அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 நவம்பர், 2016

உலகெங்கும் வலதுசாரிப் புயல் ...

வலதுசாரிகள் செல்வாக்கு உலகெங்கும் பட்டொளி வீசிப் பறந்து வருகிறது என்பதை ட்ரம்ப் வெற்றி DRUM அடித்து சொல்கிறது...   

திங்கள், 24 அக்டோபர், 2016

உலக அதிபர் (?) போட்டி...

என்றுமில்லாத வகையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டி விசித்திரமாகச் சென்று கொண்டிருக்கிறது..  ஹிலாரி ட்ரம்ப் போட்டி என்பது   ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே போட்டி என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது..

ஆரம்பத்திலிருந்து ட்ரம்ப் பற்றி வந்த செய்திகள் வினோதமானவை.. முதலில் இந்தியர்களை கேலி செய்து பேசினார்.. முஸ்லிம் மக்களை இருக்க விடமாட்டேன் என்றார்.. தற்போது ஒரு பெண் அதிபரானால் ராணுவம் எப்படி சல்யூட் அடிக்கும் என்கிற படு மோசமான பிற்போக்கு வாதத்தை உதிக்கிறார்...  பொதுவாக அமெரிக்கா ஜனநாயகம் பரந்துபட்ட மக்களுக்கானாது என்றாலும் அவற்றில் தீவிர வலதுசாரி அம்சம் சற்று உறுத்தும்.. அதிலும் அடிப்படை மதவாதக் கருத்துக்கள் அதிகம் என்கிறார்கள்.. மேலும் ட்ரம்பின் வயது 70.. அவர் நிச்சயம் 15 வயதில் மதவாதக் கருத்துக்களுக்கு ஆளானாவர் என்பது அவரின் தற்போதையே பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...  லிங்கன் வழிவந்தவரா இவர் என்கிற எண்ணத் தோன்றுகிறது...
Image result for hillary and trump photos

அமெரிக்கா தன்னுடைய   அதிபரை    ஏறத்தாழ உலக அதிபர் என்கிற நிலையில்தான் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.  உலகெங்கும் கம்யூனிச அரசுகள் மண்ணைக் கவ்வியவுடன் அமெரிக்கா மேலும் அனைவர் மேல் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறது... இந்நிலையில் ட்ரம்ப் போன்ற குடியரசு கட்சியின் வேட்பாளர்களின் பேச்சுக்களின் தொனி சற்று விசித்திரமாகவும் ஆபத்தாகவும்தான் உள்ளது.. ஹிலாரி ஈமெயில்களை அழித்தார் போன்ற புகார்கள் இருந்தாலும்     ட்ரம்பின் எதிர்மறை அம்சத்தாலேயே ஹிலாரி   வெற்றி பெற்றுவிடுவார் போல் உள்ளது.. .

இந்தியாவை பலர் படு பிற்போக்கு நாடு என்றும் மத நம்பிக்கை       பெண்ணடிமைத்தனம் நிறைந்த நாடு என்றுதான் பலர் கூறுகிறார்கள்.. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில்தான் ஒரு பெண் விதவை  - நேரு சாஸ்த்ரிக்குப் பிறகு - சர்வ வல்லமை பொருந்தியவராக பெரிய தலைவராக இருந்திருக்கிறார்.. அதை சராசரி இந்திய மனம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

செவ்வாய், 24 மார்ச், 2015

என்னம்மா... இப்படி பண்றிங்களேம்மா.....

நேற்று (23.3.15) தில்லியில் நடந்த பாகிஸ்தான் குடியரசு விழா நிகழ்ச்சியில் பலர்  கலந்து கொண்டது வெறும் செய்தி அல்ல.. காரணம் அதில் கலந்து கொண்டவர்கள் யார் என்பதில்தான் ஆச்சரியம் இருக்கிறது..

வெள்ளி, 16 மே, 2014

ஊருக்கு நாலு பேர்...

இது சற்று வேடிக்கையாக இருக்கலாம்... ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...எந்த ஒரு பெரிய விஷயமும் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது... அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் பல முக்கிய விஷயங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது..

சனி, 29 மார்ச், 2014

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

செய்தி ஒன்று
////ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என இந்திய பிரதிநிதி தெரிவித்தார். விவாதம் முடிந்தபின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், மொரிஷியஸ் உள்ளிட்ட 23 நாடுகளும், எதிராக சீனா உள்ளிட்ட 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறியது. ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை நிறைவேற்று வதில் இந்தியாவில் உள்ள அரசியல்  கட்சிகளுக்கும் தமிகத்தில் உள்ள கட்சிகளுக்கும் இடையே  இணக்கமோ ஒற்றுமையோ  இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.///
எதிர்த்த நாடுகளில் கம்யூனிச கொள்கை உடைய நாடுகள் உள்ளதாம்... உலகத் தொழிலாளர்களே கண்டு கொள்ளுங்கள்... எந்த நிலையிலும் தங்களுக்கு பாதகம் என்றால் அது என்ன மனித உரிமை மீறலாக இருந்தாலும் அரிச்சந்திரன் கூட  இப்படியெல்லாம் பண்ணுவார்ப்பா....
செய்தி இரண்டு
////மத்திய அரசு நடுநிலையான  முடிவை எடுத்து  இருக்கிறது. இருந் தாலும் 23 நாடுகள், இந்த தீர்மானத்தை  ஆதரித்து இருக்கின்றன. இந்தியாவும் ஆதரித்து இருக்க வேண் டும். ஆனால் வெளியுறவுத் துறை  எடுத்த  முடிவு இது. அமைச்சரகம் இந்த முடிவை எடுக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி பேச நிறைய வாய்ப்புகள், அரங்குகள் உள்ளன. அதனால் நல்ல கருத்தை தொடர்ந்து  வலியுறுத்த வேண்டும். என்று சிதம்பரம் கூறினார்.////
சிதம்பரத்திற்குத் தெரியாத விஷயமா...? அது சரி.. நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும என்கிறாரே சிதம்பரம் அய்யா அவர்கள்.. எது நல்ல விஷயம் எப்படி என்று கொஞ்சம் விளக்கலாம்...
செய்தி மூன்று
///இது குறித்து அமெரிக்க அயலுறவுத் துறைச் செயலர் ஜான் கெர்ரி கூறுகையில், இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும் இதுவே தருணம். இலங்கை அரசு, அந்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கும் என்று நினைத்து, நீதி கிடைப்பதற்காக காத்திருக்க முடியாது. அந்நாட்டில் வாழும் மக்கள், அவர்களது அடிப்படை உரிமையான ஜனநாயகம், நாட்டின் வளத்தையே கேட்கிறார்கள். அதனை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டியது உலக நாடுகளின் கடமையாகிறது. அதற்காகவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாடுபட்டு வருகிறது  //
அமெரிக்காவைப் பற்றி கம்யூனிஸ்டுகளிடம்தான் கேட்க வேண்டும். வண்டி வண்டியாக தகவல் தருகிறார்கள்... இருந்தாலும் அமெரிக்கா தான்தான்  உலக அரங்கில் “நடுநிலையான பெரிய ஆள்தனத்தை” சரியாக காட்டிவிட்டதற்கு பாராட்டலாம்...

தமிழ் உணர்வாளர்கள் கருத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் ஈழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்..

ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது.. எந்த ஒரு உலக நாடுகளும் ஒன்றுக்கொன்று முரண் படும் நிலையில் ,  அம்மக்கள் வாட்டம் போக்கி  அமைதியாகவும் கௌரவமாகவும்  வாழ  வழிவகை செய்யும் எந்த ஒரு திட்டமும் இந்தத் தருணத்தில் உவப்பானதே என்று தோன்றுகிறது.