ஓட்டரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓட்டரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 அக்டோபர், 2016

தண்ணிரில் தள்ளாடும் உண்மை...

பல் இளித்துவிட்டது  நமது ஓட்டு வங்கி அரசியல்... ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கக் கூடிய அம்சம் இப்படி பலவீனமான போனது வரலாற்றுச் சோகம்தான்... 

 காவிரி விஷயத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்த்து எந்தக் கட்சிக்கும் ஆத்மார்த்தமான நிலைபாடே கிடையாது.. எப்படி அரசியல் பண்ணலாம்.. என்ன லாபம் கிடைக்கும் என்பதையே குறிக்கோளாகச் செயல்படும் ஓட்டுக் கட்சிகள் சுயலாபத்தைத்தான் பார்ப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது..  இந்த ஓட்டரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை.. அவர்களாலும் தமிழகத்தில் ஒரு நிலைபாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைபாடும்தான் எடுக்க முடிகிறது... 

இதை வைத்து சீமான்கள் வளர ஒரு ராஜபாட்டை வேறு  போட்டுவிட்டார்கள்...  அனைத்து கட்சிகளும் அவரவர்கள் அரசியல் லாபம் பார்த்து விட்டார்கள்..

மீண்டும் உண்மை தனித்து விடப்பட்டிருக்கிறது...


ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஓட்(டு)டைகள்.....


சுமார் 1996 ஆண்டு வாக்கில் என்னுடைய சிறுகதை விஷயமாக தினமணிக் கதிர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது மறைந்த கவிஞர் ராஜமார்த்தாண்டன் ’இவருதான் பெருமாள் முருகன்..’ என்று எனக்கு அறிமுகப் படுத்தினார்.   சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்படியே காயிதே மில்லத் பேருந்து நிலையம்  வரை நடந்து பேசிக் கொண்டே வந்தோம்...அவர் பேராசிரியர் என்பதும் தெரிந்தது..  அவர் பேச்சிலே அவர் ஒரு பெரியாரியவாதி போலவும் தெரிந்தது... ஆனால் தற்போது அவர் நிலைபாடு என்ன என்பது சரியாக தெரியவில்லை.. 

என்னைப் பற்றி விசாரித்தார்... அவர் உயரத்திற்கு என்னைப் பற்றியும் என் எழுத்தைப் பற்றியும் சொல்ல சற்று complex ஆக இருந்தது...  கலைஞானியிடம் நேற்று வந்த ஒரு உதிரி நடிகர் பேசுவதைப் போன்று தோன்றியது..

அன்பாகச் சிரித்தார்... அந்த ’குழந்தை’ சிரிப்பு இன்னமும் என் மனத்தில் இருக்கிறது....

என்ன வென்று சொல்வது... கருத்துரிமையா ஓட்டா என்று நமது சமூகம் பலவாறு தடுமாறிக் கொண்டுதான் செல்கிறது... இதன் ஊடேதான் அனைத்தும் நிகழ்கிறது...

நமது ஜனநாயகம் சிறந்ததுதான்... ஆனால் இதைப் போன்ற ஓட்(டு)டைகள் அவற்றை எப்படி அடைக்கப் போகிறோம் என்பதுதான் மிலியன் டாலர் கேள்வி.....