அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 டிசம்பர், 2017

TTV வெற்றியின் காரணம் ...

தினகரனின் வெற்றி பற்றி பல காரணங்கள் எதிர் கட்சிகள் முதல் அரசியல் விமர்சகர்கள் வரை பல தகவல்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்....

 OPS EPS திமுக தன்  வாக்கை TTV   மாற்றியது  என்று கூக்குரலிடுகிறது ....

 திமுகவோ இருபது ருபாய் என்ற ஹவாலா கதை சொல்கிறது... ராஜ் தீப் சர் தேசாய் மத்திய அரசை எதிர்ப்பவர்கள்  தென்இந்தியர்கள்தான்... இதில்  TTVதான் சரியாக எதிர்ப்பவர் என மக்கள் நினைக்கிறார்கள் என்கிறார் ..

மத்திய அரசு இவரை முன் வைத்து மெகா ரைடுகள் நடத்தியபோது   TTV எந்த எதிர்ப்பும்   செய்யாமல் கோ பூஜை செய்து கொண்டிருந்தார் ...இதுதான் அவர் எதிர்பரசியல் ...

இவை அனைத்தும் என்னால் ஏற்க முடியவில்லை ....நான் நினைப்பது இதுதான் ...

தமிழக அரசியல் பற்றி ஜெயமோகன் ஒருமுறை எழுதியிருந்தார் திமுக என்பது அண்ணா காலத்திலேயே வாக்கு வங்கிக்காக M.G.R-ஐ  நம்பி வளர்ந்த கட்சிதான்...  வெகு காலமாக திமுக இருப்பதால் அதற்கென்றே ஒரு வாக்கு வாங்கி வைத்திருக்கிறது... ஆனால்  திமுக எதிர்ப்பு மற்றும் M.G.R ஆதரவு என்கிற வாக்கு வாங்கி தமிழகத்தில் மிக அதிகம்... அது எந்தப்பக்கம் மாறுகிறதோ பிரிகிறதோ  அதை வைத்துதான் ...இங்கு அ திமுக திமுக ஆட்சிகள் நடக்கிறது ....மேலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வருகின்ற போது  பெரும்பான்மை பெற்று வருவதில்லை என்கிற ரீதியில் எழுதியிருந்தார் ..

அதை நான் ஏற்கிறேன்...

 மேலும் TTVயின் வெற்றி என்பது ஜெ மறைவுக்கு பின் புதிய தலைவரை தேடும் தமிழக மக்கள் மன நிலை என்று நான் பார்க்கிறேன் ....TTVன் வெற்றி என்று நான் பார்க்கவில்லை... மேலும் சில புதிய  இளைஞர்களிடம் தேர்தலுக்கு முன் பேசிக்கொண்டிருந்த பொது அவர்கள் கூறுவது   ''எல்லா பயலும் மோசம் சார்... கமல் வந்தால் நாம் ஓட்டு போடலாம்... அவர் வரலை என்றால் TTVஒரு வாய்ப்பு தரலாமே ..'' என்கிறார்கள் இதை போன்ற விஷயங்கள்தான் மனநிலைதான் ஆர் கே நகர் மக்களை இப்படி வோட்டு போட வைத்திருக்கிறது ....

புதன், 3 பிப்ரவரி, 2016

பழ கருப்பையாவும் கரன்தப்பார் பாண்டேயும்


பழ கருப்பையாவுடனான தந்திடிவி பாண்டேயின் கேள்விக்கு என்ன பதில் பார்த்தேன் சற்று தாமதமாக… அதைப் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் நிறையவே வந்து விட்டது…  பாண்டே அப்படி பேசினார் இப்படி பேசினார்… எதிராளிகளை காயப் படுத்தும்படி பேசுகிறார்.. உடல் மொழியால் அச்சுறுத்துகிறார்…. பழ கருப்பையா எப்படிப்பட்ட சுதந்திர சிந்தனையாளர் அவரைப் போய்… என்றெல்லாம் படிக்க நேர்கிறது…

பாண்டே உண்மையில் தமிழக டிவி உலகில் ஒரு கரன்தப்பாராக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்… அது ஒன்றும் தவறல்ல… மேலும் அப்படி DEVIL’S ADVOCATE ஆக இருப்பதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் பொதுக் கருத்துருவாக்கம் ஏற்பட காரணியாக இருக்கும்… ஆனால் பேட்டியில் பழ கருப்பையாவிடம் பெற வேண்டியதை பாண்டே பெற்றுத் தந்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது….

பழ கருப்பையா நிச்சயமாக ஒரு சிந்தனையாளர், அறிஞர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை…. அதிமுகவில் சேர்ந்ததற்கான ஆயிரம் காரணங்கள் பழ க அடுக்குகிறார்… அவர்  ஏன் சேர்ந்தார் என்பதைப் பற்றிய தெளிவாக ஏற்றுக் கொள்ளும் ஒரு காரணம் சொல்ல இயவில்லை… காரணம் ஜெ யோ அதிமுகவோ இன்று நேற்று வந்த கட்சியல்ல கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கட்சி… ஜெ பற்றித் தெரிந்துதான் அவர் சேர்ந்திருக்க வேண்டும்…. அதனால்தான் இன்று பேட்டியைவிட்டு வெளிநடப்பு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிக்கிறது….


தமிழக அரசியல் நிலை இதுதான் என்பது தெரிகிறது….

செவ்வாய், 12 மே, 2015

அந்த பத்து சதம்.......

தீர்ப்பின் மைய்யக்கருத்தே இதுதான்....
வருவாய்க்கு அதிகமாக ஜெயாவிற்கு ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகை என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது...( ஒரு முதலமைச்சர் தன் 5 ஆண்டு கால ஆட்சியில் கிட்டதட்ட 2.82 கோடி அளவுக்கு தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி என்பது நீதிமன்றத்தின்  வரம்புக்கு அப்பாற்பட்டதா என்பதை விளக்கவில்லை)

அதற்கு நீதி மன்றம் காட்டும் ஆதாரம் ::::
கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின்  வழக்கு ஒன்று
ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்பது இர்ண்டாது  ஜெ க்கு சாதகமாவுள்ளது

ரொம்ப சரி...

இதே கருணை சிறையில் வாடும் மாருதி தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்  மேலும்   வழக்காடினால்  கிடைத்திருக்கும்  தண்டனைக் காடிலும் அதிக ஆண்டுகள் சிறையில் வாடும் 1 லட்ததிற்க்கும் அதிகமான  UNDERTRAILS க்கு  நீதி கிடைக்கவேண்டும்



இதை அரசு செய்யுமா..?
                                                  =============
                                                 காமெடி டயம்

  நேற்று தந்தி டிவியில் பேசிய  பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக வுக்குப்  பேசினாரா இல்லை நடுநிலையாக பேசினாரா என்று பெரும் காமெடி.....

 கடந்த ஆறு மாதம் அரசு செயல்படவில்லை என்கிறார்...   10 சதம் வருமானம் அப்படித்தான் கூட குறைய வரும் என்கிறார் .. திமுக சார்பில் பேசிய அப்பாவு அந்த அக்ரி  கிருஷ்ணமூர்த்தி  மேட்டரே ஒரு  உள் குத்து  அது பண்ருட்டி சாருக்குத் தெரியும் என்ற  போது ,  பேசாமல் சிரிக்கிறார். 

அவர் அதிமுகதானே இருக்கிறார்..?

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஒரே ஒரு கேள்வி........

தாமதமான தீர்ப்புதான்... ஆனால் எந்தவித நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் தீர்பபளித்த நீதியரசர் டிகுன்ஹா பெரும் ஜனநாயகவாதிதான் ... உண்மையில் வணங்கத்தக்கவர்..  

வியாழன், 6 மார்ச், 2014

பத்து அப்துல்கலாம்களும் பதினொரு கேப்டன்களும்

காலையில்தான் பார்த்தேன்... தினமலர் இணையதளத்தில்... ஜெ. கம்யூ கட்சிகள் பேச்சு வார்த்தை தோல்வி என்று...

சில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை  இழுபறியாக சென்று கொண்டிருந்த போதே ஏதோ இருக்கிறது என்பது சாதாரண பார்வையாளர்களான எனக்கே தோன்றியது.. இறுதியில் பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது...

அம்மா நாற்பதும் நமதே என்று தமிழகமெங்கும் சங்கநாதம் செய்து வருகிறார்.. அவருக்கு பல கணக்குகள் இருக்கிறது.. நாளை பிஜேபிக்கு நாம் ஆதரளவளிக்க நேர்ந்தால் மூன்றாம் அணி அமைந்தால் என பல கணக்குகள்.. அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார்..  ஆனால் சில நண்பர்கள் பேசும் போது ”என்ன துணிச்சல் பாருங்க...” ”கூட்டணியை மதிக்க தெரியல..” ”கலைஞர் கிட்ட இருந்தா இப்படி ஆகுமா..” என எத்தனை அங்கலாய்ப்புகள்...

எல்லாம் சரிதான்... ஆனால் தமிழக மககள் ஏகோபித்த ஆதரவு ஜெ.க்கு இருக்கிறதா இல்லையா...? என்ற கேள்விக்கு சரியான விடையை யாரும் தருவதில்லை... கலைஞர் என்ன செய்தாலும் எப்படி பேசினாலும் அவருக்கு
ஆதரவு என்பது நூறு அல்லது தனிப் பெரும்பான்மைக்கு சற்று அருகே என்றுதானே வாக்களிக்கிறார்கள்.. ஆனால் அம்மாவிற்கு...? தோற்றால் சுத்தமாக ஜெயித்தால் பெரும்பான்மைக்கு மேலே படு மிருக பலத்துடன் தானே தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள்...

ஏன் கம்யூனிஸ்டுகள் இத்தனையாண்டு காலம் அரசியல் செய்கிறார்களே.. தமிழகத்தில் ஒரு இரு தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிகிறது (தனியாக நின்றால்)  என்கிற கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லட்டுமே..சரியோ தவறோ ஒரு ஜனநாயக சிஸ்டம் நம்மிடம் இருக்கிறது... அதில் சில குறைபாடுகள் இருக்கிறது...  பத்து அப்துல் கலாம்கள் எடுக்கும் முடிவை பதினொரு கேப்டன்கள் மாற்றலாம் என்பதுதான்.... 

அது ஒரு பெரும் குறைதான்...

அதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும..