அன்பே சிவம் படத்தில் ஒரு வசனம் வரும்.. நாசர் அந்தப் படத்தில் ஒரு முதலாளியாக நடிப்பார்... அவர் ஒரு காட்சியில் இப்படிச் பேசுவார், ” இந்த அரசியல்வாதிங்க தொழிலாளர் பக்கம் சைட் எடுக்கற மாதிரி நடிப்பாங்க... ஆனா அவங்க நம்ம பக்கம்தான்.. பின்ன அன்னிய செலவாணி கொட்றது யாரு... நாமதான... தொழிலாளர்களா கொட்றாங்க...”
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
செவ்வாய், 12 நவம்பர், 2013
திங்கள், 11 நவம்பர், 2013
Dynamo - நம்ப முடியாத மேஜிக் நிபுணர்
ஜெ மோ, ந, மோ. நாடாளுமன்ற தேர்தல், கூடங்குளம், CHOGM இலங்கை, செஸ் போட்டி, ஸ்மால் பஸ் சர்ச்சை என இணையத்தில் ஏராளமான விவாதங்கள் மற்றும் counter விவாதங்கள் கொட்டி கிடக்கின்றன.. அவற்றை எல்லாம் படித்து படித்து மன நோயே வந்து விடும் போல இருக்கிறது.. சற்று ரிலாக்ஸ் பண்ண வேண்டாமா...? சரிதான் சார்.. எப்பவுமே சிரீயஸ் விவாதம் மட்டுந்தானா..? ஆகையால் யான் பெற்ற இன்பத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா என்பதற்குத்தான் இந்த பில்ட்ப்..
லேபிள்கள்:
மேஜிக்
,
Dynamo - Magician Impossible
,
Steven Frayne
வெள்ளி, 8 நவம்பர், 2013
ஜெமோவின் எழுத்துரு
இந்துவில் ஜெமோ தமிழ் எழுத்துரு பற்றி எழுதினாலும் எழுதினார் அவர் கருத்துக்கு கண்டனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன.. எங்கு திரும்பியும் கடும் கண்டனக் கணைகள்...
லேபிள்கள்:
தமிழ் எழுத்துரு
,
மலையாளி நாயர்
,
வசவுகள்
,
ஜெயமோகன்
புதன், 6 நவம்பர், 2013
மங்கள்யான்
''மங்களகரமான மங்கள வாரத்தில் மங்கள்யான்
மங்கலான வான்வெளியில் மந்தகாசத்துடன்...."
மங்கலான வான்வெளியில் மந்தகாசத்துடன்...."
சரி.. சரி.. கவிதையை நிறுத்திக் கொள்கிறேன்.. மங்கள்யான் போகட்டும்... மங்கள்யான் கடந்த கடிமான பாதை வான்வெளியில் மட்டுமல்ல.. பூவுலகிலும்தான் அதாகப்பட்டது.. முதலில் மங்கள்யான் மீதான விமர்சனங்கள்....
(1) தீபஓளித் திருநாளில் இந்த costly வாண வேடிக்கை தேவையா...?
(2) உலகில் பட்டினியால் வாடும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை என்கிற போது இது எதற்காக?
(3) முன்னாள் ISRO பெரும்புள்ளி மாதவன் நாயரே இந்த திட்டத்தை குறைகூறிவிட்டாரே
(4) நமது பக்கத்து வீட்டு பெரும்புள்ளி நண்பர் சீனா வேறு ‘இதெல்லாம் ஏழை இந்தியாவுக்குத் தேவையா‘ என்று கருத்துரைக்கிறது...
என்று ஏக களேபரம்.. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மங்கள்யான் விண்ணில் பாய்ந்து விட்டது.. so far so good என்று சென்று கொண்டிருக்கிறது.. நாமும் வாழ்த்துவோம்..
நேற்று (5.11.13) timesnow விவாதத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.. கிட்டத்தட்ட 450 கோடி செலவு செய்து செவ்வாய்கிரகத்திற்கு அப்படி அனுப்ப இப்போது என்ன தேவை வந்துவிட்டது என்கிற திசைவழியில் சிலர் பேட்டியளித்தனர்.. ஐன்ஸ்டீன் இப்படி நினைத்திருந்தால் விஞ்ஞான வளர்ச்சியே வந்திருக்காது எனவும்.. சரியாக பேசுங்கள் ஐன்ஸ்டீன் தன் சொந்த பணத்தைத்தான் செலவழித்தார் எனவும் வாதப்பிரதிவாதங்கள்....இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்...
நமது நாட்டில் தேவையற்ற விசயத்திற்கு செலவு செய்தேயில்லையா என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சியைத் தொட்டு சொல்லிப்பார்ப்போம் ... எத்தனை ஆடம்பர விழாக்கள் எத்தனை ஊழல்கள் எத்தனை விரயங்கள் நடத்தியிருக்கிறோம்... ஒரு விஞ்ஞான வளர்ச்சிக்காக நாட்டில் வரிப்பணத்தை செலவு செய்தால் அதை எத்தனை பேர் குறை சொன்னாலும் நான் சொல்வது ஒரேயொரு வார்த்தைதான் ‘சாரி...‘
நாளை சந்ததிகள் நன்றாக இருக்க நாம் நமது குழந்தைகளை படிக்க வைக்கிறோம்.. வெறும் சம்பாதிக்கும் மிஷினை உருவாக்குவதற்கு மட்டுமல்ல.. ஒருவன் ஆளுமை வளர்ச்சிக்கும் அந்தப் படிப்பு தேவை என்பதை பலர் கூறுவார்கள்.. அதைப் போன்ற ஒரு முயற்சிதான் இந்த மங்கள்யான்... குறை சொல்லுங்கள்.. அதற்கு ஆயிரம் பிற விஷயங்கள் இருக்கின்றன.. தயவு செய்து கம்பீரமாக வான் வெளியில் விரையும், எதிர்கால சந்ததியினரின் ஆளுமையை வளர்க்க உதவும் அந்த மங்களயானைத் தவிர என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்..
=====================
சரி ஒரு டெயில் பீஸ் வேண்டாமா...?
அர்னாப் சொன்னார்.. ஒரு சமயம் 50 -60களில் ஆர் கே லக்ஷ்மண் ஒரு கார்ட்டுன் போட்டிருந்தாராம்.. அதில் அவருடைய வழமையான மிஸ்டர் பொதுஜனம் ஒட்டுத் தையல் போட்ட கோட்டை அணிந்து கொண்டு பாவமாக நிற்பாராம்.. பக்கதில் இருக்கும் இன்னொருவர், ஒரு அமெரிக்கரைப் பார்த்துச் சொல்வாராம்.. ’நீங்கள் சந்திரனுக்கு ஒரு மனிதனை அனுப்பனும்னு சொன்னிங்களே.. அந்த மனிதன் எதையும் தாங்கும் ஒருவராக இருக்கணும்னு சொன்னிங்ளே.. அதாவது அவருக்கு நல்ல தண்ணி கிடைக்கக்கூடாது நல்ல சாப்பாடு கிடைக்கக்கூடாது, நல்ல சுகாதாரம் கிடைக்ககூடாதுன்னு.. அப்படி பட்ட ஒருவர்தான் இவர்’ என்று அந்த மிஸ்டர் இந்திய பொது ஜனத்தைக் காட்டுவாராம்...
திங்கள், 21 அக்டோபர், 2013
மெட்ராஸ் கஃபே பற்றி கமலின் கருத்து...
”தெனாலி படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும்..நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், மெட்ராஸ் கஃபே படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது.
லேபிள்கள்:
இலங்கைப் பிரச்சனை
,
கமல்
,
தெனாலி
,
மெட்ராஸ் கஃபே
,
R A W
சனி, 19 அக்டோபர், 2013
சாமி சொன்னா சர்தான்....
உத்திர பிரதேசத்தில் உன்னாவ் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது.. அதை தற்போது அகழ்வாராய்ச்சிக்காரர்கள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.. காரணம்
அருள்....
இன்சூரன்ஸ் அலுவலகத் தொழிற்சங்க தோழர் ராமன் அவர்கள் தன்னுடைய ப்ளாக்கில் ஒரு பதிவு வெளிட்டிருந்தார் அதற்கான சுட்டிhttp://ramaniecuvellore.blogspot.in/2013/10/blog-post_14.html
அதைப் பார்த்ததும எனக்கு பழைய நினைவுகள் தோன்றின.. பத்து வருடங்களுக்கு முன்பு கேளம்பாக்கத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்திலிருந்து நானும் என் நண்பரும் சேர்ந்து அலுவலகம் செல்வோம். பழைய கேளம்பாக்கம் பஸ் நிலையத்தின் அருகில் ஒரு சாராயக்கடை இருந்தது. அதில் பல கடவுளர்களின் படங்களை அந்தக் கடைக்காரர் வைத்திருந்தார்.. அதற்கான மரியாதைகளுடன்..ஊதுபத்தி பூ etc etc .
நான் என் நண்பரிடன் அதைக் காட்டிக் கேட்டேன். அந்தக் கடைக்காரர் என்ன வேண்டிக் கொள்வார்? என்று.. “கடவுளே எனக்கு நன்றாக வியாபாரம் ஆக வேண்டும்..” என்றுதானே.. ”ஆம் உண்மை” என்றார் என் நண்பர். அப்போது நான் கேட்டேன். ஒரு வாதத்திற்கு இப்படி வைத்துக் கொள்வோம்.. அந்தக் கடையின் ரெகுலர் கஸ்டமராக திகழும் ஒரு குடிகாரன் வீட்டில் இதே கடவுள் படங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்... அந்தக் குடிகாரனின் மனைவி என்ன வேண்டிக் கொண்டிருப்பாள்
”சாமி.. என் புருசன் குடிய நிப்பாட்டனும்” என்று தானே என்றேன்... என் நண்பரும் ”அப்படித்தான்” என்றார்.
”அப்போது கடவுள் யாருக்கு செவி சாய்பார்...?
அந்தக் குடிகாரன் மனைவிக்கா...? அல்லது சாராயக் கடை ஓனருக்கா..?”
”சிக்கலான கேள்வி” என்றார் என் நண்பர்.
நான் சொன்னேன்.. ”ஆனால் எளிமையான பதில் ஒன்றுதான்...கடவுள் நிச்சயமாக அந்த சாராயக்கடைகாரனுக்குத் தான் தன் அருளை வாரி வழங்குகிறார்” என்றேன். ”ஏனெனில் அவர்தான் கார் பங்களா என்று கடையில் வரும் லாபத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்கிக் குவிக்கிறான்.. அந்த ரெகுலர் கஸ்டமர் மேலும் குடித்து குடல் வெந்து செத்துத்தான் போகிறான்...”
என் நண்பர் வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்..
அதைப் போல இன்னொன்று கேள்வி... சரஸ்வதி பூசையை என் வீட்டில் என் மனைவி கொண்டாடினாள். அவளிடம் கேட்டேன்..”கல்விக்கு கடவுள் இருக்கும் நம் நாட்டில் ஒரு பல்கலைகழகம்கூட 200 ரேங்கில் இல்லை..” என்று.. அவள் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டாள்.
நீங்களாவது சொல்லுங்களேன்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)