திங்கள், 28 ஏப்ரல், 2014

டமால் டூமீல்..

நான் படம் பார்ப்பதே மிக அபூர்வம்.. அதிலும் புதுப் படங்கள் பார்க்கும் ஆர்வமும் குறைவு நேரமும் குறைவு... தமிழ்ச் சினிமாவைப் பற்றிய எனது பார்வை கமலின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ”எல்லா உலகப் படங்கள் மாதிரிதான் நம்வூர் படங்களும்.. ஆனா என்ன கண் தான் சற்று ஒன்றை...” என்பார்... நல்ல வேளை இதற்கு எதிர்ப்பு ஒன்றும் வரவில்லை..

சரி விஷயத்துககு வருகிறேன்..

சமீபத்தில் பார்த்த புதுப் படம் டமால் டூமீல்.... மங்காத்தா வைபவ் நடித்திருக்கிறார்.. பல லாஜிக் மீறல்கள்தான்... ஆனால் வாய் விட்டுச் சிரிக்க சரியான த்ரில் படம்தான்.. பொதுவாக க்ளைமாக்சில் சொதப்புவார்கள்.. ஆனால் இந்தப் படத்தின் க்ளைமாக்சில் பொதுவுடமையாக ”பொருளை பொதுவாக்கியிருக்கிறார்கள்”.. நல்ல உத்திதான்... பாத்திரங்கள் அனைவரும் அவரவருக்கான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.. 

அதில் நிபுணத்துவம் தெரிகிறது.. இயக்குனர் ஸ்ரீ .. புதியவரா...? நிச்சயம் தமிழ்ச் 
சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார்.. சினிமா கலையை பற்றி நிறைய 
படித்திருக்கலாம் என்று தோன்றுகிறது...

கமலின் பம்மல் கே சம்மந்தம் பஞ்ச தந்திரம் போல இந்தப் படம் சன் டிவியால் வாங்கப்  பட்டால் நிச்சயம் ரிப்பீட் ஆடியன்சுக்காக பல முறை ஒளிபரப்பாகும் என்பது திண்ணம்...

பெரும் கலைப் படங்களை தர முடியாவிட்டாலும், கோலிசோடா டமால் டூமீல்  போன்ற படைப்புகள் தமிழில் வருவது நாளைய தமிழ்ச் சினிமாவின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது..

கருத்துகள் இல்லை :