ஒரு ஆங்கில ஹாலிவுட் படத்தை பார்த்ததை போல உள்ளது ...நேர்த்தி ...
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
கமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
ரூபம் இரண்டு
ஒரு ஆங்கில ஹாலிவுட் படத்தை பார்த்ததை போல உள்ளது ...நேர்த்தி ...
வெள்ளி, 29 செப்டம்பர், 2017
இது ஒரு கால கட்டம்....
கமல்ஹாசனின்
திடீர் பேயாட்டம்
காரணம் விளங்கவில்லைதான் ….
“நான்
ஹிந்தி எதிர்ப்பு காலத்திலே அரசியலுக்கு வந்து விட்டேன்…” என்பதும் ஜெ உயிருடன் இருந்த
போது ஏன் பேச வில்லை என்பதற்கு கமல் கூறும் விளக்கம் எல்லாம் காதில் பூ தான் ….
திரைப்படத்திலேயே
தான் இன்னமும் பல முயற்சிகள் செய்யவில்லை
என்கிறார் …. அதை ஏன் அம்போ
என்று விடவேண்டும் என்பது
புரியாத புதிர்தான்…. பலர்
பல காரணங்களை சொல்கிறார்கள்….. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன்
தான் வந்துவிட வேண்டும் என்பதுதான் காரணம் என்று
பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்….
இருக்கலாம் …..
ஆனால்
இந்த திடீர் பிரவேசம் என்பது
ஜல்லிக்கட்டால் வந்த வினை என்றே
கூறத்தோன்றுகிறது…. சில நேரத்தில்
ஒரு பெரிய வேலை நிறுத்தமோ பெரும் போராட்டமோ நடந்தால் அதன் உணர்ச்சி வேகத்தில் சில திடீர்
தலைவர்கள் தோன்றுவார்கள்….. அதை போல ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்…..
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்த இளைஞர்கள் அரசியல் சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்பினார்கள்….
மேலும் மத சாதி அடையாளத்தைக்கூட துறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை பார்க்கமுடிந்தது…..
ஸ்டாலின் கூட அங்கு வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை..
"இது APOLITICALதனம் .. எந்த திட்டம் கொள்கை இல்லை.." என்று வழமையான IDEALISTகள் கூக்குரலிட்டார்கள்
.. ஆனால் அப்படிதான் அது நடந்தது… ஆனால் இந்த லட்சியவாதிகள் நிகழ்ச்சி நிரலை இளைஞர்கள்
பின்பற்றவே இல்லை…… அவர்கள் தங்கள் குறிக்கோளுடன் இருந்தார்கள்.. இது சற்று வியப்பாகவே
இருந்தது உண்மைதான்..
இது
கமலை உசுப்பேற்றிருக்கலாம் …
சோவியத்
காலகட்டம் , இந்திய
சுதந்திர போராட்டகாலம் போன்றவை பல தலைவர்கள்
உருவாக காரணமாக இருந்தது…. அது ஒரு PHASE
….. IDEALIST PHASE….. ஆனால்
தற்போது தலைவர்கள் இல்லாமல் மக்கள் கூடுகிறார்கள் …..
எந்த தலைவரையும் நம்ப முடியவில்லை என்பது
ஒரு காரணம்…. அந்தளவு மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள்…
இதை கமல் பயன்படுத்த நினைக்கலாம் என்று தோன்றுகிறது…
ஜெயித்தலாலும்
ஜெயிக்கலாம்… ஜெ- யை மக்கள் ஏற்கவில்லையா அதை போல கமல்….
ஆண்டவா…
வியாழன், 13 ஜூலை, 2017
பிக் பாஸ் - முழுச் சாப்பாடு ஊறுகாயாக....
பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையாக வரும் முன் கமல் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன்.. பிறகு பார்க்கவில்லை.. ஆனால் சேரி சைவம் போன்று பல விஷயங்கள் நடந்த பின், அதை ஒட்டி கமலின் தன்நிலை விளக்கம், பிரஸ் மீட், அதை ஒட்டி டிவி விவாதம், என்று ஒரு ரவுண்டு கட்டி ஆடுகிறது பிக் பாஸ்...
என்னை பொறுத்தவரை அந்த நிகழ்ச்சி ஒரு ஊறுகாய் போல அதை முழுவதும் சாப்பாடாக சாப்பிட முடியுமா ...?
லேபிள்கள்:
கமல்
,
ரியாலிட்டி ஷோ
,
விஜய் டிவி
புதன், 25 நவம்பர், 2015
அன்று கமலஹாசன் சொன்னது சரிதானே...?
விஸ்வரூபம் பிரச்சனையை ஒட்டி கமலஹாசன் மனம் நொந்து “நான் ஏதாவது வெளிநாட்டில் குடியேறப் போகிறேன்..“ என்று சொன்னார்.. அதையொட்டி எத்தனை கேலிகள் கிண்டல்கள் சமூக வலைதளங்களில் வலதுகள் மட்டுமன்றி SO CALLED புர்ச்சி இடதுகள் முர்ற்போக்காளர்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்வர்கள் வெளியிட்டுத் தீர்த்தார்கள்...
புதன், 11 நவம்பர், 2015
தூங்காவனம்....
ஒரு வரிக் கதைக்கு ஒரு வரி விமர்சனம்....
just super.....
தமிழில் ஒரு நல்ல திரைப்படம்... தமிழ் ரசிகர்களின் ரசனையை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்...
வரவேற்பார்களா என்பது படத்தின் வெற்றியில்தான் தெரியும்
ஞாயிறு, 5 ஜூலை, 2015
பாபநாசம்.....
த்ருஷ்யம் படத்தின் அனுபவத்திலிருந்து வெளிவருவதற்குள் பாபநாசம் படம் எத்தனை சுகானுபவமாக இருக்கிறது...
கமலுக்கென்ன கேட்கவேண்டுமா...? மோகன்லாலா கமலா என்கிற பேச்சுக்கே இடமில்லை... இருவரும் அவரவரர்க்ள் வாழும் இடத்திற்கேற்றவாறு (மலையாளி, தமிழன்) வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்...
ஆக கமலைப் பற்றிப் பேசவிரும்பவில்லை... ஆனால் கமல் நடிக்கும் படித்தில் யாராவது ஒரு கேரக்டர் அசத்துவார்கள்... உதாரணம் உத்தமவில்லனில் பாஸ்கர்..
இந்தப் படத்தில் கமலுக்கு அடுத்த படியாக அல்லது அவருக்கு ஈடாக அசத்தியவர் ஆனந்த மகாதேவன்... அவர் வரும் காட்சிகளும் வெகு குறைவு.... பேசும் வசனங்களும் ஒரே ஒரு பக்கத்தில் கூட வந்துவிடும்... இறுதிக் காட்சியில் சில நிமிடங்கள் பேசும் போது உண்மையில் கமலைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார்... எத்தனை நேர்த்தி என்ன மிடுக்கு... அபாரம். என்று கைதட்டத் தோன்றுகிறது...
நான் கல்லூரியில் படிக்கும் போது மும்பை வாழ் தமிழராக பல இந்தி சீரியல்களில் அவரை இளமையாக பார்த்திருக்கிறேன்...
இத்தனை நாட்கள் எங்கிருந்தீர்கள் ஆனந்த்.....
வியாழன், 14 மே, 2015
உத்தம கமல் = வில்லன்...?
அனைவரும் எழுதிய பிறகு தாமதமாக எழுத வேண்டியிருக்கிறது... இருந்தும் படத்தைப் பற்றிய ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்
உத்தமவில்லன் மைனஸ் கமல் = படம் ஒரு அழகோவியம்
இந்த படத்திற்கு வில்லனாக அமைந்ததே கமல் என்கிற மாபெரும் personalityதான்... அவருக்கு எந்தப் பாத்திரமும் அனாயசம் என்றாலும் மனோரஞ்சன் மேல் அனுதாபம் வராததற்குக் காரணம் பாத்திரத்தை ஒரு மெகா ஸ்டார் பாத்திரமாக பார்க்காமல் கமலாகப் பார்ப்பதுதான்... ஒரு வேளை வேறு சிலர் அப்படிப் பார்க்காமல் போகலாம்,,... என்னால் இயலவில்லை... காரணம் அந்தப் பாத்திரமே கமல் சாயலாக முற்போக்குப் பேசுவது etc etc.,
மற்றபடி, சமீபகால இளம் இயக்குனர்கள் சிந்தனையார்கள் எடுக்கும் off-beat வகையில் அதற்கு சற்றும் சளைக்காமல் கமல் என்கிற படைப்பாளி இந்தப் படைப்பைத் தந்திருக்கிறார்...
உண்மையில் கமலுக்குப் போட்டியே மைனா மெட்ராஸ் கோலிசோடா ஜிகர்தண்டா போன்ற சமகாலப் படைப்புகள்தான்...
அந்த வகையில் கமல் என்கிற படைப்பாளியின் வெற்றியே உத்தமவில்லன்....
வெள்ளி, 26 டிசம்பர், 2014
பாலச்சந்தரும் கமலும்
பாலச்சந்தர் இறுதி ஊர்வலத்தில் கமலால் கலந்து கொள்ள முடியவில்லை அவர் அமெரிக்காவில் இருப்பதால்.
அதையொட்டி அவர் பேட்டியை ஒளிபரப்பினார்கள்
"...அவர் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள இயலாமல் அவர் சொல்லிக்கொடுத்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன்... அதுவே அவருக்கு அஞ்சலி " என்றார்..
சற்று நேரம் குறுகுறுத்தது.. கமல் ஒரு கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அவர் கூறிய பிறகுதான் பாலச்சந்தர் மேல் மரியாதை மேலும் கூடியது... அன்னாருக்கு அஞ்சலிகள்
லேபிள்கள்:
கமல்
,
சினிமா
,
பாலச்சந்தர்
புதன், 12 நவம்பர், 2014
உங்களை நம்பி.....
இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞனாம் கலைஞானி
கமல் ஹாசன் அவர்களுக்கு அகவை 60 பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மகாநதி விருமாண்டி அன்பே சிவம் போலப் படங்கள் மென்மேலும் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு தருவதற்கு உங்களால்தான் முடியும்...
அந்தப் பாதையில் மென்மேலும் சிறக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
சர்ச்சைகள் ஒரு தொடர்கதை
இரண்டு சர்ச்சைகள்... முதலில் கமல் இரண்டாவது நீதியரசர். சதாசிவம் சம்பந்தப்பட்டது
...
வெள்ளி, 14 மார்ச், 2014
கேயாஸ் தியரி...
கேயாஸ் தியரி என்பதை அடிப்படையாகக் கொண்டு கமல் 'தசாவதாரம்' படம் எடுத்திருப்பார்... ஏன் அத்தனை செலவு பண்ணுவானேன்... நமது நாட்டு நடப்புகளே பெரும் கேயாஸ் தியரியாக இருக்கிறது..
லேபிள்கள்:
கமல்
,
கெஜ்ரிவால்
,
கேயாஸ் தியரி
,
பிஜேபி
சனி, 1 மார்ச், 2014
தூக்குத் தண்டனை....?
ஊரில் வந்ததிலிருந்து மனதே சரியில்லை...நேற்றுதான் செய்தியைப் படிக்க முடிந்தது...
லேபிள்கள்:
கமல்
,
கிருஷ்ணய்யர்
,
தூக்குத் தண்டனை
,
விருமாண்டி
திங்கள், 21 அக்டோபர், 2013
மெட்ராஸ் கஃபே பற்றி கமலின் கருத்து...
”தெனாலி படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும்..நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், மெட்ராஸ் கஃபே படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது.
லேபிள்கள்:
இலங்கைப் பிரச்சனை
,
கமல்
,
தெனாலி
,
மெட்ராஸ் கஃபே
,
R A W
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)