ஞாநி மறைவதற்கு முன் YOUTUBEல் ஒரு பதிவேற்றம் செய்திருந்தார் .. அதை பார்க்கும்போது பளிச்சென்று ஒரு விஷயம் சொல்லிருந்தார்.. அது மிக மிக முக்கியமானது என்றே நினைக்கின்றேன்..
தமிழகத்தில் காலூன்ற ஹிந்து ஓட்டுக்களை POLARIZE செய்வது மிக முக்கியம் என்று பாஜக கருதுகிறது .... அதற்கு ஆண்டாள் பிரச்சனை மாட்டியது ... அதை சரியாக பயன் படுத்தினார்கள் ...
தற்போது ஜெயேந்திரர் பிரச்சனை வேறு... அதையும் அவர்கள் பயன் படுத்தலாம் என்றே நடக்கும் நிகழ்வுகள் தோன்றுகிறது ... பொதுவாக சங்கர மடம் மற்றும் இசுலாமிய அடிப்படைவாதிகள் கூட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னிரிமை தருவதில்லை, மாறாக தங்கள் மதமே அவர்களுக்கு பிரதானம் என்று கடந்து போவதே தற்போதைய சூழலில் சரி என்று படுகிறது..
இந்து மதத்திற்கு எதிரான விஷயம் நடக்கிறது என்று சராசரி மனிதனுக்குள் தோன்றினாலே போதும், ''அவர்கள்'' நினைக்கும் அஜெண்டா நிறைவேறிவிடும் ..இது புரிகின்றவர்களுக்கு புரியும் .. .. எது நடக்கவிருக்கிறதோ அது நன்றாக நடக்காமல் தடுக்கும் ..