ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜனவரி, 2018

ஆண்டாள் PART II தொடர்ச்சி...

ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள்   கட்டுரையை 20 நிமிடத்தில் தோன்றியதை மட்டும் எழுதினேன்.. ஆராய்ந்து எழுதவில்லை.. நாட்டு நடப்பை பார்த்தவுடன் ஏற்பட்ட மனஎழுச்சி..

எனது கட்டுரைகள் பெரும்பாலும் ஜெயமோகன் அவர்களின் பார்வையை ஒட்டி இருக்கும் இது முன்னேற்பாடோடு நடப்பது இல்லை.. ஆனால் நான் அவர் கட்டுரையை படிக்கும் போது பெரும்பாலும் ஒத்து இருப்பதாய் கண்டு ஆச்சர்யமடைந்தேன்.. ஒரு சிலருக்கு ஜெயமோகன் அலர்ஜி இருக்கும் அதற்கு நான் ஏதும் செய்ய முடியாது

ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்கிற பதமே கண்ணதாசனிடம் நான் எடுத்தாண்டது நான் தமிழ் புலவர் அல்லன் . அவரே அந்த கட்டுரைக்கு அவர் வைத்த பெயர் ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் தற்போது கூகிளிட்டு பார்த்த போது இப்படி சொல்கிறார்

‘’ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது.’’

நான் வாய் தவறி சொல்ல வில்லை கண்ணதாசன் வரிகள் நீங்கள் கண்ணதாசனை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் முடிவு
(விநாயகம்)

நான் குடந்தை அருகே சேர்ந்த நாச்சியார்கோயில் என்கிற ஊரை சேர்ந்தவன்.. என் சிறுவயதில் எங்கள் ஊர் (கல்கருடன்) ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு மாலை தோறும் செல்வேன்…  கோயிலின் சுவர்களில் எழுதியிருக்கும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்னவென்றே அறியாமல் படித்து கொண்டிருப்பேன்… எங்கள் கோயில் திருவிழாவில் ஆண்டாள் பாசுரம் நெற்று செய்து வெள்ளி காசு வாங்கியது மிக பாக்கியமாக கருதுகிறேன்…  ஆண்டாள் தமிழை என் போன்ற ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் என்று நான் சொல்ல வில்லை என்போன்ற பெருங்கூட்டத்திற்கு என்று திருத்தி சொல்கிறேன் காரணம் என்னை போன்ற சாதாரணர்கள் அதிகம்(விநாயகம்)

உங்கள் பின்னூட்டத்தில் சொலிருக்கும் இன்ன பிற கருத்துக்கள் உங்கள் கருத்துக்கள் அவைகள் நான் கொண்ட கருத்தை மாற்றவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

நான் சொன்ன பேரரசுகள் தோன்றிய பிறகுதான் தேவதாசி முறை தோன்றி இருக்க வேண்டும் என்பது மார்க்சிய நோக்கு.. அதைத்தான் நான் சுட்டியிருக்கிறேன்..

வீர நாத்திகம் என்று சொல்வதை பற்றி சில விளக்கம் சொல்ல விரும்புகிறேன்..
இணையத்தில் ஒரு சில வீர நாத்திகர்களை பார்க்கிறேன்.. அவர்கள் பெரும்பாலும் ராஜராஜசோழன் காலத்தை பற்றி குறிப்பிட்டு பேசும் போது பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்தது சாதி கொடுமைகள் என்று கூக்குரலிடுகிறார்கள் அதை பற்றி நான் சொல்வதை விட ஜெயமோகன் கருத்தே எனது கருதும்… அவற்றை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் விருப்பம்… ஆனால் நான் அவற்றை ஏற்கிறேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. ஆக இந்து மதம் என்பதே ஒரு தொகுப்பு… வரலாற்று ரீதியில் நடந்த ஒரு நிகழ்வு ..அப்படி இருக்கும் போது தங்கள் ஒற்றை அடிப்படை அரசியலுக்காக அனைத்தும் பார்ப்பன சதி என்பதை ஏற்க முடியாது.. …மேலும் அந்த ஒற்றை கருத்தாக்க அரசியலை சில வீர நாத்திகர்கள் செய்வதை நான் மறுக்கிறேன் அதற்கும் ஏராளமான ஜெயமோகன் கட்டுரையை என்னால் மேற்கோள் காட்டமுடியும்..

ஆகவே எனது கட்டுரையை தனித்தனியாக படிப்பதை காட்டிலும் தொடர்ச்சியாக படித்தால் நான் சொல்ல வருவது விளங்கும் என நினைக்கிறன் நன்றி


வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் ...

இந்து மதம் என்பதே ஒரு தொகுப்பு  என்பதை ஏற்காமல்    ஒற்றை குடையின் கீழ் அனைத்தும் இந்து  என்பதை,  குறிப்பாக H ராஜா உள்ளிட்ட மதவாதிகளும் வீர நாத்திகம் பேசுபவர்களும்   பேசுகிறார்கள் ..இது ஆச்சர்யகரமான ஒற்றுமை ...' இரு தரப்பினரும்  ஒரு வேளை  புரிந்து கொண்டாலும்  , அதை பற்றி கவலை படவில்லை .. வீர நாத்திகம் பேசும் சில குழுக்கள் ''பார்த்தீர்களா சோழ மன்னர் ஆட்சியில் சாதிய  கொடுமைகளை..'' என்று கூக்குரலிடுகிறார்கள்..  நேர் எதிர் ராஜா முகாமோ அனைத்தும் இந்து என்கிறது .. வரலாற்று பாதையை மறுக்கும் பார்வையாகவே பார்க்கிறேன் ...

இந்து மதம்  என்பதே தமிழ்நாட்டில் ஏழு வகையாக இருந்ததாக வரலாறு சொல்கிறது

1.சைவம்..
2.வைணவம்..
3.கெளமாரம்..
4.காணாபத்தியம்..
5.செளரம்..
6.சாக்தம்..
7.ஸ்மார்த்தம்..

சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளன.. வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில் தான் உள்ளன.. கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன..

ஆகவே தமிழும் பக்தியும் இங்கே ஒன்றுடன் ஒன்று பிணைத்து வந்திருக்கிறது   .   ஆண்டாள் பெரியாழ்வார் போன்ற 12 ஆழ்வார்கள் முதல் 63 நாயன்மார்கள் வரை தமிழ் பக்தி இலக்கியத்தில் ஊறித்திளைத்தவர்கள் .. அதனால் தமிழுக்கு அவர்கள் அளித்த கொடை மிக அதிகம் ..பக்தி  இலக்கியத்தை  தமிழிடமிருந்து பிரிப்பது , உயிரை பிரிந்த உடல் போலவே தோன்றுகிறது

வரலாற்றை நாம் பார்க்கின் பேரரசுகள் தோன்றியவுடன் அவைகள் மாறுவதை நாம் காணலாம் 

தேவதாசி முறை என்பதே பேரரசுகள் உருவான பிறகு     வந்த ஒன்று .. அதற்கு முன்பு சாத்தியமில்லை  .. தமிழகத்தின் ஆகச்சிறப்பு வாய்ந்த பேரரசு என்பதே சோழ பேரரசுதான் அதுவே ஆண்டாளுக்கு பிந்தியது அப்படி இருக்கும் சூழலில்  அதற்கு முன்பே  தேவதாசி என்கிற பதம் எப்படி சரியாகும்  .. அதாவது அக்பர்காலத்தில் ரயில் வண்டி ஓடியது என்று எழுதுவதற்கு சமம் இது 

இந்த குழப்பத்திற்காகவே  ஆண்டாள் ஒரு கற்பனை பாத்திரப்படைப்பு என்கிறார் ராஜாஜி ..   பிஜேபி குறிப்பாக H ராஜா தலைமையில் இதை ஒரு அரசியல் ஆதாயம் அடைய முயலுமா என்று பார்க்கிறார்கள்  . வைரமுத்துவோ தனக்கு ஞானபீடம் கைநழுவி போகுமோ என்கிற அய்யப்பாடுடன் இருப்பதாக இணையத்தில் சந்தி சிரிக்கிறது ..

அய்யா.. உங்கள் சண்டையில் எங்கள் ஆண்டாளை, எங்கள்தமிழை, தமிழை ஆண்டவளை விட்டுவிடுங்கள் என்று இறைஞ்சுவதை தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது