ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 மார்ச், 2017

பின் தொடரும் நிகழ்வின் குரல்கள் ...

எனது இளம் பருவக் கோளாறின் வயதில் பொது உடமை பூதம் என்னை ஆட்டிப்படைத்து .. அப்போது பெரியார் திடலில் ஆந்திர புரட்சிகர பாடகர் கத்தர் நிகழ்ச்சி நடைபெற்றது ..  தெலுங்கில் அவர் பல பாடல் பாடினார் .... அனைவரும் கைதட்டினர் .. CPI CPM  உள்ளிட்ட பல முற்போக்கு தோழர்கள் வந்திருந்தார்கள்.. தற்போது வந்த செய்தி இது 
    http://www.hindustantimes.com/india-news/maoist-idealogue-singer-gaddar-turns-to-spirituality-politics/story-izo2KYCq1ebyr8btHPCIqI.html


அவர் வேதம் படிக்கச்சொல்கிறார் ஆங்கிலம் படிக்கச்சொல்கிறார் ...மழை வேண்டி கோவில் கோவிலாக செல்கிறார் முற்றிலும் ஆன்மீகவாதியாக மாறியே விட்டார்...  எனக்கு ஜெயமோகன் தான் நினைவுக்கு வருகிறார் அவரின் பின் தொடரும் நிழலின் குரலில் நாயகன் அருணாச்சலம் நினைவுக்கு வருகிறார். ஜெயமோகனை பலர் விமர்சனம் செய்வதை விட வசை பாடுவதே அதிகம் அவர் சில சமயம் உண்மையை போட்டு உடைப்பதால் கூட இருக்கலாம் 

ம்ம்ம் ...
என்னத்தை சொல்ல ...

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

டிரைலாஜி (TRILOGY)...

பணியிடம் மாற்றத்தால் எதையும் எழுத முடியவில்லை.. ஆனால் பார்க்க முடிந்தது..  குறிப்பாக புரட்சி என்றால் என்ன  போராட்டம் என்றால் எப்படி இருக்கும் ....?  ஜல்லிக்கட்டுக்காக   மாணவர்கள் இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஒரு மிகப் பெரிய படிப்பினை...

எத்தனை பெரிய போராட்டத்திலும் இப்படிப்பட்ட ஒழுங்கு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.. கடந்த வருடம் மத்திய அரசு வெறும் அனுமதி வழங்கிய போதே நான் இப்படி எழுதியிருந்தேன்::-
ஆனால் அந்தப் பதிவு காய்வதற்குள் மீண்டும் தடை வந்தது.. தற்போது அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.., மக்களின் கோபம் ஏன் என்பதைற்கு பல காரணங்கள் இருக்கிறது

1) கர்நாடகாவின் தண்ணீர் திறப்புக்கு முட்டுக்கட்டை மற்றும் தமிழர்கள் மீதான் தாக்குதல்
2) அரசியல் வாதிகள் சூது, ஊழல், மக்களின் பிரச்சனை மீதான்  மெத்தனம்
3) தமிழக மக்களின்  உண்மையான அபிலாஷைகளை பிரதிபலிக்காமல் வெற்றுக் கூச்சலிடும் சுயநலம் பிடித்த அனைத்து அரசியல் கட்சிகள்
4) நமது அமைப்புகளின் தடித்தனங்கள்

போன்றவை மக்களை கொதிப்படைய செய்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரிகிறது..

ஆனால் மத்திய அரசு அரசாணையை ஏற்றுக் கொண்டவுடன் அப்போதே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.. வழமையான நம்பிக்கையின்மை தலைமையின்மை ஆகிவற்றாலும் போராட்டத்தில் கலந்து கொண்டு அதிருப்தி கொண்ட ‘சிறு குழுக்கள்’ உட்புகுந்து தங்களின் அஜெண்டாவை உட்புகுத்தியதாலும் போலீஸ் தங்கள் வழக்கமான முகத்தைக் காட்டியது... அது ஒரு சோக முடிவு எனலாம்
                                                    +++++++
நான் சமீபத்தில் படித்த ஒரு அற்புதப் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல்.. அப்பப்பா... இத்தனை நாட்கள் இதை வாசிக்காமல் இருந்திருக்கிறேனே என்கிற குற்றவுணர்வுதான் மேலோங்கியது.. பொதுவாக ஜெமோவின் பெரும்பான்மை  படைப்புகள் படித்திருக்கிறேன்.. தினந்தோறம் அவர் வலைத்தளத்தை படிப்பதையே ஒரு கடமையாக செய்து வருகின்றேன்.. ஆனால் அந்த அற்புதப் படைப்பை ஏன் விட்டிருக்கிறேன்..
ஒரு நாவல் என் மனதைப் போட்டு பாடாய்ப் படுத்தும் என்பது ரொம்ப நாட்களுக்குப் பின் தற்போதுதான் பார்க்கிறேன்.. காரணம் எனது முப்பது வயதுகளில் கல்கத்தா நகர் வீதிகளில் UP UP SOCIALISM DOWN DOWN CAPITALISM என்று கத்திக் கொண்டு சென்றவன்தான்... சோவியத் வீழ்ச்சி பற்றி உலகில் சிறப்பான படைப்புகள் வந்திருக்கலாம்.. ஆனால் இந்தப் படைப்பு அதற்கு சற்றும் குறைவில்லாத படைப்பு... என் தொழிற்சங்கப் பணியில் அருணாச்சலம் அளவிற்கு அனுபவம் இல்லைதான்.. ஆனால் ஒரு 5 சதவிகிதம் அனுபவம் இருப்பதால் இது ஒரு ஆன்மாவைத் தொடும் படைப்பு.,, எனது கேள்விகளுக்கு இந்தப் படைப்பு பதில் கூறிகொண்டே செல்வதைக் கண்டு பிரம்மிப்பாக படித்து முடித்தேன்.. மீண்டும் சுவைக்கப் போகிறேன்...
(ஆனால் மார்க்சீய அறிமுகமில்லாதவல்கள், தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்கள், சோவியத் பற்றி அறிமுகமில்லாதவர்கள், படுபிற்போக்கு மதவாத முதலாளித்துவ மனம் கொண்டவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத படைப்பு இது)
                                                     •••••••••••••
க சீ சிவகுமார்... 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரையில் பார்த்தேன்.. முற்போக்கு கலை இலக்கிய அமைப்பில் இருந்தவர்.. அவருடன் பேசிக்       கொண்டிருக்கும் போது அவரின் விஷயஞானத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.. பல நாட்கள் சென்னையில் பார்க்கும் போது அவர் படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறேன்.. வசீகரிக்கும் அவர் எழுத்து நடை எப்போதும் படிக்காமல் விடாது.. அன்னாரின் அகால மரணம் பேரதிர்ச்சிதான்...எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

வாசந்தியும் ஜெயமோகனும்....

வாழ்க்கை எந்தளவு சிக்கலாகவும் சிடுக்குகள் நிறைந்தும்  சுவாரஸ்யமாகவும் இருக்கிறதோ அதே அளவு  இலக்கியங்களும் படைப்பாளிகளும் இருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது..

புதன், 30 ஜூலை, 2014

பக்தி மார்க்கம்...

இந்த அனுபவத்தை எழுதலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தளத்தில் வந்திருந்த இமயச் சாரல் -1  என்கிற கட்டுரையைப் படித்தவுடன் உடனே எழுதுகிறேன்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இந்திய ஜனநாயகம் தலைசிறந்ததே...

ஆயிரமாயிரம் ஊழல்கள்தான்....
பதவிச் சண்டைகள்தான்...
எத்தனை இருந்தாலும் இந்திய ஜனநாயகம் தலை சிறந்தது என்பதையே ராஜீவ் கொலைக் கைதிகளின் தூக்கு ரத்தின் மூலம் நிரூபித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. உன்னதமான சர்வாதிகாரத்தைக் காட்டிலும் பல்வேறு சிக்கல்கள் கொண்ட இந்திய ஜனநாயகமே சிறந்த வழிமுறை என்பது இதன் மூலம் தெரிகிறது... தமிழக மக்கள்  தொடர்ந்த போராட்டத்தையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும.. 

மக்கள் தங்கள் தேவைக்காக இந்த அமைப்பில் தொடர் போராட்டத்தின் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்பதும் மக்களுக்கான சரியான அமைப்பாக இந்திய ஜனநாயகம் உள்ளது என்பதும் இதன் மூலம் தெரிகிறது...

சமீபத்தில் ஜெயமோகன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதன் சுட்டி http://www.jeyamohan.in/?p=43411
என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கிய கட்டுரை.. அது தற்போது எத்தனை பொருத்தமாக இருக்கிறது.....

வாழ்க இந்திய ஜனநாயகம்...

சனி, 21 டிசம்பர், 2013

ஜெயமோகன் சொல்வது சரிதானோ?

தூதரக அதிகாரி தேவ்யானி விவகாரம் பற்றிய பரபரப்பு காட்சி ஊடகங்கள் வலையுலகம் என்று பெரும் சுற்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நான் என்ன சொல்கிறேன் என்று சிலர் (சிலராவது) கேட்கிறார்கள். 

அய்யா... எனக்கு கருத்து சொல்லும் அளவிற்கு தகுதி இல்லாவிட்டாலும் சில நேரங்களில் சில கருத்துக்கள் தோன்றத்தான் செய்கின்றன.

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஜெமோவின் எழுத்துரு

இந்துவில் ஜெமோ தமிழ் எழுத்துரு பற்றி எழுதினாலும் எழுதினார்  அவர் கருத்துக்கு கண்டனம் குவிந்த வண்ணம் இருக்கின்றன..  எங்கு திரும்பியும் கடும் கண்டனக் கணைகள்...