எனது 30 வயதில் நாத்திகனாகத்தான் இருந்தேன்.. இறை என்பதே ஒரு ஏமாற்று வேலை என்றுதான் நினைத்திருந்தேன்.. 20 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரேயடியாக சொல்ல முடியுமா என்று தோன்றுகிறது.. சில விஷயங்களுக்கு பதில் இல்லை என்பதுதான் அதற்கு காரணம்
எங்கோ படித்த ஞாபகம்.. கடவுள் உண்டு என்பதற்கும் ஆதாரம் இல்லை - இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை என்று…
அது ஒரு புறம் இருக்கட்டும்…. ஆனால் இத்தனை பெரிய விஷயத்தை சாதாரணமாக ஒரு சீன படைப்பாளி ஆங்கில திரைப் படத்தில் - நமது ஆன்மாவை தொடும் அதிசயத்தை ஒரு காட்சியில் காட்டுகிறார்
… உங்கள் அனைவருக்கும் தெரிந்த திரைப்படம்தான்… பலர் இதற்கு விமர்சனம் எழுதி அலுத்திருக்கலாம்
.....“THE LIFE OF PI” என்கிற ஆங்கிலப் படம்… MOVIES NOW, HBO, STAR MOVIES போன்ற சாட்டிலைட் டிவியில் எத்தனை முறைகள் போட்டாலும் பார்க்கத் தோன்றுகிறது......மக்களால் மீண்டும் மீண்டும் விரும்பப்படுகிறது ... ஒரு சீனர் இயக்கிய ஆங்கிலப் படம்.. .நடித்தவர்கள் பெரும்பான்மை இந்திய நடிகர்கள் என்பது அதன் தனிச் சிறப்பில் ஒன்று .. தொடங்குவதும் நமது தமிழ்க் கலாச்சாரத்திலிருந்து என்பது எத்தனை அழகு.... அந்த படமும் அதன் கதையும் அனைவர்க்கும் தெரிந்தது தான் .. விபத்து நடந்த கப்பலிருந்து தப்பி ஒரு படகில் , பயங்கரமான வங்கப்புலியுடன் 227 நாட்கள் பசிபிக் கடலில் பயணித்து கரையடைவதுதான் கதை .. மருத்துவ மனையில் படுத்திருக்கும் PISCINE PATEL என்கிற பையை (கதாநாயகன்) வந்து பார்க்கும் அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்களை போல் அந்த கதையை நம்மாலும் நம்ப முடியவில்லை .. "நம்பும்படியாக சொல்லுங்கள்..."' என்று அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்கள் கேட்கிறார்கள் .. அவர்களுக்காக மிருகங்களுக்கு பதிலாக மனிதர்கள் என்று அதே கதையை மாற்றி சொல்கிறான் பை ..
இறுதி காட்சியில் அவனுடைய கதையை கேட்க வந்த அந்த நாத்திகரான வெள்ளைக்கார எழுத்தாளரிடம் பை சொல்கிறான் "நான் உங்களிடம் இரண்டு கதை சொன்னேன் அதில் எதை தேர்வு செய்கிறீர்கள்...'" என்கிறான் ..அவர் அந்த வங்கப்புலியுடன் படகில் 227 நாட்கள் பயணித்த இந்த "பை'" யின் கதை என்கிறார்... அதற்கு "பை'" அப்போது "அந்த கதை கடவுளுக்கு நெருக்கமானது..." என்கிறான்..
அந்த நாத்திக எழுத்தாளர் சற்று கண்ணை மூடி யோசிக்கிறார் . அந்தக் காட்சி ... அந்தக் காட்சி ....LOVELY என்று கத்த தோன்றுகிறது ....அந்த சில நிமிடம் என் உடலில் பல வோல்ட் மின்சாரம் பாய்வதாக உணர்தேன்... கடவுள் உண்டோ இல்லையோ ஆனால் நம்மால் நம்ம முடியாத விஷயங்கள் நடக்கும் பொது தெய்வாதீனம் என்றுதான் கடக்க நேரிடுகிறது ..
அந்த உணர்வை ஒரு படத்தில் ஒரு காட்சியில் உணர்த்திய அந்த ஆங் லீ என்கிற சீன இயக்குனரை வணங்கதோன்றுகிறது..