சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

THE BUSINESS OF LIVING........

இப்படி ஒரு ஆங்கிலத் தலைப்பு தருவதற்கு மன்னிக்கவும்.. அதன் காரணத்தைப் பிறகு சொல்கிறேன்.. வேண்டுமானால் தினசரி வாழும் வாழ்க்கை வியாபாரம் என்று சொல்லலாம்.. வாழ்க்கை என்பது வியாபாரம் என்று கவிஞரே சொல்லியிருக்கிறாரே...

சரி விஷயத்துக்கு வருகிறேன்...

எனது குடும்ப நண்பர் இந்தியாவை மிகவும் நேசிப்பவர். எந்த  காரணம் கொண்டும் நம்நாட்டை குறை சொல்வதை அவர் ஏற்கமாட்டார். அவர் எந்தவித குறிப்பிட்ட அரசியல் கட்சியும் ஆதரிப்பவர் இல்லைதான்.. அது ஒரு வித இந்திய பக்தி..

இந்தியாவில் ஊழல் என்று கூறினால்  எந்த நாட்டில்தான் இல்லை என்பார். அரசியல்வாதியை குறைசொன்னால் வேறு எங்கு ஒழுங்காக இருக்கிறது என்பார்..  ரோடு மோசம் என்றால் “ஆமாம்.. மத்த நாட்ல..“ என்று தொடங்கிவிடுவார்..  எனக்கும் கிட்டத்தட்ட அவர் தேசபக்தியில் பெரும்பான்மை சதவிகிதம் உண்டுதான்..  ஆனால் வேறு சில விஷயங்களைக் கேள்விப்படும் போதும் படிக்கும் போதும் சற்றே நெருடும்..  நாம்  வளர்ந்த நாடுகளான அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஒப்பிட்டுப் பேச முடியும்.. நம்மைவிட மோசமான நிலைமைகள் கொண்டுள்ள மூன்றாம் உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிட்டு பேச முடியாது.  காரணம் நாம் நம்மை விட அதிக மார்க் வாங்கும் மாணவர்களை ஒப்பிட்டு பேசுவது போலத்தான் இதுவும்..

நமது நாட்டு போலீஸ் துறையை பற்றி அரசியல்வாதிகளைப்  பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்துவிட்டன...  புதிதாய் சொல்ல வேண்டியதில்லை..  ஜாஸ் என்கிற பழைய பிரபல திரைப்படம்... அந்தப்படத்தில் ஒரு பெண்மணி சுறாவால் கொல்லப்பட்ட தன் மகளை காக்கத் தவறிய அந்தப் போலீஸ் அதிகாரியின் (Martin Brody) கன்னத்தில் அனைவர் முன்பாக அறைவார்... நம்மால் இங்கு அப்படி நினைத்துக் கூட பார்க்க முடியாது..

மேலே சொல்லப்பட்ட நாடுகளில் குற்றமே இல்லை என்று வாதாட வில்லை.. அதன் அளவு ரீதியாக குணம்சரீதியாக மாறுபட்டவை.. இங்கே சராசரியாக சாதாரண பிரச்சனைகளுக்கே ஊழல் என்று அங்கிருப்பதாகத் தெரியவில்லை.. ஒரு ரேசன் கார்ட் வாங்குவதில் தொடங்கி ஒரு டூவீலர் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதுவரை எதிலும்  அனைவற்றையும் சகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது..

சாலைகள் பராமரிப்பு மக்களின் கல்வியறிவு  மக்களின் சிவில் அறிவு சட்டப்படி நடக்கும் காவல்துறை விரைவாக நீதி வழங்கும் நீதித்துறை போன்றவை மேலே சொன்ன நாடுகளில் உள்ளதைப் போல நம் நாட்டில் உண்டு என்று மார்த்தட்ட முடியுமா....?  சமீபத்தில் பாரீசுக்கு சென்ற எனது உறவினர் சொன்னார் .. அங்கு  மெயின் சிட்டிப் பகுதியில் க்ரைம் ரேட், ஜீரோ சதவிகிதம் என்று.. இதைத்தானே நாம் நம் நாட்டில்  கனவு காண்கிறோம்..

பொதுவாக அமெரிக்கா அல்லது முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில் குடிபெயரும் நம்மூர்காரர்கள் இந்தியா திரும்பிவருவது மிக மிகக் குறைவு.. 

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்...

சமீபத்தில் முன்னாள் இந்திய தேர்தல் கமிஷனராக இருந்த திரு கோபால்சாமி ஒரு கூட்டத்தில் பேசினார்.  அவருடைய உறவினர் ஒருவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவர் பெற்றோர் பல முறை இந்தியாவிற்கு வரச் சொல்லியும் காலந்தாழ்த்தியதாகவும்  அதனால் திரு கோபால்சாமி அவர்களே ஏன் அப்படி செய்கிறாய் என்று கேட்டதாகவும் அதற்கு அவர் இப்படித்தான் பதிலளித்தாராம். .  . “the business of living is easy there...’’

அது உண்மைதானே...  நாமும் நம் நாட்டில் ஒரு சராசரி வாழ்க்கையை எளிதாக்கிவிட்டால்கூட நம் நாடு சொர்க்கலோகம்தான் எனக் கூறுவேன்..

திங்கள், 4 செப்டம்பர், 2017

NEET என்பது NEAT ஆக இருந்திருக்கலாமே ...

 NEET பற்றி நான் தான் தாமதமாக எழுதுகிறேன் என நினைக்கிறேன் இந்த விஷயம் ஒரே களேபரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது..

இதுவரை படித்த விஷயங்களிலிருந்து நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம்…
NEET தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??

அணு உலையை தன் மாநிலத்தில் நிறுவ விடாத கேரளாவும் பினராயி விஜயனும் நீட்டை ஏற்பது ஏன்??

ஏற்கனவே தமிழக அரசு மசோதாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் NEETடை அமல் படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளதாம்அதை செய்யாமல்  விட்டது ஏன்??

அனிதா படித்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு பாடம் சொல்லியே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது NEETல் அதிலிருந்துதான் கேள்விகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது CBSE  சிலபஸ் மட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது  என்பது உண்மையா...

தமிழ்நாட்டு கல்வித்திட்டமே சரியானது என்றால் இதுவரை BITS பிலானியில் ஒருவர் கூட சேர முடியவில்லை என்பது உண்மையா..

தமிழ்நாட்டு கல்வித்திட்டம் பல பத்து ஆண்டுகளை மாற்றப்படவே இல்லை என்பது உண்மையா..

கர்நாடக மாநிலத்தில் மருத்துவ கட்டண கொள்ளை நீட்டிற்கு பிறகு குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது… ஆகவே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தனியார் கல்வி வள்ளல்கள் பின்னணியில் இருக்கலாம் என்பது சரிதானே…

அனிதா டெல்லி சென்று வர விமான கட்டணம் தாங்கும் இடம் எல்லாம் கொடுத்து பின் அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கவில்லை என்ற செய்தி உண்மையா..


கல்வியாளர்கள் என்ற பெயரில் பல NGO-க்கள் இதன் பின்னல் இருக்கிறார்கள் என்பது உண்மையா..

இந்த கேள்விகளை தெரிந்து கொண்ட பிறகு நீட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம்