திங்கள், 15 ஜனவரி, 2018

ஞாநி.....



Image result for GNANI STILLS


ஞாநி.. பல ஆண்டுகளாக ஞாநியின் கட்டுரைகள் வாசித்து வந்தாலும் இலங்கை தமிழ் போராளிகளை ஒட்டி அவர் எழுதிய ஒரு நாவல் முக்கியமானது .. அதனால் அவரை நேரில் பார்க்க ஆசை பட்டேன் .. அதற்கு ஒரு சந்தர்ப்பம் எனது நாவல் மூலம் வந்தது ..

எனது முதல் நாவலான ''நவீன கற்காலம் புத்தகத்திற்கு அவரின் அணிந்துரையை வேண்டி அவரை சந்தித்தித்தேன் .2003 ஆண்டில் அந்த நாவல் வெளி வந்தது அதற்கு வெளியீட்டுவிழா வைக்கச்சொன்னார் அதை நான் நிறைவேற்ற வில்லை .. ஒரு முறை புத்தக கண்காட்சியில் பழ நெடுமாறனிடம் என்னை அறிமுக படுத்தி வைத்தார் ''சார்.. நான் இப்பதான் எழுதிட்டு வர்றேன் ''  என்று நெளிந்தேன் ..

கடந்த சில காலம் அவர் நோயுற்ற பிறகு பார்க்க .. முடியவில்லை இடது சாரி விஷயங்கள் போன்று எத்தனையோ விஷயங்கள் பரிமாறிக்கொண்டோம் ..  பெரிய மேதாவி அவர்... ஆனால் என்னை போன்றவர்களிடமும் சரிசமமாக பேசுவார்... அத்தனை எளிமை     .. DOWN TO EARTH PERSONALITY... 

அன்னாருக்கு அஞ்சலி 

2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

ஞாநி அவர்களுக்கு அஞ்சலி
//பல ஆண்டுகளாக ஞாநியின் கட்டுரைகள் வாசித்து வந்தாலும் இலங்கை தமிழ் போராளிகளை ஒட்டி அவர் எழுதிய ஒரு நாவல் முக்கியமானது .. //
இலங்கை தொடர்பாக அவர் எழுதிய நாவல் மட்டுமல்ல, அவர் எழுதிய ஒரு நாவலும் நான் படித்திருக்கவில்லை.
அவர் தெரிவித்த சில கருத்துக்கள் படித்திருக்கேன். நன்றாக இருந்தது.
இலங்கை தொடர்பாக அவர் தெரித்த கருத்துக்கள், தமிழக அரசியல்வாதிகளின் சுயநல அடிப்படையிலான தமிழ் இன வெறி கருத்துக்கள் போல் அல்லாது ஆக்கபூர்வமான கருத்தாக இருந்தது.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேகநரி....அவர் எழுதிய தவிப்பு நாவல் படித்துப்பாருங்கள்