வெள்ளி, 26 டிசம்பர், 2014

பாலச்சந்தரும் கமலும்

பாலச்சந்தர் இறுதி ஊர்வலத்தில் கமலால் கலந்து கொள்ள முடியவில்லை அவர் அமெரிக்காவில் இருப்பதால்.
Image result for balachander

K. Balachander directed and Kamal Haasan appears in Moondru Mudichu, Ek Duuje Ke Liye, and other movies.

அதையொட்டி அவர் பேட்டியை ஒளிபரப்பினார்கள்

"...அவர் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள இயலாமல் அவர் சொல்லிக்கொடுத்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன்... அதுவே அவருக்கு அஞ்சலி " என்றார்..

சற்று நேரம் குறுகுறுத்தது..   கமல் ஒரு கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்

அவர் கூறிய பிறகுதான் பாலச்சந்தர் மேல் மரியாதை மேலும் கூடியது... அன்னாருக்கு அஞ்சலிகள்

வியாழன், 18 டிசம்பர், 2014

கற்பனையில் நடக்குமா....?

கற்பனை செய்துபார்க்க முடியாத கொடூரம் பேஷாவர் நகரின்  ராணுவப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான   தாக்குதலில், 132 குழந்தைகள் உட்பட 141
  பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்கிற செய்தியை நம்பவே முடியவில்லையே..

வியாழன், 4 டிசம்பர், 2014

மாபெரும் ஜனநாயகவாதி கிருஷ்ணய்யர்

மாபெரும் ஜனநாயகவாதி, முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி,  மிகப் பெரிய மனிதாபிமானி திரு கிருஷ்ணய்யர் இன்று மறைந்தார்..


V.R.Krishna Iyer.jpg

 கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மந்திரிப் பதவி வகித்தவர் - எத்தனை பெரிய அரசியல் பண பலம் பொருந்தியவர்களையும்  நீதியின் முன் சமம் என்றவர்   - மரண தண்டனைக்கு எதிரான பலமான குரல் எழுபபியவர்...

அன்னார் மறைந்தாலும் அவர் எழுப்பிய ஜனநாயகக் குரல் தொடர்ந்து மக்களால் எடுத்துச் செல்லப்படும்... அவர் கனவை மக்கள் வருங்காலத்தில்  நிறைவேற்றுவார்கள்..

அன்னாருக்கு அஞ்சலி

செவ்வாய், 25 நவம்பர், 2014

இரண்டு விஷயங்கள்...

சில நேரங்கள் இணையத்தில்  உலவும் போதும் காட்சி ஊடகங்கள் பார்க்க நேரும் போதும் கீழ் கண்ட விஷயங்கள் பாதிக்கின்றன எழுதத்  தூண்டுகின்றன... திடிரென்று என்ன என்று கேட்காதீக்ள்..  

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இந்தியும் இந்தி பேசும் மக்களும்...

பீஹார் மாநிலத்தில் ஒரு டாக்டர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தாராம்.. ஒரே நாளில் 83 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உலக சாதனை புரிய   ஆசைப் பட்டு ஏழைப்பட்ட சனங்கள் 11 பேரை காவு வாங்கியிருக்கிறார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்களாம்..

புதன், 12 நவம்பர், 2014

உங்களை நம்பி.....

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞனாம் கலைஞானி 
கமல் ஹாசன் அவர்களுக்கு அகவை 60 பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Image result for kamal photos

மகாநதி விருமாண்டி அன்பே சிவம் போலப் படங்கள் மென்மேலும் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு தருவதற்கு உங்களால்தான் முடியும்...

அந்தப் பாதையில் மென்மேலும் சிறக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

புதன், 5 நவம்பர், 2014

இன்னமும் தீட்டப் பட வேண்டிய ‘கத்தி‘

கமர்சியல் இயக்குனர்களில் முருகதாசின் உலகம் சற்று வித்தியாசமானதுதான்... தனக்கென சில சிந்தனைகளை கொண்டிருப்பவர் முருகதாஸ்...