திங்கள், 1 மே, 2017

மாற்றான் தோட்டத்து மல்லிகை....

இந்த படத்தில் முதல் பாகம் வந்த பொது நான் பார்க்கவே இல்லை... ''அட போயா..... இந்த காலத்துல நல்ல சமூக படம் எதார்த்த படம் குடுக்காம சில தெலுங்கு காரங்க நம்ம தமிழ் நடிகரை வெச்சு என்னமோ பேண்டஸி பண்றங்க ..'' என்று என் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு  படம் வந்து பல நாட்களை பார்க்காமல் இருந்தேன்.... ஆனால் ஆனால் பார்த்தபிறகு தான் நான் தவறு செய்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன் .....
Image result for BAAHUBALI 2 STILLS

நிச்சயமாக ராஜ் மௌலி வித்தியாசமான படைப்பாளி தான் சந்தேகமே இல்லை...... தெலுங்கர்கள் என்று வேண்டுமானாலும் நாம் வெற்று வெறுப்பு காட்டலாம் ஆனால் இந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கவே செய்கிறது 


வியாழன், 30 மார்ச், 2017

பின் தொடரும் நிகழ்வின் குரல்கள் ...

எனது இளம் பருவக் கோளாறின் வயதில் பொது உடமை பூதம் என்னை ஆட்டிப்படைத்து .. அப்போது பெரியார் திடலில் ஆந்திர புரட்சிகர பாடகர் கத்தர் நிகழ்ச்சி நடைபெற்றது ..  தெலுங்கில் அவர் பல பாடல் பாடினார் .... அனைவரும் கைதட்டினர் .. CPI CPM  உள்ளிட்ட பல முற்போக்கு தோழர்கள் வந்திருந்தார்கள்.. தற்போது வந்த செய்தி இது 
    http://www.hindustantimes.com/india-news/maoist-idealogue-singer-gaddar-turns-to-spirituality-politics/story-izo2KYCq1ebyr8btHPCIqI.html


அவர் வேதம் படிக்கச்சொல்கிறார் ஆங்கிலம் படிக்கச்சொல்கிறார் ...மழை வேண்டி கோவில் கோவிலாக செல்கிறார் முற்றிலும் ஆன்மீகவாதியாக மாறியே விட்டார்...  எனக்கு ஜெயமோகன் தான் நினைவுக்கு வருகிறார் அவரின் பின் தொடரும் நிழலின் குரலில் நாயகன் அருணாச்சலம் நினைவுக்கு வருகிறார். ஜெயமோகனை பலர் விமர்சனம் செய்வதை விட வசை பாடுவதே அதிகம் அவர் சில சமயம் உண்மையை போட்டு உடைப்பதால் கூட இருக்கலாம் 

ம்ம்ம் ...
என்னத்தை சொல்ல ...

ஞாயிறு, 26 மார்ச், 2017

மாநகரம்....

Maanagaram Movie

மாநகரம் மற்றொரு இளம்புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முயன்றிருக்கும் ப்ளாக் காமெடி வகை படம்..

சமீபகாலமாக பல ப்ளாக் காமெடி வகைப்படங்கள் பார்க்க நேர்கிறது.. பெரும்பாலும் புது இளம் இயக்குனர்கள்... சூது கவ்வும் நடுவில கொஞ்சம் பக்கத்தக்காணோம் மூடர்கூடம் போன்றவை.. கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் அந்த வகைதான்..

இந்தப் படத்தைப் பொருத்த வரையில் எத்தனை புதிய நாயகர்கள் வந்தாலும் உண்மையான கதாநாயகன் சார்லிதான் என்பேன்.. படத்தின் மையமே அதுதான் என்று கூறத் தோன்றுகிறது... உலகில் எத்தனை அயோக்கியர்கள்  அயோக்கியத்தனங்கள் நடக்கின்றன என்றாலும் நாம் அவற்றை பார்க்கும் விதம் என்கிற கோணம் என்கிற ரீதியில் சார்லியின் வசனம் இதயத்தை தொடும் சங்கதி... படம் முழுவதும் சார்லி சிறு நேரமே வந்தாலும் அவரின் பாடி லாங்வேஜ் அசத்தல்.. உலகம் எப்படி இருந்தால் என்ன.. நான் நேர்மையாக இருப்பேன் என்கிற வெள்ளேந்திப் பார்வை..

பலே..
தமிழ்ப்படங்கள் முன்னேறி வருகிறது என்பதற்கு சாட்சி என்றே சொல்லத் தோன்றுகிறது 

வெள்ளி, 24 மார்ச், 2017

அசோகமித்திரன் ....

என்ன சொல்வது மனுஷ்யபுத்திரன் அஞ்சலியைவிட வேறு வார்த்தை இல்லை     நன்றி  மனுஷ்யபுத்திரன் 
=================================================
ஒரு சிறிய ஸ்டாம்பின்
பன்புறம் எழுதக்கூடிய அளவு
எவரும் எவரிடமும்
திரும்ப வர முடியாத அளவு
அவ்வவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை எனில்
சிறிய அன்பும்
சிறிய வருத்தங்களும்
சிறிய திருட்டுகளும்
நமக்குப்
போதும்தானே..(மனுஷ்யபுத்திரன்)"
Image result for ashokamitran


ஞாயிறு, 12 மார்ச், 2017

தேர்தல் பாடம்....

வட மாநில தேர்தல்கள் சற்றே ஆழமாகப் பார்த்தால் பெரிய வியப்பெல்லாம் இல்லை....

அதே சமயம் பாஜகவினர்கள் கூறும்படி அவர்களுடைய demonitizationக்கு ஆதரவான அலையாகவும் தெரியவில்லை,,

முதலில் உ.பியில் அந்த முலயம் குடும்பம் போட்டுக் கொண்ட குழாயடிச் சண்டை... அப்போதே இது வெறும் யாதவ் குடும்ப பிரச்சனையாக சந்தி சிரித்தது.. மக்கள் இவர்களை நம்பவில்லை .. அதனால் வேறு வழியில்லாமல் பாஜக என்று மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.. மாயாவதியின் வாக்கு எந்திரக் குற்றச்சாட்டு நமது புரட்சித் தலைவி பாணியில் சொல்லி முடித்துக் கொண்டார்.   ஆக இப்படித்தான் உ,பியைப் பார்க்க வேண்டும்.. 

உத்தரகாண்டில் ANTI INCUMBANCY என்பதுதான் காரணம் எனலாம்

பஞ்சாப்பில் காலூன்ற இயலவில்லை.. காரணம் அதன் தனித்துவம்..

கோவாவில் இழுபறி மற்றும் அதே ANTI INCUMBANCY பிரச்சனை

மணிப்பூரில் தனித்துவமான தன்மை..

அதனால் இது பாஜகவின் கொள்கைகான வெற்றி  என்று எடுத்துக் கொள்ள முடியாததான்...

அதே சமயம் சில விஷயங்கள் சற்றே ஆச்சரியமும் அதிர்ச்சியும் 

முதலில் உ,பியின் முஸ்லிம்களின் ஓட்டை பாஜக பெற்றது எப்படி என்பது... முழுக்க முழுக்க முஸ்லிம் மக்கள் ஜனநாயகத்தை விரும்புவதைத்தான் இது காட்டுகிறது..

இரண்டாவது ஐரோம் ஷர்மிளா - அவர் ஏதோ நாளை மணிப்பூர் முதல்வர் ஆகிவிடுவார் என்றே ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.. 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம்... அப்படியென்றால் மக்களுடன் CONNECT ஆகாமல் அவர் ஏதோ வீம்புக்காக இருந்ததைப் போன்றே தோன்றுகிறது...

மூன்றாவது.. வடிவேலை வைத்து மீம்ஸ் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது... அதாவது.. இந்த மாநிலங்களில் இன்னமும் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ஓட்டை எண்ணவே ஆரம்பிவில்லை என்று சிரிப்பாய்ச் சிரிக்கிறது..

 இதிலிருந்து அரசியல் இயக்கங்கள்  பாடம் கற்கவேண்டும்

வியாழன், 16 பிப்ரவரி, 2017

அரங்கு இன்றி வட்டாடும் தமிழகம் .....

தமிழ் நாட்டில் நடைபெறும் கூத்து ஆந்திராவில் முன்பு நடந்தவை தான்... எந்த கொள்கைகள் இல்லாமல், வெற்று கோஷத்துடன், ஊழல் செய்யும் நோக்கோடு, தனிநபர் கவர்ச்சியின் மூலம் நடக்கும் அனைத்தும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு நல் உதாரணம் தான்....  இனியாவது தமிழகம் திருந்தும் என்று நம்பலாம் ..

தொல் திருமா அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை.... இந்த தீர்ப்பு ஒரு தனி நபர்களை மட்டுமல்ல, ஒரு அரசை ஊழல் என்று சுட்டுகிறது. அதனால் தற்போதைய அரசு தார்மிக முறையில் ராஜினாமா செய்து தேர்தலை சந்திப்பதே சரியானது என்கிறார்... அவர் கருத்து தான் சரியானது 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

டிரைலாஜி (TRILOGY)...

பணியிடம் மாற்றத்தால் எதையும் எழுத முடியவில்லை.. ஆனால் பார்க்க முடிந்தது..  குறிப்பாக புரட்சி என்றால் என்ன  போராட்டம் என்றால் எப்படி இருக்கும் ....?  ஜல்லிக்கட்டுக்காக   மாணவர்கள் இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஒரு மிகப் பெரிய படிப்பினை...

எத்தனை பெரிய போராட்டத்திலும் இப்படிப்பட்ட ஒழுங்கு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.. கடந்த வருடம் மத்திய அரசு வெறும் அனுமதி வழங்கிய போதே நான் இப்படி எழுதியிருந்தேன்::-
ஆனால் அந்தப் பதிவு காய்வதற்குள் மீண்டும் தடை வந்தது.. தற்போது அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.., மக்களின் கோபம் ஏன் என்பதைற்கு பல காரணங்கள் இருக்கிறது

1) கர்நாடகாவின் தண்ணீர் திறப்புக்கு முட்டுக்கட்டை மற்றும் தமிழர்கள் மீதான் தாக்குதல்
2) அரசியல் வாதிகள் சூது, ஊழல், மக்களின் பிரச்சனை மீதான்  மெத்தனம்
3) தமிழக மக்களின்  உண்மையான அபிலாஷைகளை பிரதிபலிக்காமல் வெற்றுக் கூச்சலிடும் சுயநலம் பிடித்த அனைத்து அரசியல் கட்சிகள்
4) நமது அமைப்புகளின் தடித்தனங்கள்

போன்றவை மக்களை கொதிப்படைய செய்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரிகிறது..

ஆனால் மத்திய அரசு அரசாணையை ஏற்றுக் கொண்டவுடன் அப்போதே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.. வழமையான நம்பிக்கையின்மை தலைமையின்மை ஆகிவற்றாலும் போராட்டத்தில் கலந்து கொண்டு அதிருப்தி கொண்ட ‘சிறு குழுக்கள்’ உட்புகுந்து தங்களின் அஜெண்டாவை உட்புகுத்தியதாலும் போலீஸ் தங்கள் வழக்கமான முகத்தைக் காட்டியது... அது ஒரு சோக முடிவு எனலாம்
                                                    +++++++
நான் சமீபத்தில் படித்த ஒரு அற்புதப் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல்.. அப்பப்பா... இத்தனை நாட்கள் இதை வாசிக்காமல் இருந்திருக்கிறேனே என்கிற குற்றவுணர்வுதான் மேலோங்கியது.. பொதுவாக ஜெமோவின் பெரும்பான்மை  படைப்புகள் படித்திருக்கிறேன்.. தினந்தோறம் அவர் வலைத்தளத்தை படிப்பதையே ஒரு கடமையாக செய்து வருகின்றேன்.. ஆனால் அந்த அற்புதப் படைப்பை ஏன் விட்டிருக்கிறேன்..
ஒரு நாவல் என் மனதைப் போட்டு பாடாய்ப் படுத்தும் என்பது ரொம்ப நாட்களுக்குப் பின் தற்போதுதான் பார்க்கிறேன்.. காரணம் எனது முப்பது வயதுகளில் கல்கத்தா நகர் வீதிகளில் UP UP SOCIALISM DOWN DOWN CAPITALISM என்று கத்திக் கொண்டு சென்றவன்தான்... சோவியத் வீழ்ச்சி பற்றி உலகில் சிறப்பான படைப்புகள் வந்திருக்கலாம்.. ஆனால் இந்தப் படைப்பு அதற்கு சற்றும் குறைவில்லாத படைப்பு... என் தொழிற்சங்கப் பணியில் அருணாச்சலம் அளவிற்கு அனுபவம் இல்லைதான்.. ஆனால் ஒரு 5 சதவிகிதம் அனுபவம் இருப்பதால் இது ஒரு ஆன்மாவைத் தொடும் படைப்பு.,, எனது கேள்விகளுக்கு இந்தப் படைப்பு பதில் கூறிகொண்டே செல்வதைக் கண்டு பிரம்மிப்பாக படித்து முடித்தேன்.. மீண்டும் சுவைக்கப் போகிறேன்...
(ஆனால் மார்க்சீய அறிமுகமில்லாதவல்கள், தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்கள், சோவியத் பற்றி அறிமுகமில்லாதவர்கள், படுபிற்போக்கு மதவாத முதலாளித்துவ மனம் கொண்டவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத படைப்பு இது)
                                                     •••••••••••••
க சீ சிவகுமார்... 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரையில் பார்த்தேன்.. முற்போக்கு கலை இலக்கிய அமைப்பில் இருந்தவர்.. அவருடன் பேசிக்       கொண்டிருக்கும் போது அவரின் விஷயஞானத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.. பல நாட்கள் சென்னையில் பார்க்கும் போது அவர் படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறேன்.. வசீகரிக்கும் அவர் எழுத்து நடை எப்போதும் படிக்காமல் விடாது.. அன்னாரின் அகால மரணம் பேரதிர்ச்சிதான்...எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..