இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018
கலைஞர் ....

கலைஞரின் வயோதிகமும் நோயும் அவரை துவள வைத்திருப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது
கலைஞரின் உடல் நலிவு பற்றி பலரும் பல விமர்சனங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் சொல்லி விட்டார்கள் ..
முன்பு அசமத்துவத்திற்கு ஆதரவானவர்கள் அவரை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் .. இப்போதும் அவ்வாறே அந்த வகையில் எதிர்க்கிறார்கள்
தற்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு என்று எதிர்ப்பவர்கள் சிலர் உண்டு
தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களிடம் பேதமில்லை என்கிற பார்வையே கொண்டிருந்தார் என்னை பொறுத்த வரை அதுதான் என் மனதில் கோபுரமாக அவரை உயர்த்தி வைத்திருக்கிறது
. தமிழகத்தில் எனக்கு தெரிந்த உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளிடையே இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம் (கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தவிர ..)
அவரிடம் உள்ள ஒரே குறை அவர் ஆட்சியில் இருந்த போது இந்த கொள்கையை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அது அவரின் தவறல்ல என்றாலும்..... அதே சமயம் அவர் குடும்பத்தினரின் அலைக்கழிப்புக்கு ஆளானர் என்பதும் ஒரு சோகமே ..
எப்படி இருந்தும் கலைஞரின் இந்த நலிவு வேதனை அளிக்கிறது
சனி, 3 ஜூன், 2017
கலைஞர் ......
அவர் பெரிய செல்வந்தப் பின்னணி கொண்டவர் இல்லை....
ஜாதி பின்புலம் இல்லை...
ஜாதி கூட்டமும் பின்னால் இல்லை....
இவைகள் தேவை இல்லை என நிரூபித்தவர் ...
மெத்தபடித்தவர் இல்லை....
இத்தனை இல்லைகள் இருந்தாலும் தமிழகம் மட்டும் இல்லாமலும்
இந்திய தேசம் முழுவதும் இவருக்கு இணையான இவர் அளவு உயர்ந்த பெரும் அரசியல்வாதி எவரும் இல்லை ........
இவர் ஒருவரே எந்த பின்புலமும் தேவை இல்லை உன் ஆற்றல் ஒன்றே நம்பி முன்னேறலாம் என்பற்கான வாழும் உதாரணம் .....
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதை புறந்தள்ளி வளர்ந்த பெரும் தலைவர்.....
EMERGENCY காலத்தில் ஜனநாயகத்தை காக்க நின்ற ஒரே அரசியல் தலைவர்......
ஒரு சாதாரண மனிதனுக்காக எழுதப்பட்ட குறளோவியம் ஒன்றே போதும் படிக்க படிக்க இன்பம் தரும் ...
கலைஞர் வாழ்க
செவ்வாய், 7 ஏப்ரல், 2015
ராமானுஜ கலைஞர்
நேற்று புதிய தலைமுறையில் கலைஞர் வசனம் எழுதப் போகும் ராமானுஜர் நாடகம் பற்றிய சர்ச்சை நேர்பட பேசு நிகழ்ச்சியில் காண நேரிட்டது...
கலந்து கொண்ட அனைவரும் மிகச் சரியாக sober ஆகப் பேசியதாகத்தான் தோன்றியது... பிராமண சங்க நிர்வாகி பேசியதுகூட அவர் கோணத்தில் நியாயமாகத்தான் தோன்றியது...
பேசியதில் பத்ரி சேஷாத்ரி பேசியது ரசிக்கும்படி இருந்தது... சிறப்பான நிகழ்ச்சி..
கமல் தசாவதாரத்தில் காட்டியது போல பெரும் எதிர்ப்பின் எதிர் நீச்சல் அடித்தவர் ராமானுஜர்... சாதி பாகுபாட்டை அன்றே எதிர் கொண்டு அனைவருக்கும் பிரம்ம ரகஸ்யம் தெரியட்டும் என்றவர்... வைணவமும் தமிழும் மிக நெருக்கமானது... (சுஜாதா இதைப் பற்றி பல விஷயங்கள் எழுதியுள்ளார்)
இருப்பினும் தோழர் அருணன் கூறியது போல ” இத்தனை காலம் பேசாமல் இருந்து விட்டு தற்போது எழுத வேண்டியதில் சில காரணங்கள் இருக்கிறது...” என்றார்..
மிகச் சரி...அதுதான் யோசிக்க வேண்டிய விஷயமே தவிர மற்றபடி அவர் எதைப் பற்றி எழுதுவதற்கு தகுதி உடையவர்தான்... நாடகம் வந்த பிறகுதான் அதைப் பற்றி விமர்சனம் செய்ய முடியும்.......
புதன், 23 ஜூலை, 2014
உறுத்தல்கள்....
நீதியரசர் கட்ஜு அவர்கள் சமீபத்தில் தன் முகநூலில் சில தமிழர்கள் கேட்டுக் கொண்டதால் தன்னுடைய சென்னை உயர் நீதிமன்ற அனுபவங்களை எழுதினேன் என்கிறார்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
