ஒரு டிராக்டர்
வாங்கியதற்கான மாதத் தவணை கட்டவில்லை அதுவும் இரு தவணைகள் என்பதற்காக தஞ்சை பாப்பாநாட்டில்
பாலன் என்கிற விவசாயியை போலீஸ் போட்டு “புரட்டி“ எடுத்ததை டிவியில் போட்டுக் காட்டினார்கள்..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
செவ்வாய், 15 மார்ச், 2016
விவசாயி விசய் மல்லையா….
சனி, 13 பிப்ரவரி, 2016
விசாரணை......
பீரியட் (PERIOD) படம் என்பார்கள்... அதைத்தான் கூறுத் தோன்றுகிறது... விசாரணை படம் பார்த்த பிறகு...
லேபிள்கள்:
சமூகம்
,
திரைப்படம்
,
வெற்றிமாறன்
புதன், 3 பிப்ரவரி, 2016
பழ கருப்பையாவும் கரன்தப்பார் பாண்டேயும்
பழ கருப்பையாவுடனான
தந்திடிவி பாண்டேயின் கேள்விக்கு என்ன பதில் பார்த்தேன் சற்று தாமதமாக… அதைப் பற்றிய
விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் நிறையவே வந்து விட்டது… பாண்டே அப்படி பேசினார் இப்படி பேசினார்… எதிராளிகளை
காயப் படுத்தும்படி பேசுகிறார்.. உடல் மொழியால் அச்சுறுத்துகிறார்…. பழ கருப்பையா எப்படிப்பட்ட
சுதந்திர சிந்தனையாளர் அவரைப் போய்… என்றெல்லாம் படிக்க நேர்கிறது…
பாண்டே உண்மையில்
தமிழக டிவி உலகில் ஒரு கரன்தப்பாராக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்… அது ஒன்றும்
தவறல்ல… மேலும் அப்படி DEVIL’S ADVOCATE ஆக இருப்பதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் பொதுக்
கருத்துருவாக்கம் ஏற்பட காரணியாக இருக்கும்… ஆனால் பேட்டியில் பழ கருப்பையாவிடம் பெற
வேண்டியதை பாண்டே பெற்றுத் தந்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது….
பழ கருப்பையா நிச்சயமாக
ஒரு சிந்தனையாளர், அறிஞர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை…. அதிமுகவில் சேர்ந்ததற்கான
ஆயிரம் காரணங்கள் பழ க அடுக்குகிறார்… அவர் ஏன் சேர்ந்தார் என்பதைப் பற்றிய தெளிவாக ஏற்றுக்
கொள்ளும் ஒரு காரணம் சொல்ல இயவில்லை… காரணம் ஜெ யோ அதிமுகவோ இன்று நேற்று வந்த கட்சியல்ல
கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கட்சி… ஜெ பற்றித் தெரிந்துதான் அவர் சேர்ந்திருக்க
வேண்டும்…. அதனால்தான் இன்று பேட்டியைவிட்டு வெளிநடப்பு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிக்கிறது….
தமிழக அரசியல் நிலை இதுதான்
என்பது தெரிகிறது….
திங்கள், 11 ஜனவரி, 2016
ஜல்லிக்கட்டுக்கு ஒரு மல்லுக் கட்டு....
அப்பப்பா.... எத்தனை பேச்சுவார்த்தைகள்... எத்தனை கோரிக்கைகள்... ஒரு வழியாக ஜல்லிக்கட்டை மத்திய அரசு அனுமதித்து விட்டது....
லேபிள்கள்:
அரசியல்
,
சமூகம்
,
சாதி
,
ஜல்லிக் கட்டு
வெள்ளி, 25 டிசம்பர், 2015
மருத்துவ உலகமும் சமூகமும்.....
மருத்துவ உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நம்மைப் போன்ற
மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மிடில் கிளாஸ் மூளைக்கு என்ன தெரிந்துவிடப் போகிறது
என்பது என்னவோ உண்மைதான்… ஆனால் இந்த INTERNET உலகத்தில் உலகம் முழுவதும் கம்ப்யூட்டரைத்
திறந்ததும் சென்னை மழைப் போல கொட்டித் தீர்க்கிறதே…. நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது..
லேபிள்கள்:
அலோபதி
,
சமூகம்
,
மருத்துவம்
வியாழன், 17 டிசம்பர், 2015
தீர்ப்பு....
2006 ஆம் ஆண்டு கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஓர் அரசாணையை கொண்டு வந்தார்... அதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. அதையொட்டி உச்ச நீதி மன்றம் தற்போது தீர்ப்பளித்திருக்கிறது,,
லேபிள்கள்:
ஆகமம்
,
உச்ச நீதிமன்றம்
,
சமூகம்
சனி, 5 டிசம்பர், 2015
whatsAppம் facebookக்கும்.....
பெரிதாக எள்ளி நகையாடப்பட்ட இரண்டு சமூக பிணையங்கள் அதாவது social network நமது காலத்தில் whatsapp facebook ஆகியவை...
“எப்ப பாரு whatsappல எதாவது நோண்டிக்கிட்டே இருக்கா ...”என்கிற புலம்பல்கள் அவ்வவ்போது கேட்க நேரும்... பல பெரியவர்கள் தங்களால் இயலவில்லை என்ற நோக்கில்கூட அலுத்துக் கொள்ளவதை பார்க்க நேர்ந்திருக்கிறது...
ஆனால் சென்னை பெருவெள்ளத்தில் பலரை ஒரே மேடையின் கீழ் கூட வைத்து அனைவரையும் பின்னிப் பிணைந்து தனி ராஜாங்கமே நடத்திக் காட்டியிருக்கிறது அதன் மூலம் பலரை காத்திருக்கிறது whatsapp மற்றும் facebook...
எத்தனை தேவைகள் பரிமாறப் பட்டிருக்கின்றன.. எத்தனை உதவிகள் கேட்கப் பட்டிருக்கின்றன.. எத்தனை பேரிடர் செய்திகள் அதை களையும் செய்திகள் உடனுடக்குடன் அனைவரும் காணும் வண்ணம் பகிரப் பட்டிருக்கின்றன...
அனைவரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டிய ஒரு விஞ்ஞான வளர்ச்சி...
விஞ்ஞானத்தின் இந்த வளர்ச்சியை நாம் போற்றுவோம்..
வாழ்க whatsapp...
வாழ்க facebook....
லேபிள்கள்:
சமூகம்
,
சோசியல் நெட்வொர்க்
,
மக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)