அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கலகலத்து போகும் காங்கிரஸ் ..


சமீபத்தில் சில காங்கிரஸ் அறிவுஜீவிகள் IITஇல் படித்த ஜெயராம் ரமேஷ், தலைசிறந்த சட்ட மேதை அபிஷேக் மனு சிங்கவி, UN பதவிக்கு போட்டியிட்ட சசி தரூர் ஆகியோர்  "பிஜேபியை மடத்தனமாக காங்கிரஸ்காரர்கள் demonize செய்யக்கூடாது.." என்று கருத்து சொல்லுகிறார்கள்.. 

 அதை எதிர்த்து தமிழ் நாட்டு கே எஸ் அழகிரி 4 பக்க அறிக்கை விட்டுஇருக்கிறார் .. அதில் மேற்கண்ட அறிவுஜீவிகள் காங்கிரஸ் விட்டு ஓடுங்கள் என்று வேறு சொல்லி இருக்கிறார்..  நேற்று ஒரு tv  டிபேட்டில் கலந்துகொண்ட விஜயதரணி MLA                        ''காங்கிரஸில் யார் என்ன சொல்கிறார்கள் என்று தெரியல.... நாங்கள் யார் பக்கம் பேசணும்ன்னு தெரியாம இந்த டிபெட்டுல கலந்துகொள்ள வேண்டியிருக்கு ..'' என்று  புலம்புபிய போது, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை ... 

இப்படி ஒவ்வொரு பக்கமும் ஒருவர் இழுப்பதால் கட்சியே கலகலத்து போயிருக்கிறது .. 

 இதை இப்படி சொல்லலாம் பிஜேபி இந்துக்கள் ஒருங்கிணைப்பு என்று மக்களை  POLARIZE செய்கிறது திமுக திராவிடம் என்றும் கம்ம்யூனிஸ்ட் தோழர் என்றும் மக்களை POLARIZE செய்கிறார்கள்..

 ஆனால் காங்கிரஸுக்கு எதை வைத்து மக்களை தன்பக்கம் இழுப்பது என்ற ஒரு சித்தாந்த போண்டித்தனம் உள்ளது ..

இதுவே காங்கிரஸ் நம் முன் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுகிறது என்பதே என் கருத்து

புதன், 24 ஜூலை, 2019

இது உலக மகா விசித்திரம்..

என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஓட்டுக்கு விடப்பட்டது.. இது ஓட்டுக்கு விடப்பட்டதற்கு காரணம் ஓவெசி AIMIN கட்சியின் தலைவர்.. 

 இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று சண்டமாருதம் செய்கிறது திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..

 திமுக சொல்லும் காரணம் இதுதான்…

 ‘’ சிறுபான்மை மக்களின் மீது இச்சட்டம் தவறாக  பயன்படுத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை காணவேண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு  திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை யென்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை.’’

கம்யூனிஸ்டுக்கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்தார்கள்…  அதைப்போல ஓட்டுக்கு வந்தபோது அதை எதிர்த்தும் வாக்களித்தார்கள் ..

ஆனால் இத்தனை காரணங்கள் சொல்லி இதனால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஆதரித்து ஓட்டளிக்கிறார்கள்  திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..


இது உலக மகா விசித்திரம்..

புதன், 29 மே, 2019

( பாகம் 2) - .தேர்தலும் படிப்பினைகளும்..


சென்ற பாகத்தில் சில கருத்துக்கள் பற்றிப் பார்த்துவிடுவோம்:

 “பிராமணர்கள்  இப்போதுதான் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று திராடவிடர்கள் பிரச்சாரம் செய்தார்களா ‘’ என்ற கேள்வியை சில அன்பர்கள் கேட்டார்கள்…  

இது தற்போது செய்யப்பட்ட பிரச்சாரம் இல்லை.. மாறாக பல ஆண்டுகளாய் நடக்கும் விஷயம் …. இது காலம் காலமாக திராவிட கட்சிகள் தமிழக பெரும்பகுதி B.C. உழைக்கும்   மக்களுக்கு கூறிவருவது…    பெரும்பகுதி B.C. உழைக்கும் மக்களை ஆக்கிரமித்துள்ள சிந்தனை….  இதுவே திராவிட கட்சிகளின் உயிர்நாடியாக உள்ளது...  தமிழகம் கேரளம் தென்னிந்தியாவில் வாழும் உழைக்கும் மக்கள் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில்  காட்டும் அதீத முனைப்பையே இது … வட இந்தியர்களை விட ….. யாரினும் மேலாக….

சரி இப்போது பிரதான கேள்விகளுக்கு வருவோம்..
பி யில் பிஜேபி 50%சதம் மேல் வாங்கி (MAHA GADBANTHAN)  மகா கூட்டணியை  வீழ்த்தியுள்ளதுஇந்தச் செய்தி கூறுவது என்ன ? எப்படி தமிழக மக்களை திராவிடக்கட்சிகள் ஒரு கேள்விக்குள் வைத்திருந்தோ….  அதே போல் வேறு ஒரு  கேள்வியை இந்தி பேசும் வட நாட்டு மக்களிடம் பிஜேபி மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர்ச்சியாக வைத்தன…

நாம் ஹிந்து .. நமது கலையை கலாச்சாரத்தை பண்பாட்டை சிறுபான்மை மதங்களும் அதனை ஆதரிக்கும் கட்சிகளும் சீரழிக்கின்றன….. இந்த ஒரு பிரச்சாரம் பல வழிகளில் வகைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாய் மௌனமாக நடந்து வர வர அம்மக்கள் முழுமையாக இந்த பிரச்சாரத்திற்குள் சென்று விட்டதையே பிஜேபி வெற்றி நமக்கு எடுத்துக்காட்டுகிறது… இந்த சிந்தையிலிருந்து அம்மக்கள் பிஜேபி நினைத்தாலும் வெளியே வருவார்களா என்பது தெரியவில்லை..

இது ஒரு புறம் இருக்க,  இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை பார்க்கலாம்..  இதற்கு விடை ஆம் இல்லை என்று இரண்டும் சொல்ல வேண்டும்..

சாதாரண கூலி வேலை செய்யும் வட இந்திய உதிரி முஸ்லீம் மக்கள்தான் இவர்கள் மதத்தை அழிகிறார்களா என்றால்.. கேலிக்கூத்து பெரும் கேலிக்கூத்து என்று கத்த வேண்டும் போலுள்ளது….

அதே சமயம் உலகெங்கும் வஹ்ஹாபியர்கள் அச்சுறுத்தல் இருக்கிறது இல்லையா என்றால், ஆமாம் இருக்கிறது என்ற உண்மையும் சொல்லவேண்டும்.. இங்குதான் பிஜேபி அல்லாத கட்சிகள் தடுமாறுகின்றன… எங்கே இதை சொன்னால் நமக்கு சிறுபான்மை ஓட்டுக்கள் சிதறிவிடுமோ என்று அஞ்சுகிறது… வடநாட்டு இந்து மனப்பான்மைதான் ராகுலை மண்ணைக் கவ்வ வைத்தது…  சிறுபான்மையினரை பகைக்கக்கூடாது என்ற எண்ணம்,  வஹ்ஹாபிய அச்சுறுத்தலை சினிமாவாக நிழலில் பேசிய கமல், தேர்தல் சமயத்தில் இந்து தீவிரவாதம் என நிஜத்தில்  பேச வைத்தது..

ஒரு புறம் புல்வாமா தாக்குதல்  கொடுமை நடந்து முடிந்த உடன் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் சர்ச்சில் நடந்த கொடுமையை    எந்த கட்சியும் (பிஜேபி தவிர)  பேச  மறுக்கின்றன .. 
  

இந்தத் தடுமாற்றம் இந்த கட்சிகளுக்கு தீரும் வரை பிஜேபியின் காட்டில் மழைதான்

அதை போல உழைக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வரை  தாமரை தமிழகத்தில் மலருவதும் கடினம்தான்..


ஞாயிறு, 26 மே, 2019

தேர்தலும் படிப்பினைகளும் ( பாகம் 1).


பிஜேபியின் இரண்டாம் ஆட்டம் பல முற்போக்கர்களை வியப்படைய வைத்துள்ளது … அதிர்ச்சிக்கும்   உள்ளாகியிருக்கிறார்கள் .

தேர்தலுக்கு முன் அடியேன் பிஜேபி  200+ என்றும்     காங்  150+ என்றும் கூறியிருந்தேன்..    இதை சில பிஜேபி -எதிர்ப்பு நண்பர்கள் அடியேன் கூற்றை ஏற்கவில்லை..


  ஆனால் தேர்தலுக்கு  முன்னரே எனக்கு ஒரு உறுத்தல் இருந்தது.. ஏனோ பிஜேபிக்கு எதிராக வட இந்தியர்கள் இருப்பதை அடியேனின் மனம் எந்த நிமிடத்திலும் உணரவில்லை …   அதே சமயம் பிஜேபி குறைந்த MPகளுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பினேன் …  

ராஜிவ் காலத்தில் போபோர்ஸ் பிரச்னையின் போது இந்திய முழுவதும் ஒரு எதிர்ப்பு இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது…  ஆனால் இந்த முறை மோடிக்கு எதிராக இந்தியர்கள் அதிலும் குறிப்பாக வட இந்தியர்கள் இல்லை என்று உணர முடிந்தது ..ஆனால் GST பணமதிப்பிழப்பு  போன்றவற்றால் மோடிக்கு   ANTI-INCUMBENCY இருக்கும் என எண்ணினேன்…  அதனால்தான் இந்த முறை மோடிக்கு 200+ என்று எழுதினேன்.. அதன் பலன்களாக காங்கிற்கு 150+ என்று வரும் என்று கணித்தேன்..

 தேர்தலுக்கு பின் சில விஷயங்கள்  புலனாகிறது..


ஒரு முழக்கத்திக்கு ஆதரவாக ஒரு கட்சி கட்டப்பட்டால் அது நிச்சயம் எடுபடுகிறது.. அதுவே அந்த முழக்கம் நிலவும் சூழலுக்கு எதிராக இருந்தால் அதை மக்கள் நிராகரிக்கிறார்கள் பிஜேபியின் இந்து முழக்கம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..


தனிநபர் துதியை வைத்து கட்டப்பட்ட கட்சிகள் MGR, ஜெ யின் அதிமுக..


 காங்கிரஸுக்கும் இந்தப் பிரச்சனை  உள்ளது ராஜிவ் அதன்  பிறகு சோனியா அதன்  பிறகு ராகுல் பிரியங்கா என்று தனிநபர் முன்னிலை படுத்தும் கட்சியாகி விட்டது…. இந்தியாவில் பெரும்பாலும் அவ்வாறான கட்சிகள்தான் உள்ளன.. ஆந்திராவின் மாநிலக் கட்சிகள் மொழியை முழக்கமாக வைத்திருக்கும் கட்சிகள் ஆகும். அங்கு பிஜேபி காங் எடுபடவில்லை,, YSR கட்சி நம்ம ஊர் தமிழ்மாநில மூப்பனார் போல் வந்துள்ளது. 


கம்யூ கட்சிகள் திட்டவட்டமான கொள்கைகள் உடைய கட்சியாகும்.. வரையறை செய்யப்பட்ட கொள்கையின் கீழ்கட்டப்பட்ட கட்சியாகும்


 ஆனால் உலகெங்கும் வலது சாரி அலை வீசும் காலகட்டத்தில் அவர்களால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை .. தமிழக நிலையுடன் நாம் ஒப்பிட்டால்  இந்த விஷயம் எத்தனை வீரியமானது என்று புரியும்..


 தமிழக மண் என்பது பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இடம்….    குறிப்பாக 97% சதம் எனலாம்… இந்த மண்ணில்தான் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரம்  கடுமையாக எடுபட்டது…. அதற்கு ஆயிரம்  காரணங்களை திராவிட ஆதரவாளர்கள் அடுக்கினாலும்,அடியேன் புரிந்து கொள்வது இதுதான்..




 பார்ப்பனர்கள் முன்னேறிவிட்டனர்நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்  எங்களை ஆதரிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களால் முன்னேற முடியாது என்கிற  பிரச்சாரத்தை திராவிட  இயக்கம் வலுவாக   எடுக்க  அதை பெரும்பான்மை  மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்…..


  பிராமணர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒதுக்கீட்டை எடுத்துவிடுவார்கள் என்கிற தீவிர பிரச்சாரம் பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களிடம் எடுபட்டது... ஆனால் பிராமணரல்லா பெரும் பகுதி மக்களின் இந்த உணர்வு நிலை ஒரளவு உண்மையும் கூட..

இந்த அச்ச உணர்வு தொடர்ச்சியாக பிராமணர் அல்லாத மக்களை திராவிட கட்சிகளை நோக்கித் தள்ளின.

இதுதானே தவிர தமிழக மக்கள் பிராமணர்களுக்கும் இந்துக் கடவுளர்களுக்கும் எதிரானவர்கள் என்பது பச்சைப் பொய்.  இது உண்மையாக இருந்தால் இங்கே பிராமணர்கள் அவர்கள் கௌரவத்துடன் வாழமுடியாது.  இந்துக் கடவுளர்களின் பெரும்பான்மை கோவில்கள் தமிழகத்தில்தான் உள்ளது.  இந்தியாவிலே அதிக அளவு பக்திமான் இங்குதானோ என்று வியக்கும் வண்ணம் நேர்த்திக்கடன்கள் வேண்டுதல் கூட்டங்கள் திருவிழாக் காலங்களில் அலைமோதுகிறது.  


இந்த ஒற்றைப் புள்ளிதான் தமிழக மக்களின் முழக்கமே தவிர இது நாத்திக பூமி என்பதை அடியேனால் துளியும் ஏற்க இயலவில்லை.   அதி தீவிர திராவிடர்கள் இதற்கு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் வியக்யானம் செய்து கொண்டுவருவார்கள்.


இவ்வித அதி தீவிர திராவிடர்கள் உண்மையில் வெகு சொற்ப சதவிகித்தினர்தான்.

இந்த அதி தீவிர திராவிடர்கள் சொல்வது பற்றியும் இந்தியாவின் பிஜேபியின் இந்து polarization பற்றியும் முஸ்லிம் வஹ்ஹாபியர்கள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்   

வியாழன், 23 மே, 2019

ம நீ ம...

ம நீ ம...

 ஒரு ஆச்சர்யம் ......தேர்தல் முடிவுகளே ஒரு ஆச்சர்யம்தான்.....

 இருந்தாலும் ....மக்கள் நீதி மையம்  -அவர் தலைவர் போல் கிராமங்களில் ஓடவில்லை ...ஆனால் நகரத்தில் நன்றாக ஓட்டுவேட்டை ஆடி மூன்றாம் இடம் வந்துள்ளார்கள்...

 உண்மையில் வருங்காலத்தில் நகரங்களில் ம நீ ம ஒரு தவிர்க்கமுடியாத சக்திதான் ....

திங்கள், 20 மே, 2019

கருத்துக்கணிப்பு....

எல்லோரும் கருத்துக்கணிப்பு சொல்லிவிட்டார்கள்...
அடியேன் மட்டும் சொல்லாமல் விட விரும்பவில்லை ....

பல ஆண்டுகளாய் அரசியலை பார்த்து வருவதாலும், காய்தல் உவத்தல் இன்றி பேச வேண்டும் என்பதாலும்  , என் சிற்றறிவுக்கு எட்டிய வரை :-

பிஜேபி  200+ என்றும்
காங்கிரஸ் 150+என்றும்
கணிக்கிறேன்..

 இது சரி என்றால் அடியேன் சிறந்த கணிப்பளான் என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக்கொள்கிறேன்...

 தவறென்றால் ....

அடியேன் இன்னும் அரசியலை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன் 

புதன், 5 செப்டம்பர், 2018

அறிவுள்ள பெண்...

  விமான நிலயத்தில்  இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறைமை அதாவது புரோட்டோகால் இருக்கிறது . அதை மீறுவது சரியில்லை என்பது என்னைப் பொறுத்த வரை சரியானதே.

 ஆனால் அதற்கான எதிர்வினை அந்தப் பெண் செய்த செயலைக் காட்டிலும் மோசமானதாகவே படுகிறது.  தமிழக முதல்வரை  சில மாதம் முன்பு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லத் தகாத வார்த்தை சொன்னார்.

 எஸ் வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை அவமதித்தார் என்று வழக்கும் பதியப் பட்டது.

 ஆனால் காவல்துறை என்ன செய்தது என்பது அனைவரும் அறிந்தததே.   இவ்வாறு நடப்பதுதான் உண்மையில் நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு அச்சறுத்தல் என கருதுகிறேன்.

தன்னை நோக்கி சிறு முனகல் கூட தேச விரோதம் என்பேன் அதே சமயம் நான் என்ன அத்துமீறல் செய்தாலும் அது நாட்டுக்கு நல்லது என்கிற மனோபாவம்  பெரும் ஆபத்தானது.  இதுதான் பெரும் கவலையளிக்கின்ற அச்சுறுத்தல்.

வியாழன், 31 மே, 2018

என்னை நினைச்சு நானும் சிரிச்சேன்....

அடாடா என்ன ஆக்ரோஷம்... சமூக விரோதிகளைக் கண்டு..  நமக்கும்தான் ஆக்ரோஷம் வருகிறது...

 ''சும்மா  போராட்டம் போராட்டம்னு கம்பு சுத்தாதிங்கய்யா...''

''சரிங்க எசமான்....''

''மீத்தேன் எடுக்கறான்.'''

''. அட ... பாத்துக்கலாம்... போராடாத...''

''ஸ்டெர்லைட் ஆலையால கேன்சர் வருது... ''

''பாத்துக்கலாம்..  போராடாத...சமூக விரோதி பூச்சாண்டி..... சாக்கிரத....''

''காவிரியில தண்ணி தரமாட்டாங்கறான்... உச்ச நீதிமன்றத்
தீர்ப்பகூட மதிக்க மாட்டேங்கறான்...''

''சு... ஸ்....சும்மா... அதெல்லாம் போராடக் கூடாது .. பாத்துக்கலாம்...''..

என்னய்யா...போராட்டம் போராட்டம்னா... சினிமா பாக்க வேணாம்....உன் ஆசையெல்லாம் திரையில் பாத்துக்கோ...
தணிச்சுக்கோ....

கமல் இந்த விஷயத்தை நாசூக்கா சொல்றார்... அவர் நிறைய  விஷயம்  அறிஞ்சவர்.... இந்த ரசினி எல்லாத்தையும்  இப்படியா போட்டு உடைக்கிறது...

குழந்தைக்குப் பேச்சே வரலன்னு கவலப்பட்ட தகப்பனைப் பாத்து  அது  பேச ஆரம்பிச்ச முத வார்த்தை  '' அப்பா நீ எப்ப சாவேன்'னதாம்... அந்தக் கதயலால்ல இருக்கு...

இரண்டு பேரும் பிஜேபியால் மறைமுகமாகத் தூண்டப்பட்டவர்கள்னு   சிலர் சொன்ன  போது  அவங்களப் பாத்துச் சிரிச்சேன்...



இப்ப என்னைப் பாத்து நானே சிரிக்கிறேன்...