திங்கள், 4 செப்டம்பர், 2017

NEET என்பது NEAT ஆக இருந்திருக்கலாமே ...

 NEET பற்றி நான் தான் தாமதமாக எழுதுகிறேன் என நினைக்கிறேன் இந்த விஷயம் ஒரே களேபரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது..

இதுவரை படித்த விஷயங்களிலிருந்து நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம்…
NEET தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??

அணு உலையை தன் மாநிலத்தில் நிறுவ விடாத கேரளாவும் பினராயி விஜயனும் நீட்டை ஏற்பது ஏன்??

ஏற்கனவே தமிழக அரசு மசோதாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் NEETடை அமல் படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளதாம் … அதை செய்யாமல்  விட்டது ஏன்??

அனிதா படித்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு பாடம் சொல்லியே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது NEETல் அதிலிருந்துதான் கேள்விகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது CBSE  சிலபஸ் மட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது  என்பது உண்மையா...

தமிழ்நாட்டு கல்வித்திட்டமே சரியானது என்றால் இதுவரை BITS பிலானியில் ஒருவர் கூட சேர முடியவில்லை என்பது உண்மையா..

தமிழ்நாட்டு கல்வித்திட்டம் பல பத்து ஆண்டுகளை மாற்றப்படவே இல்லை என்பது உண்மையா..

கர்நாடக மாநிலத்தில் மருத்துவ கட்டண கொள்ளை நீட்டிற்கு பிறகு குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது… ஆகவே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தனியார் கல்வி வள்ளல்கள் பின்னணியில் இருக்கலாம் என்பது சரிதானே…

அனிதா டெல்லி சென்று வர விமான கட்டணம் தாங்கும் இடம் எல்லாம் கொடுத்து பின் அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கவில்லை என்ற செய்தி உண்மையா..


கல்வியாளர்கள் என்ற பெயரில் பல NGO-க்கள் இதன் பின்னல் இருக்கிறார்கள் என்பது உண்மையா..

இந்த கேள்விகளை தெரிந்து கொண்ட பிறகு நீட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம் 

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

எது உண்மையான இடம்...?

15 ஆண்டுகளுக்கு முன்பாக கொடுத்த பாலியில் புகார்.. 
ஏற்கனவே கொலைக் குற்றச்சாட்டு வேறு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது...


தண்டனையை அறிவிக்க நீதிபதி சிறைக்கே செல்லவேண்டிய நிலை..
எத்தனை பேர் பலி எத்தனை வாகனம் தீக்கிரை எத்தனை நாசம்

எல்லாம் மனிதக் கடவுளுக்காக..  தேரா சச்சா சௌதா...  உண்மையான இடமாம்..    என்ன உண்மையோ.....

தமிழகத்தில் பிரேமானாந்தா கைது செய்யப்பட்டுள்ளார்...

நித்தியானந்தா புகார் போது அவரது ஆசிரமமே அடித்து நொறுக்கப்பட்டது.

அவ்வளவு ஏன் ஒரு தீபாவளியின் போது சங்கராச்சாரியே கைது செய்யப் பட்டார்..

இங்கே எந்த கலவரமும் இல்லை...  காரணம் பகுத்தறிவு பேசியதால்.. 

அதை நினைத்துப் பெருமையடைவோம்.. பிறருக்கு உதாரணமாக விளங்கினோம்...

வட இந்தியா எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது...




ஞாயிறு, 30 ஜூலை, 2017

விக்ரமும் வேதாவும்

 SUSPENSE AND THRILLER என்கிற இரண்டு வகை உள்ளது என்பார்கள்...



Image result for VIKRAM VEDHA STILLS

SUSPENSE என்பது நடிப்பவர்களுக்கும் தெரியாது அதைப் பார்க்கும் நமக்கும் தெரியாது...

THRILLER  என்கிற வகை அதில் நடிப்பவருக்குத் தெரியாது ஆனால் பார்ப்பவர்களுக்குத் தெரியும் என்பார்கள்...

விக்ரம் வேதா இரண்டும் சேர்ந்த வகை... நல்ல விறுவிறுப்பு...

தமிழில் புதிய முயற்சி... வாழ்த்துக்கள் புதிய படைப்பாளிகளுக்கு...

வியாழன், 13 ஜூலை, 2017

பிக் பாஸ் - முழுச் சாப்பாடு ஊறுகாயாக....

 Image result for big boss stills

பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையாக வரும் முன் கமல் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன்.. பிறகு பார்க்கவில்லை.. ஆனால் சேரி சைவம் போன்று பல விஷயங்கள் நடந்த பின், அதை ஒட்டி கமலின் தன்நிலை விளக்கம், பிரஸ் மீட், அதை ஒட்டி டிவி விவாதம், என்று ஒரு ரவுண்டு கட்டி ஆடுகிறது பிக் பாஸ்...

 என்னை பொறுத்தவரை அந்த நிகழ்ச்சி ஒரு ஊறுகாய் போல அதை முழுவதும் சாப்பாடாக  சாப்பிட முடியுமா ...?

சனி, 3 ஜூன், 2017

கலைஞர் ......

அவர் பெரிய செல்வந்தப்  பின்னணி கொண்டவர் இல்லை.... 
ஜாதி பின்புலம் இல்லை...
 ஜாதி கூட்டமும் பின்னால்  இல்லை....
இவைகள் தேவை இல்லை என நிரூபித்தவர் ... 
மெத்தபடித்தவர் இல்லை.... 
இத்தனை இல்லைகள் இருந்தாலும் தமிழகம் மட்டும் இல்லாமலும் 
இந்திய தேசம் முழுவதும் இவருக்கு இணையான இவர் அளவு உயர்ந்த பெரும் அரசியல்வாதி  எவரும் இல்லை  ........


Image result for kalaignar still



இவர் ஒருவரே எந்த பின்புலமும் தேவை இல்லை உன் ஆற்றல் ஒன்றே நம்பி முன்னேறலாம் என்பற்கான வாழும் உதாரணம் ..... 
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதை புறந்தள்ளி வளர்ந்த பெரும் தலைவர்..... 
EMERGENCY காலத்தில் ஜனநாயகத்தை காக்க நின்ற ஒரே அரசியல் தலைவர்......
ஒரு சாதாரண மனிதனுக்காக எழுதப்பட்ட   குறளோவியம் ஒன்றே போதும் படிக்க படிக்க இன்பம் தரும்  ...

கலைஞர் வாழ்க  

திங்கள், 29 மே, 2017

ரஜினி அரசியல் ....

ரஜினியை பற்றி ஏன் எழுதவில்லை என்று சிலர் கேட்டு விட்டார்கள் .. எல்லோரும் எழுதி விட்ட பிறகு நான் சொல்ல விரும்புவது இதுதான்..
Image result for rajini stills


 ரஜினி அரசியலுக்கு வருவாரா?  அல்லது  வெறும் ஸ்டண்ட்டா …?
1   (1) போர் வரும்போது என்றது..
 (2) ஸ்டாலின் இருக்கும்போது இன்னபிற அரசியல் தலைவர் இருக்கும்போது சிஸ்டம் சரியில்லை என்றது…
3  (3)   நான் நல்லா இருக்கேன் என் ரசிகர்  நல்லா  இருக்கணும் என்றது…
4      (4)   நான் பச்சை தமிழன் என்றது …

ஆகியவை  ரஜினி அரசியலுக்கு வருகிறார்  என்பதையே காட்டுகிறது…. 

அவர் போணி ஆவாரா என்பது அடுத்த விஷயம்… ஆனால் பணம் சம்பாதிக்க நினைக்கிறவர்கள் என்னுடன் வரவேண்டாம் என்பது நல்ல நகைச் சுவை….. ரஜினியின் ரசிகர்கள் என்ன மஹாத்மா காந்தியா..? விவேகானந்தரா? பதவி அதிகாரம் பணம் சம்பாதிக்க நினைக்கும் வேலையற்றோர்  சாதாரண உதிரி பாட்டாளிகள் மிக அதிகம்…. அவர்கள் வருவதே பணம், செல்வாக்கு, பதவி ஆகியவற்றை அனுபவிக்கவே…. அப்படி இருக்கும்போது எதை வைத்து ரஜினி அப்படி கூறுகிறார் என்பது தெரியவில்லை …மேலும் “என் ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டாமா…”  என்பதும் பெரும் முரண்பாடு…. ஆக ஆரம்பமே பெரும் முரணாக தொடங்குகிறது ரஜினியின் அரசியல் பயணம்…..



செவ்வாய், 23 மே, 2017

ராேஜர் மூர்......

ரோஜர் மூர் .....என் கல்லூரி காலத்து நாயகன்..


என்னைப் பொருத்தவரை ஷான் கானரி ப்யிர்ஸ் பிரான்சன் டேனியல் க்ரைக் என எத்தனை கதாநாயகர்கள் வந்தாலும் எனக்கு அன்னார்தான்எம்ஜியார்....

கம்பீரம்..மிடுக்கு...ரோஜர்தான்... தற்போதுபாண்ட் படங்கள் எதைப் பார்த்தாலும் வேடிக்கையாக இருந்தாலும்... ரோஜர் கம்பீரம் "மறக்க மனம்கூடுதில்லையே......"

அன்னாருக்கு அஞ்சலி