புதன், 6 ஏப்ரல், 2016

வாய்விட்டுச் சிரிக்கலாம்......

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், சில விஷயங்கள் நம்மை வாய் விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன... அவற்றில் கீழ்கண்ட இரண்டு விஷயங்கள்... ஒன்று போராளி கண்ணையாகுமாரை SPOOF செய்து வெளியிடப்பட்ட விளம்பரப் படம் யாத்ரா டாட் காம் குழுவால் தயாரிக்கப்பட்டது.. இன்னொன்று இன்று இந்து நாளேட்டில் வந்த கார்ட்டூன் படம்..

உண்மையைச் சொல்லுங்கள் கண்ணையாகுமார் இந்தியாவின் இளவரசர் ராகுல் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.. பாவம் அவருக்குச் சுதந்திரம் கிடையாதாம்..  இன்னொன்று சமீபத்தில் பா.ச.க வின் அதிரடி..... பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லாவிட்டால் இந்தியாவில் வாழவே கூடாதாம்..

எத்தனை பெரிய கேலிக்கூத்து.... HYPROCRICY....   



செவ்வாய், 29 மார்ச், 2016

நம்மைப் போல் ஒருவன்....

எதற்காக ....?
எதன் பொருட்டு .....-
என்ன பயன்.....?

அந்தோ... தற்போதுதான் சென்னை வந்திருக்கிறார் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க...
Image for the news result
Image for the news result

அந்தச் சிசு என்ன பாவம் செய்தது...

உன்னைப் போல் ஒருவன் படம் வந்தபோது எத்தனை எதிர் விமர்சனங்களை பார்க்க நேரிட்டது...  நெஞ்சில் சிறிதளவாவது மனசாட்சி இருப்பவர்கள்  சொல்லுங்கள் கமலின் அறச் சீற்றம் சரிதானே...
Image result for kamal in unnaipol oruvan
Image result for kamal in unnaipol oruvan

புதன், 23 மார்ச், 2016

மீண்டும் பாண்டவர் அணி….?

ஒரு வழியாக கேப்டன் ஒரு முடிவு எடுத்துவிட்டார்… மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி என்று….

வியாழன், 17 மார்ச், 2016

இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே....

வனது இரத்தத்தை...

அவளது கண்ணீரை...

பார்க்க கண்கள் இல்லை...


துடைக்க கைகள் இல்லை...


பேச வாயில்லை...


நினைக்க இதயமும் இல்லை...


இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே


- பழநிபாரதி

(நன்றி பழநிபாரதி மற்றும் திருச்சி AIBSNLOA தோழர்கள்)

செவ்வாய், 15 மார்ச், 2016

விவசாயி விசய் மல்லையா….


ஒரு டிராக்டர் வாங்கியதற்கான மாதத் தவணை கட்டவில்லை அதுவும் இரு தவணைகள் என்பதற்காக தஞ்சை பாப்பாநாட்டில் பாலன் என்கிற விவசாயியை போலீஸ் போட்டு “புரட்டி“ எடுத்ததை டிவியில் போட்டுக் காட்டினார்கள்..

சனி, 13 பிப்ரவரி, 2016

விசாரணை......

பீரியட் (PERIOD) படம்  என்பார்கள்...  அதைத்தான்  கூறுத் தோன்றுகிறது... விசாரணை  படம் பார்த்த பிறகு...

புதன், 3 பிப்ரவரி, 2016

பழ கருப்பையாவும் கரன்தப்பார் பாண்டேயும்


பழ கருப்பையாவுடனான தந்திடிவி பாண்டேயின் கேள்விக்கு என்ன பதில் பார்த்தேன் சற்று தாமதமாக… அதைப் பற்றிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் நிறையவே வந்து விட்டது…  பாண்டே அப்படி பேசினார் இப்படி பேசினார்… எதிராளிகளை காயப் படுத்தும்படி பேசுகிறார்.. உடல் மொழியால் அச்சுறுத்துகிறார்…. பழ கருப்பையா எப்படிப்பட்ட சுதந்திர சிந்தனையாளர் அவரைப் போய்… என்றெல்லாம் படிக்க நேர்கிறது…

பாண்டே உண்மையில் தமிழக டிவி உலகில் ஒரு கரன்தப்பாராக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்… அது ஒன்றும் தவறல்ல… மேலும் அப்படி DEVIL’S ADVOCATE ஆக இருப்பதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் பொதுக் கருத்துருவாக்கம் ஏற்பட காரணியாக இருக்கும்… ஆனால் பேட்டியில் பழ கருப்பையாவிடம் பெற வேண்டியதை பாண்டே பெற்றுத் தந்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றியது….

பழ கருப்பையா நிச்சயமாக ஒரு சிந்தனையாளர், அறிஞர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை…. அதிமுகவில் சேர்ந்ததற்கான ஆயிரம் காரணங்கள் பழ க அடுக்குகிறார்… அவர்  ஏன் சேர்ந்தார் என்பதைப் பற்றிய தெளிவாக ஏற்றுக் கொள்ளும் ஒரு காரணம் சொல்ல இயவில்லை… காரணம் ஜெ யோ அதிமுகவோ இன்று நேற்று வந்த கட்சியல்ல கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் இருக்கும் கட்சி… ஜெ பற்றித் தெரிந்துதான் அவர் சேர்ந்திருக்க வேண்டும்…. அதனால்தான் இன்று பேட்டியைவிட்டு வெளிநடப்பு செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிக்கிறது….


தமிழக அரசியல் நிலை இதுதான் என்பது தெரிகிறது….