மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

காஷ்மீரம் -இரு வேறு கருத்துக்களும் - சில உண்மைகளும்

காஷ்மீரத்திற்கான 370 பிரிவு நீக்கம் பற்றி இரு வேறு கருத்துகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எதிர்ப்பவர்கள் தரப்பு :
1)இது சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது
2)காஷ்மீரம் மற்ற மாநிலம் போல இல்லை . . அது 1949 சுதந்திரத்திற்கு பிறகு இணைக்கப் பட்டது. நேருவால் தற்காலிமாக இணைக்கப் பட்டு தேவையானால் மக்கள் வாக்கெடுப்புடன் இந்தியாவுடன் சேருவதா வேண்டாமா என பின்புதான் முடிவு செய்ய வேண்டும்
3) இது ஜனநாயக விரோதமான தீர்மானம். உண்மையில் இணைக்க வேண்டும் என்றால் அந்த மாநில சட்டசபை தீர்மானம் போட வேண்டும். சட்டசபை கலைக்கப் பட்டு அரசாங்கம் இல்லாமல் வெறும் கவர்னரிடம் பெற்ற (அல்லது பெறப்பட்ட) ஒரு தீர்மானத்தை ஏற்று இவ்வாறு செய்வது சட்டவிரோதம்
4) அம்பேத்கார் 370 பிரிவை எதிர்த்தார் என்பதற்காக நாமும் எதிர்க்கக் கூடாது, அம்பேத்கார் சொன்ன அனைவற்றையும் இந்த அரசு ஏற்குமா? மேலும் அம்பேத்கர் அப்படி சொல்லவில்லை. அதை சங்கிகள் திரிக்கிறார்கள் .
5) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு காஷ்மீரத்தை திறந்து விட வே இதை பாஜக செய்கிறது

பெரும்பாலும் இந்த மாதிரி வாதத்தை தான் வைக்கிறார்கள். 
சரி. .

இப்போது 370 ஆதரிக்கும் BJP கூறுவது:-
1) தீவிரவாதிகள் 370 சட்டம் துணை கொண்டுதான் பல்கி பெருகிவிட்டார்கள். இனி இப்படி நடக்காது
2 ) 370 என்ற தனி ஆவர்த்தனத்தால் மத்திய அரசு எத்தனை கோடி கொட்டி அழுதாலும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது
3 ) இந்த 370 இருப்பதால் காஷ்மிரத்தில் எந்த ஒரு டெவலப்மென்ட் நடவடிக்கைகள் எடுக்க இயலவில்லை
4) பல இடங்களில் சாலைகள் மருத்துவமனைகள் பள்ளிகள் இல்லை - இதற்கு மத்திய அரசின் நிதிகள் எங்கு சென்றது என்று தெரியவில்லை
5) எந்த நிறுவனமும் காஷ்மீரத்தில் முதலீடுகள் செய்ய இயலவில்லை, காரணம் இரு வேறு சட்டப் பிரிவுகள் காரணம்

போன்ற காரணங்களை அடுக்குகிறது -

எனக்குள்ள கேள்விகள் :-
1) 370 நீக்காமல் இருந்திருந்தால் காஷ்மீரத்தில் தேனாறு பாலாறு ஓடிக்கொண்டிருந்ததா? 
2) காஷ்மீரத்தில் பல இடங்களுக்கு சென்று பார்த்த பல சமூக ஆர்வலர்கள் மேத்யூ உட்பட பலர் கூறுவது அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை வசதிகளோ மருத்துவமனைகளோ இல்லை என்கிறார்கள் .
3) இப்போது 370 நீக்கம் மூலம் மற்ற மாநிலங்கள் போல் காஷ்மீரம் திகழட்டுமே.. CAG யின் ஆதிக்கத்தின் கீழ் அதன் வரவு செலவு வரட்டுமே
4) காஷ்மீரத்து சுயநிர்ணய Stuff போன்றவை ரஷ்யா போன்ற நாடுகளில் சின்னாபின்னாமானதைப் பார்த்தோம். மேலும் இவர்கள் சுய நிர்ணயம் மதரீதியாக இன்னொரு தாலிபான் நாடாக மாறும் . இதையா எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள்?
5) காங்கிரசில் கூட இதைப் பற்றிய ஒத்த கருத்தில்லை
6) காங்கிரசின் முக்கிய தலைவர் கரன்சிங் இந்த சட்டப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறார். இவர்தான் முன்னார் காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் புதல்வர் ஆவார்.
7) BJP உறுப்பினர்களைத் தாண்டி இந்த சட்ட திருத்தம் ஆதரவு பெற்றதே எதிர்கட்சிகளிடத்தில் Vision இல்லை என தெரிகிறது
8 ) கார்ப்பரேட் கொள்ளையடிக்கிறான் என்று Sterotype குற்றச்சாட்டிலும் சாரமில்லை. கார்ப்பரேட்கள் தர்ம சத்திரம் நடத்த வருவதில்லை. அவர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் எனலாம். ஆனால் அதனால்தான் வேலை வாய்ப்புகள் வருகின்றன. அம்மாநில இளைஞர்கள் தாலிபான்களாக மாறுவதைக் காட்டிலும் வேலை வாய்ப்பு கார்ப்பரேட்டுகளால் உருவானால் அது தவிர்க்கப்படுமல்லவா? காஷ்மீரம் முதலில் முதலாளித்துத்தைப் பார்க்கட்டும். இந்த Phaseல் காஷ்மீரம் மாற வாய்ப்புள்ளதல்லவா?
9) காஷ்மீர் காஷ்மீர் எனச் சொல்வது இருக்கட்டும். லடாக் முற்றிலுமாக இந்தப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறதே. அவர்கள் மக்களில்லையா?
10) அந்த இளம் லடாக் எம்பி இந்த அரைவேக்காட்டு எதிர்ப்பாளர்களை பாராளுமன்றத்தில் கிழித்து தோரணம் கட்டினாேனே . நாடாளுமன்றத்தில் பழம் தின்று கொட்டை போட்ட வைகோ TR பாலு போன்றவர்கள் உரைகள் கேட்கவே சகிக்கவில்லை. காரணம் சாரமற்ற உரையாக இருந்தது. காஷ்மீர் பற்றி அம்பேத்கர் பேசும் போதும் பிஸ்மார்க் கூறுவதைத்தான் சொல்கிறார் . அதாவது "politics is not a game of realizing the ideal.  Politics is the game of the possible." இங்கே எது சாத்தியமோ அதைத்தானே பாஜக செய்துள்ளது.
11) இதுவரை காஷ்மீரத்துக்காக நாம் ராணுவத்திற்கு கொட்டியழுதது பல கோடிகள் இருக்கும்.
12) எல்லாவற்றையும் விட இது வரை காஷ்மிரத்துக்கு செலவிட்டது 2 லட்சம் கோடியாம் - யாருடைய வரிப் பணம் இது. என்ன மாறிப் போய் உள்ளது காஷ்மீரத்தில் - தினம் கல்வீச்சு போராட்டம் - நமது வீரர்கள் இழப்பு
- இனியாவது ஏதேனும் மாற்றம் வரட்டுமே. .
அப்படி வராமல் போன் பிறகு இந்த எதிர்ப்பாளர்கள் கம்பு சுற்றட்டும்,

வெள்ளி, 26 ஜூலை, 2019

ஒரு மாதிரி இருப்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை...


கீழ்க்கண்ட படங்கள் அத்தனை ஊடகங்களில் கிடைக்கிறது.





இவர்கள் நாளைய மாணவச் செல்வங்கள்


என்ன . . ? பேனாவுக்கு பதில் பட்டாக்கத்தி வைத்திருப்பதால் போலீஸ் கவனித்திருக்கிறது.    அட. . அதிசயம் பாருங்கள் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக பாத்ரூமில் "வழுக்கி " விழுந்துள்ளதால், ஒரே மாதிரி இடத்தில் ஒரே மாதிரி கட்டு போட வேண்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.



சமூக ஆர்வலர்கள் தரப்பும் அதன் எதிர்த்தரப்பும் நிறைய விவாதங்கள் செய்கிறார்கள்.



இதை சமூக விஞ்ஞான பார்வையில் அணுக வேண்டும் என்று வாதிடுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்...



இந்த ஜல்லியடியெல்லாம் வேண்டாம் இவர்களையெல்லாம் கழுவில் ஏற்றுங்கள் என்கிறார்கள் சுஜாதா பாணியில் எதிர்த்தரப்பு .



சரி அடியேனும் சுஜாதா பாணியில் இதைப் பார்க்கிறேன்.



சுஜாதாவின் பிரபல சிறுகதை  நினைவுக்கு வருகிறது.( மூன்று கடிதங்கள்)



ஒர் இளம் தம்பதி.   வேலைக்குச் செல்லும் பெண் .  அவள் அலுவலகத்தில்  ஒரு முறை ''காசுவல்'' பணியாளர்களால்

(இளைஞர்கள்) பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீஸ் அந்த
 இளைஞர்களை கைது செய்து அந்த யுவதியை அடையாளம்
காட்டச் சொல்கிறார்கள்

அந்தச் சிறுகதையின் ஒரு பகுதி::

அந்தப் பையன்களைக் கண்டு பிடிச்சுட்டாஙக.என் மனைவியை அடையாளம் காட்டச்
சொன்னாங்க. நீங்க 'இருள் வரும்  நேரம்' எழுதின மாதிரி எந்த வக்கீலும் எங்களை வந்து தொந்தரவு செய்யலைபோலிஸ் ஸ்டேஷன் போய் அவங்களை     

தெளிவா அடையாளம் காட்ட முடிஞ்சுது.திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒருத்தனுக்கு பத்தொம்பது வயசிருக்கும்.மத்தவனுக்கு  இருபத்தஞ்சு . இன்னொருத்தனுக்கு மீசை கூட முளைக்கலை.

அவங்களுடைய அப்பா அம்மா வந்து 'நல்லாத்தானேங்க வளர்ததோம் '
என்று அங்கலாயத்தது எல்லாம் எனக்கு தற்காலிகமான ஆரவாரங்கள்தான்

நடந்ததுக்கு யாரைக் குற்றம் சொல்றது


விதியையா? சமூகத்தையா?

சிக்கலான சமூக அமைப்பில் நகர வாழ்க்கைக்கும் நெருக்கடிக்கும் ஏழைமைக்கும் கொடுக்கும் விலை 


இது. சம்பவம் திரும்ப நிகழாமல் பாதுகாக்க வேண்டும் அவ்வளவுதான்.




என முடித்ததிருப்பார்


இந்த ரீதியிலும் பார்த்தால் எதிர்த்தரப்பினர் (சமூக ஆர்வலர்) கூற்று விளங்கும்


புதன், 12 ஜூன், 2019

ராஜராஜசோழன் .....

ராஜ ராஜ சோழன் இப்படி செய்யவில்லை அப்படி செய்யவில்லை என்று இன்றும் பட்டியல் செய்யலாம் தான் ..

ஆனால் பயன் என்ன...?

 ராஜ ராஜ சோழன் காலகட்டம் என்பது 10 நூற்றாண்டாகும் ... அப்போது உள்ள நிலை என்ன..? அப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சி என்ன ..? என்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த விடை இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற பாணியில் பேசுவது என்பது ஏற்புடையது அன்று...

காலத்தை கடந்து வந்த அந்த பெரும் படைப்பு... பெருவுடையார் கோயில் ....அதன் கம்பீரம்....  அந்த ஒன்று நமது கட்டிடக்கலையை பறைசாற்றவில்லையா ....?

குறைதானே  கண்டுபிடிக்கவேண்டும் .....

  ராஜராஜசோழன் சோசலிசம் கொண்டுவர முயற்சி செய்யவில்லை என்று கூட சொல்லலாம்...

 கால தேச வர்த்தமானம் என்று ஒன்று தேவை இல்லை போலும்....


 அது சரி புத்தர் புலால் உண்பதை எதிர்த்தார் அல்லவா..?  பழைய சனாதன கொள்கையில் எருதை கொள்வது பாவம் என்று தானே பௌத்தம் சொன்னது ...

ஒரே குழப்பம் போங்கள் 

திங்கள், 6 மே, 2019

விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி......

''விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி....'' என்ற பாடல் வரிகள் கலைவாணர் காலத்தில் மிக பிரசித்தம் ..


நமது நாட்டில் எத்தனை ஊழல்கள் இருந்தாலும் எதேச்சிகாரம் சாதிய பாகுபாடு இருந்தாலும் விண்வெளி அறிவியலில் நாம் முன்னேறியிருப்பது சமீபத்திய FANI புயலின் ஆராய்ச்சியில்  துல்லியமாக கணித்தது வியப்புக்குரியது பாராட்டத்தக்கது 


ஒரிஸ்ஸாவை தாக்கிய இந்த கோரப்புயலில்  நமது வானிலை மையம் முன்னறிந்து சொல்ல விட்டால் எப்படியும் பல் ஆயிரக்கானவர்கள் காணாமல் போயிருப்பார்கள் ...


வானிலை மையம்,  விண்வெளி ஆராச்சியாளர்கள், ஒரிசா அரசும் CONCERTED ACTION மூலம் பல உயிர் இழப்பை தடுத்து நிறுத்தி உள்ளது..  உண்மையில் பாராட்டுக்குரியது..


 விஞ்ஞானத்தை வளர்க்கவேண்டியது அனைவரின் கடமை என்பது நிதர்சன உண்மை 

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

கிரெளஞ்ச வதம்..

எனக்குத் தெரிந்த இரு உறவினர்கள் புற்றுநோய்க்கு ஆட்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலிருந்து அந்நோயின் கொடுமையை  அவ்விருவர் அவதிப்படுவதைப் பார்த்து வந்தேன்..

நமது சினிமாவில் காட்டப்பட்டதைப் போல இல்லை இந்நோய்.
வேறு வகைப்பட்டது.  குரூரமானது. இரக்கமற்றது.  மரண தண்டனையை விடக் கொடுமையானது என்பதே      நான் அறிந்து கொண்ட உண்மை.

புராணக் கதைகளில் வருகின்ற சபிக்கப்பட்டவர்களைப் போல பாதிக்கப்பட்டோரை மரணபயம் காட்டி அவர்கள் கம்பீரத்தைக் காலி செய்து பின்னர் காய்ந்த சருகுகளைப் போல் அடித்து துவம்சம் செய்து கதையை முடிக்கும் அவலத்தை பார்ப்பதே ஒரு கொடுமை.

இவற்றைப் பார்க்க நேரும்போது கடவுள் உண்டா இல்லையா என சந்தேகம் வருகிறது என பாதிக்கப்பட்டவர்கள் அரற்றும் போது யாரிடமும் அதற்கு பதிலில்லை.

கீமோதெரபி தான் இதற்கான மருந்து என்கிறார்கள். அதே சமயம் அந்த மருந்துதான்  நோயாளியை உருக்குலைக்க வைக்கிறது என்கிறார்கள்.

எது எப்படியோ இதற்கான சரியான மருந்தை கண்டுபிடிப்பவர் உண்மையில் அந்தக் கடவுளர்களை விட மேலானவர்.

எனது இரண்டு உறவினர்கள் பெருங்கொடுமையை அனுபவித்து உயிர் துறந்ததைப் பார்க்கும் போது அவர்கள் செய்த எந்தக் குற்றத்திற்கு இந்த தண்டனை என நினைக்கத் தோன்றுகிறது ...

இது இயற்கையின் ஒரு கிரெளஞ்சவதமில்லாது வேறு   என்ன...?

வியாழன், 25 அக்டோபர், 2018

மீடூ , சபரிமலை...


METOO#  பற்றியும் சபரிமலை பற்றியும்  கருத்தென்ன என்று சில நண்பர்கள் கேட்டார்கள் ...ஒரே அல்லோலகல்லோல படுகிறதே ..

METOO# வில் வரும் பல விஷயங்களில்  பொய்யான தகவல்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் ..அதே சமயம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதற்கு மறுப்பதற்கில்லை ..அதே சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமானது... அது பெண்ணை பெற்றவர்களுக்கு நன்கு தெரியும் . அதற்கு என்னதான் சட்டங்கள் இருந்தாலும் இவ்வாறான EXPOSE செய்வது தேவைதான் ...அப்போதுதான் பெண்கள் மீதான குற்றங்கள் குறையும் என நினைக்கிறன் 

மேலும் ஜெயமோகன் கூறிய இந்த வரிகள் என்னை துணுக்குற செய்தது ::-

ஆண் உடலில் இருந்து தர்க்கபூர்வமாகப் பெண்ணைப் புரிந்துகொள்வது எளிதல்ல என்று படுகிறது................................ஆணுக்கிருக்கும் இந்த புரிந்துகொள்ளமுடியாமையில் இருந்தே metoo போன்ற இயக்கங்கள் மேல் ஆண்கள் எழுப்பும் அசட்டு கேள்விகள் [இவ்வளவுநாள் ஏன் சொல்லலை? இப்ப மட்டும் என்ன வந்திச்சு? இது விளம்பரம்தானே? – போன்றவை ] எழுகின்றன என நினைக்கிறேன்.  

எத்தனை உண்மை ...ஒரு ஆணாக பிறந்தவனுக்கு பெண்ணின் பிரத்யேக பிரச்னைகள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை..அதனால் ஒரு பெண் இவ்வாறு கூறும் பொது அந்த பெண்ணை சகட்டுமேனிக்கு  தகாத வார்த்தைகளால்  திட்டி தீர்க்கிறான்..இந்த களேபரத்தில் அவள் சார்ந்த சாதி மதம் என்று வேறு புகுந்து விளையாடுகிறது என்பது என் கருத்து..  ஆக பெண்கள் தற்போது அனைத்து துறைகளில் சாதிக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கான பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கலாம் ..  அதே சமயம் அப்பாவிகள் தாக்கப்படக்கூடாது ..

சபரிமலை விஷயத்திலும் பல்வேறு சாதிய மத தாக்குதல்கள் .. தீர்ப்பை அளித்த நீதியரசர் தீபக் மிஸ்ராவை பற்றி அனைவருக்கும் தெரியும் ..அவர் இந்து தானே ... நமது நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த தீர்ப்பை அளித்திருக்கிறார் என்றே பார்க்கிறேன்.. எனவே இந்த தீர்ப்பை வணங்கி ஏற்கிறேன் என்றே நான் சொல்வேன் ...

நாகரீக சமூகம் செய்யவேண்டியதும் அதுதான் 

சனி, 29 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் - PART II : ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் ...

முதலில் இந்த சுட்டியை படிக்கவும் 
https://www.thenewsminute.com/article/stalked-trapped-hotel-us-travel-blogger-recounts-sexual-harassment-india-88186

முதல் முறையாக ஒரு இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
இது என்ன ஒரு கொடுமை இப்படி சிங்கப்பூரில் நடந்துவிடுமா
நடந்தால் என்ன எதிர் விளைவுகள் உண்டு என்பதை சொல்லித்
தெரியவேண்டியதில்லை நாம் இன்னமும் பயணிக்க வேண்டியதூரம் அதிகம்..

 சரி .இது ஒரு புறம் தற்போது சில விடுபட்ட சிங்கப்பூர் செய்திகள் 

-நான் இருந்த நாட்கள் வரை ஒரு தெரு நாயையோ சுற்றி திரியும் மாடுகளையோ பார்க்கவில்லை

* Signalக்கு   பாதசாரிகளும் வண்டிகளும் அத்தனை மரியாதை தருகிறார்கள் 

*பேருந்துக்கு நடத்துனர் கிடையாது ஓட்டுநர் மட்டுமே 

* பேருந்தில் ஏதாவது மாற்றுத்திறனாளி ஏறினால் அவர்களுக்கு பெரிய கதவை திறந்து அவர் ஏறுவதற்க்காக தன் இருக்கையை விட்டு வந்து உதவுகிறார் ஓட்டுநர்

* அனைத்தும் பேருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க முன்பக்க கதவுகள் வழியாக அனைவரும் ஏறவேண்டும் நடுவில் உள்ள பெரிய கதவு மாற்று திறனாளி ஏறுவதற்கும் அனைத்து பயணிகள் இறங்க மட்டுமே .. யாரும் அதை மீறுவதில்லை ..

* அங்கங்கு மிதிவண்டிகள் கிடக்கின்றன .. அவற்றை தேவைப்பட்டவர்கள் எடுத்து உபயோகம் செய்துகொள்ளலாம் (நம் ஊரில் அவ்வாறு இருந்தால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் )

* அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு  முக்கியத்துவம் தருகிறார்கள்  .. CYCLING SWIMMING, JOGGING WALKING போன்றவை ...

சென்ற பதிவில் ஒரு நண்பர் சிங்கப்பூரில் காவல் நிலையத்தை நீங்கள் பார்க்கவில்லை ஆனால் எங்கும் இருக்கிறது என்றார்..  இருக்கலாம் ... நான் லிட்டில் இந்தியாவில் மட்டுமே பார்த்தேன் மேலும் 15 வருடங்களுக்கு மேல் சிங்கப்பூர் வாழ் நிரந்தர குடிமகன் என் நண்பர் அவ்வாறு சொன்னதால் அதை பதிவிட்டேன் ..

சரி.. சரி... இவையெல்லாம் நம் நாட்டில் இல்லையா இருக்கிறதுதான்.... சட்டம் இருக்கிறது ...ஆனால் நாம் மதிப்பதில்லை அவ்வளவே ....எனவேதான் சிங்கப்பூர் ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் 



புதன், 26 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் ::: பெரிய பிக் பாஸ் நகரம் ..



சிங்கப்பூரைப் பற்றி பல கட்டுரைகள் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு பார்வையில். இது எனது குறிப்பு.  நான் பார்த்த குர்கான் (GURGAON),  மும்பை. பெங்களூர் ஆகியவற்றை கலந்து சுத்தமாக வைத்தால் அதுதான் சிங்கப்பூர்.  சுத்தமென்றால் உங்கவீட்டு சுத்தம் எங்க வீட்டு சுத்தமில்லை..அத்தனை சுத்தம்.  அவர்கள் சுத்தத்திற்கு தரும் முக்கியத்துவதிற்கு ஒரு உதாரணம். ஒரு சீனர் தன்னுடைய 
நாயை அழைத்துவந்தார் ஒரு கையில் 
நாயை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் ஒரு பேப்பரை                         வைத்திருந்தார் ..  ` 

ஒரு வேளை அந்த நாய் ''காக்கா''   போய்விட்டால்,  இவர் தான் அதை 
அப்புறப்படுத்த சுத்தப்படுத்த வேண்டும்..  

அத்தனை பயம்..   சட்ம்.... சட்டம் .... அதை மூர்க்கத்தனமாக     அமல்படுத்துவதில் சிங்கப்பூர் நிர்வாகம் காட்டும்முனைப்பு உண்மையில் வியக்கவைக்கிறது.   சுத்ததிற்கு இன்னொரு உதாரணம்  ஒரு மெட்ரோ ரயில் பிளாட்பாரத்தில் லேசாக தண்ணீர் கொட்டி விட்டது . நான் அதன் அருகே சென்று விட்டேன் உடனே ஒரு சீன பெண் அதிகாரி அலறினாள்.  தன் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து பணியாளரை அழைத்து அதை துடைக்கவிட்டாள் . இந்த களேபரத்தில் அங்கங்கு மைக்கில் அறிவுப்பு அலறல் .. ஒரு சின்ன விஷயத்திற்கு எதோ வெடிகுண்டு வைத்திருப்பதைப்போல 

 சுத்தம் என்றாலும் ஒழுங்கு என்றாலும் சட்டத்தை நீட்டுகிறது சிங்கப்பூர் நிர்வாகம். அதை போல ஒரு இடத்தில் பிரதான ரோட்டிலிருந்து பாத சாரிகள் நடக்கும் ஒரு சிறு பாதை .. அங்கு ஒரு அறிவிப்பு..  இந்த இடத்தில் பெட்ரோல் வாகனமோ பைக்கோ வந்தால் சிங்கப்பூர் டாலர் 55000 அபராதம் அதாவது ரூ 29 லட்சம் ...சொத்தையே எழுதி வைக்க வேண்டும் .. இருந்தாலும் சீனர்களிடம் எனக்கு பிடித்தது .. அவர்கள் சட்டத்தை மதிக்கும் பண்பு மற்றும் பணிவு .  

.இந்த ஊருக்கு வந்தால் பொதுவாக விடுதி எடுத்து தங்குவது சிறப்பு..  பிறர் வீட்டில்  தங்குவது என்றால்...   ஒருவர் OK.. பலர் என்றால் சிங்கப்பூரின் டிஜிட்டல் கண்பார்வையில் தண்ணீர்  மின்சாரம் போன்றவை  எவ்வளவு செலவாகிறது என்கிற அளவீடுகள் காட்டிக்கொடுத்துவிடும். இங்கு காண்டோ டைப் அல்லது ஹவுசிங் போர்டு வீடுகள்..  ஒன்றை போலவே உள்ளது . தற்போது சென்னையிலும் காண்டோ டைப் பிளாட்டுகள் வந்துவிட்டது .. வீட்டு உரிமையாளர்கள் அனுமதி இன்றி யாரும் உள்ளே வரமுடியாது...  வெளியேயும் செல்ல முடியாது .   இங்கு தொலைந்து போய்விட்டார் என்கிற பேச்சே கிடையாது .. காரணம் ஊர் முழுவதும் பிக் பாஸ் வீட்டை போல காமிரா இருப்பதால் காட்டிக்கொடுத்துவிடும் `.

சில தகவல்கள் 
*இங்கு சீதோஷணம் நம் ஊரை போலத்தான் ஆனால் வியர்க்காது ....
*பெரும்பாலான சாலைகள் நான்கு மற்றும் அதற்க்கு மேல்  lane..சாலைகளில் நெருக்கடிகள் இல்லை.....
* அனைத்து வாகனங்களும் 100 கி மி மேல் செல்கிறது .....
நகரம் முழுவதும் இரவில் ஒளிர்கிறது மின் விளக்கால் வண்ண மயம்தான் ....
பெண்கள்  இரவில் எத்தனை  நேரத்திலும் பாதுகாப்பாக அலைகிறார்கள் ஒரு சின்ன EVE TEASING புகார் கிடையாது (காந்தி கண்ட கனவை நினைவாக்கும்  சிங்கப்பூர்
* LITTLE இந்தியா தவிர வேறு எங்கும் காவல் நிலையத்தை பார்க்கவில்லை ஆனால் எங்கும் போலீஸ் உஷார் நிலையில் இருக்கிறார்கள் ..
க்ரைம் ரேட் வெகு குறைவு 

 பிடித்த விஷயம் :: சீனர்கள் சுறுசுறுப்பு பணிவு உழைப்பு 
பிடிக்காத விஷயம்::: காஸ்டலி நகரம் 
வருத்தப்பட்ட விஷயம்::: பெரும்பாலும் உடல் உழைப்பு ஈடுபடுத்தப்படுபவர்கள்  இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் (சாலை பணி,  கட்டுமான பணி )
நண்பர் செந்தில் சொன்னார் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பொய்த்த பின் இங்கு பெரும்மையினர் வேலைக்கு வந்ததாக சொன்னார் 
(நண்பர்கள் சூரி செந்தில் மற்றும் லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றி )

செவ்வாய், 24 ஜூலை, 2018

உண்மை சுடும் ...

https://tamil.thehindu.com/india/article24500604.ece

இன்றைய இந்து நாளேட்டின் சுட்டி ...

அப்போது எத்தனை பொய்கள் சொன்னீர் ...இப்போது நிலத்தடி வாரியம் யார் தலைமையில் இயங்குகிறது ...மத்திய அரசின் கீழ் இயங்குகிறது ...அப்போது அதுதான் அரசின் அதிகார பூர்வ கருத்து..... 

இந்த கருத்தை சொன்னவன் தீவிரவாதி கிறிஸ்துவ மதவாதி பாதிரியாரிடம் பணம் வாங்கினவன் என்று எத்தனை அவதூறு... அவதூறின் எல்லைக்கே சென்றீர்கள் ....இப்போது மத்திய அரசை அப்படி சொல்லுங்கள் பாப்போம்....

 மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா இத்தனை பேரை சுட்டு கொன்றீர்கள் ..

..ரஜினியை விட்டு போராட்டம் செய்பவர்கள் சமூக விரோதி என்றீர்களே  ..  மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா  சமூக விரோதி பட்டம்   ...

ஏதோ எவனோ எடுத்த பொய் வீடியோ போட்டு காட்டினீர்கள் எத்தனை பொய்கள் இப்பொது உண்மை உங்கள் முன் வெளிப்பட்டு நிற்கிறதே பொய் அம்பலப்பட்டு பல் இளிக்கிறதே ...


..புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் இனியாவது 

வியாழன், 28 ஜூன், 2018

என்றெமதன்னை கை விலங்குகள் போகும் ....

சமீப நாட்களில் என்றுமில்லாத வகையில் என்னை பாதித்த செய்திப்படம் இதுதான்




எங்கே தவறு .........இந்த இழிவை எங்கனம் போக்குவது என்று நாம் தீவிரமாக சிந்திக்கவிட்டால் .....நாம் பெண் குலத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே தீங்கு செய்தவர்கள் ஆகிவிடுவோம் .......