சனி, 31 மார்ச், 2018

A FEW GOOD MEN...

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனை தற்போது பிஜேபி தீர்த்துவிடும் என முதலமைச்சர் நம்பினார்...

 இன்னும் ஒரு நாள் காத்திருக்கலாம் என்றார்....

 கடைசி  குடிமகனுக்கும்  தெரியும் கர்நாடக தேர்தல் இன்னமும் முடியவில்லை என்று ....

இதில் எல்லா கட்சியும் ஒருவரையொருவர் சாடி கொள்வதும்  குற்றம் சாட்டுவதும் கேலி கூத்து ....இந்த பிரச்சனைக்கு  அனைத்து  தரப்பும் காரணம் ...

கர்நாடகத்தின்  அடாவடிக்கு எந்த நியாயமும்  தார்மிகமும்  இல்லை ...இருந்தும் தமிழர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள் ...

மே மாதம் கர்நாடக தேர்தல் முடிந்து விடும்... காவேரி மேலாண்மை அமையுமா என்பதை நாட்டின் கொஞ்ச நஞ்ச நியாயஸ்தர்கள் ஜனநாயகவாதிகள் அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த உலகத்தில்  இருந்தாலும் குரல் தரட்டும் ...

செவ்வாய், 27 மார்ச், 2018

ஸ்டெர்லைட் ஆலை ....


ஸ்டெர்லைட் ஆலை இன்னொரு ஜல்லிக்கட்டு பிரச்சனையாகி விசுவரூபம் எடுத்துள்ளது பல நாட்கள் புகைந்து கொண்டிருந்த பிரச்சனைதான் …

ஜெ-யின் 91-96 ஆட்சிக்காலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு தொடங்கப்பட்ட நிறுவனம் மக்கள் போராட்டத்தால் தடை பட்டு மீண்டும் கலைஞர் ஆட்சியில் பச்சைக் கொடி காட்டப்பட்டது

ஆலை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் விளைவாக அந்த ஆலை 2013ம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்படுவதற்கு முன்பாக பல விபத்துக்களும், உயிரிழப்புகளும், ஆலையிலிருந்து வெளியேறிய வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது, மண் வளம் பாதிக்கப்படுவது, வளி மண்டலம் மாசுபடுவது, காற்றுவளி மண்டலத்தில் ஆலை தூசுக்கள் பரவி நிற்பது இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய், வாழ்வாதார பாதிப்பு, கால்நடைகள் இறந்து போவது கொடுமைகள் அரங்கேறியுள்ளது…

மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் மூடும் உத்தரவை ரத்து செய்தாலும், அந்த ஆலையின் பல்வேறு அத்துமீறல்களை சுட்டிக்காட்டி ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து அந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய உத்தரவிட்டிருந்தது

இவ்வித ஆலைகள்  பொது மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து  குறைத்து  25 கிலோமீட்டர்கள் தூரம் இருக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிட்டு 11 கிலோமீட்டர்கள் இன்னும் 10 கிலோமீட்டர்கள்  என்றுதான் உள்ளது என்பது நிரூபண மாகியுள்ளது…

வேலை வாய்ப்பை பாதிக்கிறது …..ஒவ்வொரு ஆலைகள் தொடங்கும்போது பிரச்சனை செய்தால் வளர்ச்சி என்பது எப்படி சாத்தியம் என்கிற கேள்விகள் சாதாரண கேள்விகள் என்று புறம் தள்ள முடியாததுதான் …….

ஆனால் இந்திய போன்ற ஊழல் மலிந்த நாடுகளில், கோடிகளில் புரளும் வேதாந்தா போன்ற பகாசுர நிறுவனங்கள் அதிகாரத்தையும் நீதியயையும் எதையும் விலைக்கு வாங்க முடியும் என்கிற போது,   மக்களின் இறுதி  கொழுக்கொம்பு என்பது போராட்டத்தை தவிர வேறு என்ன என்பதையும் அறிவார்ந்தவர்கள் ஜனநாயக வாதிகள் நியாயஸ்தர்கள் நினைத்து பார்க்க வேண்டும்…

வெள்ளி, 16 மார்ச், 2018

ஸ்டீபன் ஹாக்கிங்...

ஸ்டீபன் ஹாக்கிங்  பற்றி சொல்லாமலும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தாமல் இருந்தால் நான் நேசிக்கும் கொள்கைக்கு  விரோதமாக போகும் … அன்னாரை பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளி வந்த வண்ணம் உள்ளன ...   அவற்றில் நான் படித்த சில விஷயங்கள்...
                                                                                                                                                              இங்கிலாந்தில் 1942-ல் ஜனவரி 8-ம் தேதி ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். ‘கலீலியோ இறந்து சரியாக 300 ஆண்டுகள் கழித்து’ என்று ஹாக்கிங் சொல்லிக்கொள்ள விரும்புவார். பள்ளிப் படிப்பில் ஹாக்கிங் சராசரியான மாணவராகவே இருந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது கணிதமும் இயற்பியலும் மிகவும் எளிமையாக இருந்ததால் ‘பிரபஞ்சவியல்’ அவருடைய ஆர்வத்தை ஈர்த்தது. ஏனென்றால், “இந்தப் பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது என்ற பெருங்கேள்விக்கு ‘பிரபஞ்சவியல்’ தானே விடை தேடுகிறது” என்றார் ஹாக்கிங்.

                                                                                                                                                      


ஆல்பெர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பிறகு, பொதுமக்களின் சிந்தையை ஸ்டீபன் ஹாக்கிங் அளவுக்குக் கொள்ளை கொண்ட, உலகெங்கும் கோடானு கோடி மக்களால் நேசிக்கப்பட்ட வேறொரு அறிவியலாளரை நம்மால் காண முடியாது” என்கிறார் கோட்பாட்டு இயற்பியலாளர் மிஷியோ காக்கு.



இந்தப் புகழை ‘காலத்தின் சுருக்கமான வரலாறு: பெருவெடிப்பிலிருந்து கருந்துளைகள் வரை’ (எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்: ஃப்ரம் பிக் பேங் டு ப்ளாக் ஹோல்ஸ்’) என்ற 1988-ல் வெளியான நூலின் மூலம் ஹாக்கிங் பெற்றார். இதுவரை ஒரு கோடி பிரதிகளுக்கும் மேல் அந்த நூல் விற்றிருக்கிறது.



1982-ல் ‘பிரிட்டிஷ் பேரரசின் கமாண்டர்’ என்ற கௌரவப் பதவி ஹாக்கிங்குக்கு அளிக்கப்பட்டது. 2012, லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்வின் நாயகர் ஹாக்கிங்தான். அவருக்கு அளிக்கப்படாத ஒரே ஒரு கௌரவம் நோபல் பரிசுதான். அதைப் பற்றியும் கனக்கச்சிதமாக ஹாக்கிங் இப்படிச் சொன்னார், “ஆராய்ந்து பார்த்து உறுதிசெய்யப்பட்ட கோட்பாட்டியல் பணிகளுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படு கிறது. நான் எந்த விஷயம் குறித்துக் கோட்பாடுகளை உருவாக்கினேனோ அதை ஆராய்ந்து பார்ப்பது மிக மிகக் கடினம்!”



மனித குலம் நீடிப்பதற்கு விண்வெளி ஆராய்ச்சி மிகவும் முக்கியம் என்றார் ஹாக்கிங். “உலகளாவிய அணுஆயுதப் போர், மரபணுத் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட வைரஸ், இன்னும் நாம் கற்பனையே செய்திராத ஆபத்துகள் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவால் பூமியில் உயிர்வாழ்க்கைத் துடைத்தழிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்று ஹாக்கிங் 2007-ல் கூறினார்.

கடவுளையும் மதத்தையும் பற்றி ஹாக்கிங் கூறியவை பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டன. பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப் பற்றி விளக்குவதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் வெளியில் உள்ள, கடவுள் போன்ற எதன் உதவியையும் நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார் ஹாக்கிங்.

‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஹாக்கிங் இப்படிச் சொன்னார், “மனித மூளையைக் கணினியைப் போலவே நான் கருதுகிறேன். அதன் அங்கங்கள் எல்லாம் வேலையை நிறுத்திக்கொள்ளும் போது அதுவும் (மூளை) வேலையை நிறுத்திக்கொள்ளும். முற்றிலும் பழுதுபட்டு இயக்கம் நின்றுபோன கணினிக்கு சொர்க்கமோ அடுத்த பிறவியோ கிடையாது. சொர்க்கம், அடுத்த பிறவி என்ற கதையெல்லாம் இருட்டைப் பார்த்துப் பயப்படுபவர்களுடையது.’

தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கருந்துளை களையும் பிரபஞ்சப் பேரழிவையும் ஆராய்வதற்காகச் செலவிட்ட ஹாக்கிங்குக்கு இருட்டைப் பார்த்துப் பயம் கிடையாது. அவர் சொன்னார், “கருந்துளைகள் என்ற பெயரை அவற்றுக்கு வைத்திருப்பதற்குக் காரணம், தாங்கள் அழிக்கப்படுவதைக் குறித்தும் ஏதோ ஒன்றால் தாங்கள் விழுங்கப்படுவது குறித்தும் மனிதர்கள் கொண்டிருக்கும் அச்சம்தான். கருந்துளைகளுக்குள் எறியப் படுவது குறித்து எனக்குப் பயமேதும் கிடையாது. அவற்றை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு வகையில் அவற்றின் எஜமானனாக நான் என்னை உணர்கிறேன்!”

நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியே அவர் எழுதிய புத்தகத்தை வாசிப்பது மட்டுமே என நான் நம்புகிறேன்…
வாழ்க ஸ்டீபன் ஹாக்கிங் நாமம்!
 வளர்க அவர் கண்டுபிடித்த அறிவியல் வழி!





x

சனி, 10 மார்ச், 2018

விதியே .. விதியே…


அஸ்வினி பரணி  என்று ஏதோ பெயரில் உள்ள குழந்தைகள் காதலிக்கும் என்பதை இன்றய இளைஞர்கள் நினைப்பதே அருவருப்பான விஷயம்.. அதற்கு மேல் அந்தக் குழந்தைகள் எனக்குத் துரோகம் வேறு செய்துவிட்டதாகக் கூறுகிறான் அந்த மனநோயாளி…

தாலி வேறு கட்டாயமாக அந்தக் குழந்தைக்குக் கட்டியிருக்கிறான்.. அப்போதே இவன் மீது கிரிமினல் குற்றஞ்சாட்டி உள்ளே தள்ளியிருக்க வேண்டும்..

தொலைக்காட்சியில் விவாதத்தில்  ஒரு பெண்மணி சொல்கிறார்... பெண்கள் உடைகளில் கவனமாக இருக்க வேண்டுமாம்… அய்யா அதற்கு பதில் அனைத்து சிறுமிகளும் இளம் பெண்களும் படிக்கக் கூடாது வீட்டில் பூட்டிக் கிடக்க வேண்டும் என்று சொல்லிவிடாமா....?

இதற்குப் பதில்  இப்படிப்பட்ட மனநோய் இளைஞர்கள் வெளியில் நடமாடவே கூடாது என்று சட்டம் போடலாம் என்பேன்..

இந்த ஆண் கூட்டத்திற்கு எந்த மாதிரி கவுன்சலிங் கொடுக்கலாம் என்று அறிஞர்கள் யோசனை செய்து சொன்னால் அதனை அமலாக்கலாம்..

புதன், 7 மார்ச், 2018

சிலைகளை உடைத்தால் ....




சிலைகளை உடைக்கலாம் யார் வேண்டுமானாலும் ....
ஆனால் சித்தாந்தங்களை உடைக்க முடியாது .....
அவைகள் சொன்னவை சொன்னவைகள்தான்.... 
இன்றும் உயிர்ப்புடன் வழிகாட்டும் சித்தாந்தம்.......... 
அதை நடைமுறை படுத்தியத்தில் வந்த கோளாறுக்கு சிலைகளோ சித்தாந்தங்களோ என்ன செய்யும் ......
உடைந்த லெனின் சிலை சொல்லாமல்  சொல்கிறது உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் நிலை இதுதான் என்றா ...?

ஞாயிறு, 4 மார்ச், 2018

திரிபுரம் எரித்த திரிபுரா...


கடந்த   2016  ஆண்டு  நான் சென்னையிலிருந்து தஞ்சைக்கு உழவன் எக்ஸ்பிரசில் பயணித்தேன்.. தேர்தல் அறிக்கப் பட்ட காலம்,..  வழக்கத்துக்கு மாறாக போலீஸ் இருந்ததைப் பார்த்தேன்.. காரணம் புரியவில்லை,, காலையில் தஞ்சையில் இறங்கியதும்தான் தெரிந்து கொண்டேன் .. நானும்  அன்றைய திரிபுரா முதல்வர் மாணிக் சர்காரும் உழவன் எக்ஸ்பிரசில்   பயணித்திருக்கிறோம் என்று…   என் வாழ்க்கையில் ஒரு மாநில முதல்வருடன் சேர்ந்து பயணித்தது அதுதான் முதல் முறை..

அன்று முழுவதும் தோழர் மாணிக் சர்க்கார் தஞ்சைப் பகுதியில் தோழர்கள் புடை சூழ நடந்து வந்து கொண்டேயிருந்தார்.  இன்றய காலகட்டத்தில் இப்படி ஒரு முதல்வரை நாம் பார்ப்பது என்பதே நம்ப முடியாது..

நாம் கக்கனையும் காமராஜரையும் கேள்விப் பட்டிருக்கிறோம்… ஆனால் நேரில் சந்திக்கவில்லை.. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனிதரை   நான் நேரில் காணும் வாய்ப்பை பெற்றேன்..   இவரா  தோற்ப்பார் என்று என்னால் நம்பமுடியவில்லை..   … அவர் கட்சி மண்ணைக் கவ்வியிருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை..  இதன் காரணம் வேறு எங்கும் தேடி அலையவேண்டியதில்லை..

ஜெயகாந்தன் தலைப்பு ஒன்று நிழலாடுகிறது… “ உண்மை சுடும்..“  நாம் இந்த விஷயத்தை காய்தல் உவத்தலின்றி பார்ப்போம்…

திரிபுராவின் களம் என்பதே எளிமையானது  வங்காளிகள் திரிபுராவின் பூர்வக் குடிகள் என்கிற ஒரு டிவைட் தெளிவாகவே உள்ளது..

தோழர்  எச்சூரி அவர்கள் வழக்கமாக EVM மிஷினை குற்றஞ்சாட்டுகிறார்.. அந்தக் கருவிதானே மார்க்சிஸ்ட்டின் வாக்கு சதவிகிதம் பாஜகவைவிட அதிகம் என்கிறது..  அதையும் மறுப்பாரா..?   ஆக அதுவல்ல விஷயம்..

இன்றய தமிழ் இந்துவில் ஒரு செய்தி வந்திருக்கிறது.. மாணிக் சர்க்கார் ஒரு பெங்காலி பற்றாளர். ,ஆட்சி அதிகாரத்தில் பழங்குடியினாருக்கான பங்கை அளிக்காதவர் என்று பாஜக பிரச்சாரம் செய்திருக்கிறது.. அது வலிமையாக அவர்களை சென்றைடைந்திருக்கிறது..

திரிபுரா பழங்குடி  மொழியை வங்காள மார்க்சிஸ்ட் முதல்வர்கள் நிருபன் சக்ரவர்த்தி, தசரததேவ்,மாணிக் சர்க்கார் அழித்தனர் என்கிற குற்றச்சாட்டை திரிபுரா மக்கள் ஏற்றிருக்கிறார் என்பதே உண்மை..

திரிபுரா அரசியல் என்பது மண்ணின்  மைந்தர்களான பழங்குடியினருக்கும் வங்காளிகளுக்கும் இடையிலான போட்டி என்றே உருவாகிவிட்டதை பாஜக நன்கு  பயன் படுத்தியிருக்கிறார்கள்..

பழங்குடியினர் பாஜகவுடன் இணைந்து தோற்கடித்து உள்ளனர்.

திரு ஆழி செந்தில்நாதன் என்கிற சமூக செயற்பாட்டாளர்  தன்னுடைய முகநூலில் சில கருத்துக்களை தெவித்துள்ளார்..  அது எத்தனை காத்திரமான கருத்து என்பதை நீங்களே பார்க்கலாம்..


அவர் கூறுகிறார்,“ ஆனால் பாஜகவுக்கு இது மிகச்சுலபத்தில் கிடைத்த வெற்றி அல்ல. 2010 முதல் வட கிழக்கில் பாஜக தொடர்ச்சியாக செய்துவந்த செயல்பாடுகளின் பலனை இப்போது அது அறுவடை செய்கிறது. திரிபுராவைப் பொறுத்தவரை வங்காளப் பெரும்பான்மையரின் கட்சியான சிபிஎம்முக்கு, முன்பு பழங்குடியினரிடமும் செல்வாக்கு இருந்தது. இப்போது பழங்குடியினர் ஐபிஎஃப்டி வழியாக பாஜகவை ஆதரிக்கிறார்கள். வங்காளிகள் மத்தியிலும் பாஜக பெருவெற்றி பெற்றிருக்கிறது

இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஜாதிகளை வைத்து 'சோஷல் எஞ்சினியரிங்' செய்யும் பாஜக வடகிழக்கில் இனக்குழுக்களை வைத்து அதை செய்துமுடித்திருக்கிறது. இன்றைய பாஜக கூட்டணி வெற்றிக்கு உழைத்தவர்களில் பலர் முன்னாள் "பிரிவினைவாதிகள்" அல்லது வடகிழக்கின் பல்வேறு இனங்களின் தேசியவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் எதிர்கொள்ளும் சவால் வேறொன்று - வங்கத்திலும் திரிபுராவிலும் வங்காள இன மக்களிடம் சிபிஎம் தொடர்ந்து தன் செல்வாக்கை இழந்துவருகிறது. வங்க மக்களிடம் வங்காள தேசிய உணர்வை ஆழப்படுத்தியிருந்தால் இன்று சிபிஎம் மேற்குவங்கத்தையும் திரிபுராவையும் இழந்திருக்காது. (கேரள சிபிஎம் மலையாள தேசிய உணர்வை ஆழமாக நம்பும் கட்சி). வங்காளிகளை இந்துஸ்தானிகளாக நினைத்த சிபிஎம் இப்போது இந்துஸ்தானிகளின் பிரதான கட்சியான பாஜகவுக்கு தனது வாக்குகளை பறிகொடுப்பது தவிர்க்க இயலாத ஒன்று. ..அதற்கு வடகிழக்கின் இனக்குழுக்களின் அரசியலை நன்கு உற்றறிந்து புரிந்துகொள்ளவேண்டும்.“ என்று முடிக்கிறார் திரு ஆழி செந்தில்நாதன்..

இதைவிட சிறப்பான கருத்தாக்கம் இந்தப் பிரச்சனையில் நான் காணமுடியவில்லை…