செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்... ப்ளீஸ்....

எனது நண்பரும் தொழிற்சங்க பிரமுகருமான தோழர் ராமகிருஷ்ணன் தனது முக நூலில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.. பார்த்ததும அதிர்ச்சியானேன்.. அவரை தொடர்ப்பு கொண்டேன்..


திநகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் சாப்பிட்டபின்பு  தன் ATM கார்ட்டை பணம் செலுத்த கொடுத்ததாகவும்.. அதன் பின்னர் பின்னை அதில் அழுத்தியதாகவும் தெரிவித்தார்.. பின்பு அவர் வசிக்கும் பெருங்களத்தூர்    லிருந்து ரூ 15000/- திருடப்பட்டதாகத் தெரிவித்தார்.. அவர் மொழியில் அவர் முக நூலிலிருந்து அவர் அனுமதியுடன் வெளியிடுகிறேன்...
====
எச்சரிக்கை! நண்பர்களே!!

அன்பு முகநூல்நண்பர்களுக்கு ஒர் செய்தி! இன்று மாலை எனது செல்பேசியில் ஒரு தகவல் வந்தது. அதாவது ரூ.15,000/-எனது வங்கிக் கணக்கில் பெருங்களத்தூரில் உள்ள ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது. கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் என்னுடைய டெபிட்கார்ட் என் வசம் இருந்தது. உடனே என்னுடைய வங்கியை தொடர்பு கொண்டேன் அவர்களூம் இதனை உறுதிபடுத்தினார்கள். உடனே என்னுடைய கார்டை ப்ளாக் செய்யசொன்னேன்.பிறகு ஒரு கம்ப்ளெண்ட் கொடுத்தேன். வங்கியை பொறுத்த மட்டில் என்னை சைபர் க்ரைம் போலிஸில் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்து அந்த FIR காப்பியை இணைத்து என்னுடை வங்கியில் கடிதம் கொடுக்கச் சொன்னார்கள். ஆனால், என்னுடைய பணம் போனதை திருப்பிப்பெற எந்த உத்தரவாதமும் இல்லை எனத் தெரிவித்தார்கள். இதுகுறித்து யாராவது ஏதேனும் உபயோகமான ஆலோசனை தெரிவித்தால் நலமாக இருக்கும். தருவீர்களா! எதிர்பார்ப்புடன்
=====
இதைப் படிக்கும் விவரம் தெரிந்த நண்பர்கள் தயவு செய்து ஆலோசனைகளைத் தரவும்... எனக்குத் தெரிந்தது...
1) அடிக்கடி பின்னை மாற்ற வேண்டும்
2) ஒரே ATM ல் பணம் எடுப்பது   நல்லது
3) முதல்வன் படம் மாதிரி ஹோண்டா சிட்டி காரைத் தொலைத்தவனுக்கு ஒரு நியாயமும் டிவிஎஸ் வண்டியை தொலைத்தவனுக்கு ஒரு நியாயமும் இல்லாமல் காவல்துறை அனைத்து வகை சைபர் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் ஈட்டும் தொகையின் அருமை அவனுக்குத்தான் தெரியும்...


மேலும் ஆலோசனைகள் இருந்தால் பின்னூட்டப் பகுதியில் தெரிவிக்கவும்...

1 கருத்து :

ராமகிருஷ்ணன் சென்னை சொன்னது…

நன்றி பத்ரி...சைபர் க்ரைம் பகுதிக்கு ஒரு மினஞ்சல் அனுப்பிஉள்ளேன்....