பண்டிட்டுகள் வேறு மக்கள் வேறு என்பது எப்போதுமே நிறுவப்பட்டு வரும் உண்மை என்பதைத்தான் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நமக்கு மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
ஜனநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 20 மே, 2016
தமிழக மக்கள் நடத்திய பாடம்....
திங்கள், 16 மே, 2016
ஜனநாயகக் கடமை...
நான் உட்பட என் நண்பர்கள் சிலர் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியவில்லை என்பது காலத்தின் கோலம்தான்...
ஞாயிறு, 8 நவம்பர், 2015
மீண்டும் ஒரு உதாரணம் …
முன்னாள் உச்ச நீதிமன்ற
நீதியரசர் மார்கண்டேய கட்ஜூ கோவன் கைதை கடுமையாக சாடி தமிழக முதல்வர் ஜெ க்கு எச்சரிக்கை விட்டுள்ளார். அரசியல் சாசனத்திற்கு முரணான நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார்..
மேலும் ஜனநாயகத்தில் மக்கள்தான் அரசர்கள்... மன்னாராட்சி காலம் போல நடந்து கொள்ள முடியாது என்றிருக்கிறார். மேலும் கோவன் கைதில் ஈடுபட்ட காவலர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்..
நல்ல வேளை அதிமுகவின் அதிருஷ்டம் கட்ஜூ சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதியரசராக இல்லை.. அவன் சொன்னதை போல நடந்து கொண்டிருந்தால் என்னவாகும்.. பெரும் சட்டச் சிக்கலில் இந்த விஷயம் சென்றிருக்கும்...
யாரை மவுண்ட்
ரோடு மகாவிஷ்ணு என்று மகஇக போன்றவர்கள் கிண்டலடிக்கிறார்களோ அதே இந்து நாளேடு கைதை
கண்டித்து தலையங்கம் எழுதியிருக்கிறது..
இது ஒரு புறம் ...ஒரு பாடல் பாடினார் என்பதால் தேசத் துரோக வழக்கு தொடுக்கப் பட்டதா என்பதை நம்ப முடியவில்லை... ரசனைக் குறைவாக பாடினார் அவதூறாக முதல்வரை பற்றிப் பாடினார் என்பதும் நம்ப முடியவில்லை... காரணம் அதிமுக திமுக கேப்டன் ராமதாஸ் வைகோ என்று
(கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து) ஒருவரையொருவர் மேடையில் பேசாத பேச்சுக்களா.. இதற்காகவே
தனியாக சில நபர்களை அமர்த்திக் கொண்டு அவரவர் மேடைகளில் நாகூசும் வகையில் வசைபாடுவதை நாடே அறியும்…
ஒரு தொலைக்காட்சி
விவாதத்தில் IAS அதிகாரி ஒருவரும் மகஇகவின்
பொதுச் செயலர் மருதையன் அவர்களும் தெளிவாக கூறிவிட்டார்கள்… கைதின் எதிரொலி இவர்கள்
ஒரு ANTI-ESTABLISHMENT என்பதற்காகத்தான்…
ஆக அது மட்டுமே
உண்மை…
ஆனால் இந்த விஷயங்களை
தொகுத்துப் பார்க்கும் போது நாம் புரிந்து கொள்வது இவைதான்…
கைது என்பதும் தேசத் துரோக வழக்கு என்பதும் தேவையற்றது..
மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அதிமுகவும் பாஜக வும் அவர்கள் மீதான விமர்சனத்தை சற்றும் சகிக்காத தன்மை உடைய கட்சிகளாக இருக்கிறது.
என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் மகஇக கூறும் புதிய ஜனநாயகத்தைக் காட்டிலும் கட்ஜூ இந்து நாளேட்டு ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட பன்முக இந்திய ஜனநாயகமே சிறப்பாக இருக்கிறது..
மேலும் ஒரு உதாரணம் தற்போது கோவனை போலீஸ் காவலில் விசாரிப்பதை தடை செய்து உத்தரவிட்ட நீதியரசர் சி,டி செல்வம் அவர்கள் பிறப்பித்த உத்தரவை ஒரு எடுத்துக் காட்டாக நாம் காணலாம்..
கைது என்பதும் தேசத் துரோக வழக்கு என்பதும் தேவையற்றது..
மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் அதிமுகவும் பாஜக வும் அவர்கள் மீதான விமர்சனத்தை சற்றும் சகிக்காத தன்மை உடைய கட்சிகளாக இருக்கிறது.
என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் மகஇக கூறும் புதிய ஜனநாயகத்தைக் காட்டிலும் கட்ஜூ இந்து நாளேட்டு ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட பன்முக இந்திய ஜனநாயகமே சிறப்பாக இருக்கிறது..
மேலும் ஒரு உதாரணம் தற்போது கோவனை போலீஸ் காவலில் விசாரிப்பதை தடை செய்து உத்தரவிட்ட நீதியரசர் சி,டி செல்வம் அவர்கள் பிறப்பித்த உத்தரவை ஒரு எடுத்துக் காட்டாக நாம் காணலாம்..
லேபிள்கள்:
நீதியரசர் கட்ஜூ
,
மகஇக
,
ஜனநாயகம்
வெள்ளி, 10 ஜூலை, 2015
ஆபத்தான பாதை...
பீஹார் மாநிலத்தின் மேலவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதிக்கு மேல் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாம் என்கிற செய்தியைப் படிக்க நேரிட்டது.....
இந்தப் பக்கம் மத்திய பிரதேசத்தில் நடப்பது எல்லாமே விபரீதம்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது... முதலில் யூனியன் கார்பைட் படுகொலைகள் தற்போது “வியாபம்“ என்கிற SERVICE COMMISSION ... பொதுவாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில சர்வீஸ் கமிஷன் பரிட்சையில் ஊழல்கள் இருக்கும்... தமிழகத்திலும் நாம் கேள்விப் படுகிறோம்,.... ஆனால் ம.பி யில் நடப்பது வெறும் ஊழல்கள் மட்டுமல்ல கிட்டத்தட்ட 48 படுகொலைகள்... அனைவரும் இந்த ஊழல்கள் வெளிவர காரணமானவர்கள்... “அட அது அதிகம் பேசறாங்க சார்.. ஒரு ஏழு அல்லது எட்டு (?) பேர்தான் இருக்கும்...“ என்கிறார்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்...
சற்றும் ஏற்க முடியாத கொடுமைகள் இவைகள்... ஊழல்களைக் கூட சகித்துக் கொண்டு வாழ்ந்துவிடலாம்... படுகொலைகளை சற்றும் ஏற்க முடியாது....
மக்களின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் ஆபத்திற்கான அறிகுறிகள் இவைகள்...
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவை....
புதன், 23 ஏப்ரல், 2014
ஜனநாயகம்.....?
தேர்தல் சுரம் நாடெங்கும் பற்றிக் கொண்டு மக்கள் பார்வை முழுவதும் தேர்தலிலும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதிலும் பரபரப்பாக ஆவலுடன் காத்திருக்கும் போதுதான் விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு (20.4.14) அன்று ஒளிபரப்பாகியது..
செவ்வாய், 18 பிப்ரவரி, 2014
இந்திய ஜனநாயகம் தலைசிறந்ததே...
ஆயிரமாயிரம் ஊழல்கள்தான்....
பதவிச் சண்டைகள்தான்...
எத்தனை இருந்தாலும் இந்திய ஜனநாயகம் தலை சிறந்தது என்பதையே ராஜீவ் கொலைக் கைதிகளின் தூக்கு ரத்தின் மூலம் நிரூபித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. உன்னதமான சர்வாதிகாரத்தைக் காட்டிலும் பல்வேறு சிக்கல்கள் கொண்ட இந்திய ஜனநாயகமே சிறந்த வழிமுறை என்பது இதன் மூலம் தெரிகிறது... தமிழக மக்கள் தொடர்ந்த போராட்டத்தையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும..
மக்கள் தங்கள் தேவைக்காக இந்த அமைப்பில் தொடர் போராட்டத்தின் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்பதும் மக்களுக்கான சரியான அமைப்பாக இந்திய ஜனநாயகம் உள்ளது என்பதும் இதன் மூலம் தெரிகிறது...
சமீபத்தில் ஜெயமோகன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதன் சுட்டி http://www.jeyamohan.in/?p=43411
என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கிய கட்டுரை.. அது தற்போது எத்தனை பொருத்தமாக இருக்கிறது.....
வாழ்க இந்திய ஜனநாயகம்...
லேபிள்கள்:
ராஜீவ் கொலை
,
ஜனநாயகம்
,
ஜெயமோகன்
சனி, 15 பிப்ரவரி, 2014
பின்-நவீனத்துவ ஜனநாயகம்
செய்தி 1
ஒரு தேசம் தன் மீது அன்னியர்கள் படையெடுத்து வருவதால் நாட்டைக் காப்பாற்ற இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்ததாம்.. அதைக் கேட்டு பல இளைஞர்கள் நாட்டைக் காப்பாற்ற ராணுவத்தில சேர
லேபிள்கள்:
கெஜ்ரிவால்
,
கேப்டன்
,
பாலு மகேந்திரா
,
பிரதமர்
,
ஜன் லோக் பால்
,
ஜனநாயகம்
,
MLA
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)