கந்து வட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்து வட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 நவம்பர், 2017

அன்பு நடமாடும் கலைக்கூடம்...

கந்து வட்டிக்கொடுமை சாதாரண மக்கள் முதல் பெரிய மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை..

 சாதாரண மனிதர்களுக்கு அவசர தேவைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது ஆயிரம் நிபந்தனைகள் போடுவார்கள்.  அதனால் அவர்களால் வங்கிகளை அணுக முடிவதில்லை. சினிமா போன்ற கானல் நீர் துறைக்கும் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை ..

 அதே சமயம் சினிமா பிரபலங்கள் கமல்கள்  முதல் கண்களில் ஆயிரம் கனவுகளுடன் வரும் கடைக்கோடி படைப்பாளியும் தம்மை  நிலை நாட்டிக்கொள்ள இப்படித்தான் கந்தில் மாட்டி தவிக்கிறார்கள்..  கமல் போன்றோர் தன் மார்க்கெட மதிப்பால்  தப்பிவிடுகிறார்... ஆனால் சாதாரணமாக எங்கோ தமிழகத்தின் மூலையிலிருந்து எந்த பின்புலமின்றி கனவுகளுடன் வரும் இளைஞனின் நிலை அவன் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாது.... புதியவனான அவனை நம்பி பெரிய தயாரிப்பாளரும் முதலீடு செய்ய மாட்டார்... பிறகு அவன் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறான்...

  இந்த இடத்தில் நாம் மெகா கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது ஒரு படம் தயாரிக்க 2 கோடி என்றால் இவர்கள் சம்பளம் 50 கோடி என்றாகும் போது ஒரு படம் எடுப்பதே கேலிக்கூத்தாகி விடுகிறது (இதில் 50 கோடியை தாண்டி சம்பளம் வாங்குபவரை பற்றி கேட்கவே வேண்டாம்  ) இறுதியில் இவர்கள் நாயகர்களாக மக்கள் மனதில் வலம் வர இவரை வைத்து சூதாடிய அல்லது தயாரித்தவர்கள் கதி அதோ கதியாகிறது ...

 ஆக  இது ஒரு விஷச் சக்கரம் போல ...

இப்போது நாம் யாரை மட்டும் குறை சொல்வது அன்பை மட்டுமா  ..

செவ்வாய், 24 அக்டோபர், 2017

முதலில் இதை தடுப்போம் ...

கந்து வட்டிக்  கொடுமையை என்ன வென்று சொல்வது...?

எரிந்து போன அந்த குழந்தைகளை பார்க்கவே ஐயோவென்று இருக்கிறது.. 

ரத்தத்தை அட்டையை விட அதிகமாக உறிஞ்சும் இந்தக் கந்து வட்டியை அதை வசூலிக்கும் மனிதமே இல்லாத இரண்டு கால்  ஜந்துக்களை  மனிதர்கள் வகையிலே சேர்க்க கூடாது..

 இந்த நாயினும் இழிவானவர்கள் கட்சி பேதம் இல்லாது விஷச்செடி போல் பரவி இருக்கிறார்கள் ...

 அனைத்து சட்டங்களையும் தன்  வசம் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள் ...

எத்தனை சட்டங்கள் போட்டாலும் அது இவர்களை ஒன்றும் செய்வதில்லை..

முதலில் மேலும் ஒரு ஏழை மரணிக்கும் முன் தடுக்கவேண்டியது இந்தக் கந்துகொடுமையைத்தான் ,,,