக்ளக் சோவுடன் நட்பு பாராட்டுவதும் பிஜேபி தலைவர்களை சந்திப்பதும் யாரோ சொல்லிக் கொடுத்தோ யாருடைய வற்புறத்தலாலோ இல்லை.. தன்னியல்பாக அவருடன் உள்ள குணம்தான்... 

அதில் பெரும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை... அதனால் அவரை ஒரு குறிப்பிட்ட எந்த  கட்சியுட்ன் முடிச்சு போடுவது தவறாகத்தான் தோன்றுகிறது,,

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

Ellam ohta vaikum buildup.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி அனானி... ஆனால் பாராளுமன்ற ஓட்டு ஜனநாயகத்தில் எல்லாம் அப்படியே....