முதலில் வாசிப்பின் அவசியம் என்ன என்பதைப் பற்றிய எனது புரிதலை சொல்லிவிடுகிறேன்.
நம்மை நாமே புரிந்து கொள்வது நாம் வாழும் உலகைப் பற்றிப் புரிந்து கொள்வது ஆகியவற்றை சாத்தியமாக்குவது நூல் வாசிப்பு.. (புரிந்து கொள்வது மட்டுமல்ல சமூகத்தை மாற்றி அமைப்பது என்று ஒரு பெரிய குழு பேச ஆரம்பித்து விடுவார்கள் அதற்குள் செல்லவே நான் விரும்பவில்லை)
அப்படி புரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்றால் ஒரே பதில் இந்த உலகில் உலவும் மிருகங்கள் எல்லாம் என்ன உலகைப் புரிந்து கொண்டா உலாவுகிறது அதைப் போல இருக்கலாமா வேண்டாமா என்பதை நாம்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
சரி இப்போது பிரச்சனைக்கு வருவோம். நூல் வாசிப்பு என்றவுடன் எந்த நூல் யாரை வாசிப்பது ஆகியவை அடுத்ததாக வருகிறது..
ஜெயமோகன் என்கிற ஆளுமையை தமிழ் உலகம் அப்படி புறந்தள்ளி விடமுடியாதுதான்.. அதைப் போலவே சுஜாதா என்று நான் நினைக்கிறேன்.. சுஜாதாவை பற்றி அப்படி ஒரு விமர்சனம் வருவதே அவர் வணிகப் பத்திரிகையில் அதிமாக எழுதினார் என்பதற்காகவே... தொடர்ந்து தமிழ்ச் சினிமாவும் அவரை பயன் படுத்திக் கொண்டது..
ஜெகேவையும் சுஜாதாவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது.. காரணம்.. ஜெகேயின் காலம் வேறு சுஜாதாவின் காலம் வேறு... ஜெகே எழுதத் தொடங்கியது 60க்கு பிறகு கிட்டத்தடட 80 வரை எழுதினார்.. அந்தக் காலம் என்பது கடுமையான வறுமை தாண்டவமாடிய காலகட்டம்.. ரசியாவும் சீனாவும் இந்த உலகு முழுவதும் எற்படுத்திய கடுமையாக தாக்கம் ஒரு பக்கம் கீழ்வெண்மணிக் கொடுமை நக்சல்பாரி இயக்கங்கள் எழுச்சி இந்தியாவை ஆட்டிப் படைத்த காலகட்டம்.. பெரியாரின் நாத்திக இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் தமிழகத்தில் தாக்கம் ஏற்படுத்திய காலகட்டம்.... ஏழைப் பாராரிகள் சேரி மக்கள் வாழ்க்கை என்ன என்பதே ஜெகேயின் எழுத்திலிருந்துதான் தமிழகம் தெரிந்து கொண்டு ஒரு மின் அதிர்ச்சி ஆளாகியிருந்தது என்றே சொல்ல வேண்டும...ஜெகேயின் கால கட்டத்தில்தான் திஜா வேறு தளத்தில் தனக்கே உரித்தான பங்கை ஆற்றிக் கொண்டிருந்தார்,
இந்த ஆளுமைகளுக்குப் பிறகுதான் சுஜாதாவின் கால கட்டம் தொடர்கிறது... அதாவது 80க்கு பிறகுதான்.. அன்றய இந்தியாவில் ஒரு படித்த நடுத்தர வர்க்கம் உருவான காலகட்டம்... அந்த சமயத்தில் ஜெகே கிட்டத்தட்ட எழுத்தை நிறுத்தியிருந்தார்... நடுத்தர வர்க்கம் தன் தேவைகளை சற்று மாற்றியிருந்தது... கம்யூனிச இயக்கம் தேக்க நிலை அடைந்து சோவியத்து சிதறிப் போன காலகட்டம் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும. அதன் தாக்கம் உலகெங்கும் பரவி, கம்யூனிசத்தின் மீது மக்கள் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.....
அந்த நேரத்தில் மக்கள் என்ன தேவையோ அதை அடைந்து கொண்டார்கள்.. எழுத்துலகில் சுஜாதாவை தன் தேவைக்கு ஏற்ப மக்கள் மாற்றினார்கள்.. அவர் அவர்களுக்கு ஏற்வாறு சில விஷயங்களைச் செய்தார்.. அவருடைய கணேஷ் வசந்த் போன்ற பாத்திரங்களாகட்டும் இன்னபிற த்ரில்லர் வகை கதைகள் ஆகட்டும் அப்படி அமைந்தது..அதே காலகட்டத்தில் அவர் சமூக பிரக்ஞைமிக்க கதைகளும் எழுதிக் கொண்டிருந்தார்... ஜன்னல் மலர், (தன்னுடைய திரைப் பட அனுபவத்தின் விளைவாக ) கனவுத் தொழிற்சாலை, (அன்றைய காலகட்ட அரசியல் பற்றிய) பதவிக்காக எத்தனை எத்தனையோ சிறுகதைகள் (பெயர் நினைவில்லை) ஒரு லட்சம் புத்தகங்கள், குதிரையை வைத்து ஒரு அட்டகாச சிறுகதை, எல்லாவற்றுக்கும் மேலாக மத்யமர் சிறுகதை கடல் (அந்த சொல்லாட்சியே திடுக்கிட வைக்கும்)., நம் உள் அக சன்னலை திறந்து திறந்து வைத்துக் கொண்டே செல்லும்... அவர் விஞ்ஞானக் கதைகள் கட்டுரைகள் ஏராளம் கணையாழியில் கடைசி பக்கம் கட்டுரைகள் (தற்போது ஜெயமோகன் வலைதள கட்டுரைகள் அதை ஈடு செய்கிறது என்பேன்) என்று அந்த ரங்கராஜனை ராஜனாக உயர வைக்கிறது..அவரால் சுட்டிக் காட்டப் பட்ட எத்தனை கவிஞர்கள் எழுத்தாளர்கள் தற்போது பிரபலமாக விளங்குகிறார்கள் என்பதை நாடிறியும்...
தற்போது ஜெய மோகன் காலகட்டம்... ஜெயமோகன் வருகை என்பது கிட்டத்தட்ட பொதுஉடமை அரசியல் கடும் வீழ்ச்சியை சந்தித்து ஓய்ந்த காலகட்டம்.. பின்னை நவீனத்துவம் எழுச்சி பெற்ற காலகட்டத்தில் பிரவேசிக்கிறார். அவருடைய விஷ்ணுபுரம் பின்.தொ.நி.குரல் போன்ற தலையணை சைஸ் புத்தகம் முதல் கடுகு போல இருந்தாலும் காரம் குறையாத யானை டாக்டர் வரை மிகப் பெரிய பிரம்மிப்பு ஏற்படத்தான் செய்கிறது.. ஒரு காலத்தில் அரைகுறைதனத்துடன் முற்போக்கு என்று என்னையே முட்டாளாக்கிக் கொண்டிருந்த நான் மீண்டதே ஜெயமோகனைப் படித்த பிறகுதான் என்பேன்... அவரின் வலைதளக் கட்டுரையைப் படிக்காமல் சக நிகழ்வின் ஓட்டத்தையே என்னால் புரிந்து கொள்ளவே முடியாது.. அந்த வகையில் எனனை பொருத்த வரை, ஜெகே திஜா சுஜாதா ஆகியோரின் தொடர்ச்சியே ஜெயமோகன் என்பேன்...
அவர் அதை ஏற்றக் கொள்ளாவிட்டாலும்..
9 கருத்துகள் :
Rationalism is not a problem....It is must but அதை வைத்து மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்று சொல்வது தான் தவறு....நீங்கள் சொல்வது கரெக்ட்....இந்த போலி முற்போக்கு பித்தை அடக்கியவர் ஜெயாமோகன்....ஆனால் கொஞ்சம் தலைகணம்....அது தான் பிரச்சனை.....
வருகைக்கு நன்றி பிரசாந்த்... முற்போக்கு சமாச்சாரங்கள், பொது உடைமை போன்ற தத்துவங்கள் அவ்வவ்போது உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தத்துவங்களுக்கும் ஈடு கொடுத்து வந்தால்தான் மேன்மேலும் முன்னேற்றமடையும் if it fails to address the issues, it has to face its natural death என்று நினைக்கிறேன்.. அந்த வகையில் ஜெயமோகன் எப்படிப்பட்டவராகயிருந்தாலும் அவருக்கு ஈடாக யாரும் எதிர் கேள்வி கேட்பதிலும் பதில் சொல்லவதிலும் எனக்குத் தெரிந்து யாருமில்லை...
அவரை போல் பல intellectuals இருக்கிறார்கள்....பலர் எதிர் கேள்வியை நியாயமாக வைக்கிறார்கள்.....இவர் அதை கண்டுகொள்வதில்லை.....
ok.. can you name them???
ஞானி,எஸ்.ர,எஸ்.வி.ஆர்,அ.மார்க்ஸ்(சில விஷயங்களில்)
நீ சாெல்லும் நபர்கள் முக்கியமாவர்கள்தான்.... ஆனால் புனவைுலகில் இல்லை ... எஸ் ரா தவிர மேற்சொன்னவர்கள் கட்டுரைகளை படித்திருக்கிறேன்... அவற்றுள் எனக்கு நெருக்கமானவை ஜெமோ மட்டுமே நான் சொல்ல நினைப்பதை அவர் எழுதுவதாக ஓர் உணர்வு ...
நீ சாெல்லும் நபர்கள் முக்கியமாவர்கள்தான்.... ஆனால் புனவைுலகில் இல்லை ... எஸ் ரா தவிர மேற்சொன்னவர்கள் கட்டுரைகளை படித்திருக்கிறேன்... அவற்றுள் எனக்கு நெருக்கமானவை ஜெமோ மட்டுமே நான் சொல்ல நினைப்பதை அவர் எழுதுவதாக ஓர் உணர்வு ...
உங்களுடைய comparison புரியவில்லை.
ஜேகே 90 வரை எழுதியிருக்கிறார். சுஜாதாவும் அவரும் ஒரே காலக்கட்டம்தான். சுஜாதாவும் 60களின் தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 90க்கு பிறகு புனைவை குறைத்துக்கொண்டு அபுனைவில் சுஜாதா அதிக ஆர்வம் செலுத்தினார்.
ஏழைகள் மற்றும் சேரிகளை பற்றி ஜேகேவை வாசித்துதான் தமிழர்கள் அறிந்தார்கள் என்பதெல்லாம் உச்சக்கட்ட நகைச்சுவை :)
ஜெயமோகனை ஏன் இவர்களோடு ஒப்பிடுகிறீர்கள் என்பதும் புரியவில்லை.
மொத்தத்தில் கொஞ்சமும் ஃபோகஸே இல்லாத கட்டுரை :(
வருகைக்கு நன்றி யுவகிருஷ்ணா... நான் உங்கள் தளத்தைப் படித்திருக்கிறேன்...
ஜெகேயும் சுஜாதாவும் சம காலத்தில் எழுதினார் என்பது எல்லோரும் அறிந்ததுதான்...
சிவாஜியும் கமலும் ஒரே காலத்தில் நடித்தார்கள் என்பதைப் போல... என்னைப் பொருத்தவரை
நான் சொல்ல வந்த கருத்து எந்த மக்கள் சார்ந்த விசயங்களும் அந்தந்த சமூக அரசியல் (இன்னமும்
உலகளாவிய) சூழலில்தான் நடக்கிறது என்று புரிந்து கொள்கிறேன்.. மனிதன் புறவகைச் சார்ந்துதான்
இயங்குவான் (அதை அவன் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்),,, சுஜாதா 60க்கு பிறகு
டெல்லியில் வேலைக்குச் சேர்கிறார்.. அப்போது எழுத ஆரம்பித்தும் விட்டார்... ஆனால் அவர்
பிரபலமடைவது கிட்டத்ட்ட 80க்கு பிறகுதான் என்பது எனது கருத்து.. காரணம் அந்த உலகளாவியச் சூழல்...
பொதுஉடைமை கருத்துக்கள் ஷீணமடைந்து ஒரு அவநம்பிக்கை ஏற்பட ஆரம்பித்த காலகட்டம்.. ஒரு
அப்போது மக்கள் மனதை கவர்ந்தவராக சுஜாதா அறிப்படுகிறார் என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்...
ஜெயமோகன் காலம் என்பது பின்நவீனத்துவ காலகட்டம்.. அப்போது சுஜாதா எழுத்தைக் குறைத்துக்
கொண்டு சினிமா பக்கம் சென்றுவிட்டார்... ஆக இது ஒரு விசித்திரமான ரிலே ரேஸ் போன்ற விஷயமாக
இருப்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.. சுஜாதா பற்றிய மனுஷ்யபுத்திரன் ஜெயமோகன் கருத்துக்களை ஒட்டிய
விசயமாகப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.. ஆனால் அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சுதந்திரம்..
ஃபோகஸ் செய்து கொள்ள தத்துவார்த்த கட்டுரை அல்ல.. என் சாதாரணக் கருத்து
கருத்துரையிடுக