இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
திங்கள், 6 ஆகஸ்ட், 2018
மாற்றும் ஏமாற்றும் ...
ஹீலர் பாஸ்கர் கைதை ஒட்டி இந்த மாற்று மருத்துவ முறை விவாத பொருளாக பேசப்படுகிறது ..
நமது வழக்கத்தில் உள்ள அலோபதி மருத்துவ முறை பற்றி அதில் உள்ள குறைகளை பூதகரமாக்கித்தான் இவ்வித மாற்று மருத்துவமுறை பற்றி கதையாடல் பின்னப்பட்டுள்ளது ..
உண்மையில் அலோபதி மருத்துவ முறையில் குறைபாடுகள் இருக்கிறது அதை டாக்டர்களே மறுப்பதில்லை. ஆனால் அவற்றில் உள்ளவை குறைதான் தவிர அந்த மருத்துவ முறை தவறு என்று இந்த புதிய விஞ்ஞானிகள் கூறுவது சற்றும் ஏற்கமுடியாது... அது ஒரு சொத்தை வாதம் .. பெரும் கதை ..
காசு பார்ப்பது விளம்பரம் தேடுவது போன்றவையே இவர்களின் நோக்கமாக உள்ளது .. அலோபதி மருத்துவம் என்பது உலகலாவியது மேலும் மேலும் திருத்தப்படுவது - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டது .. எல்லாவற்றும் மேலாக அலோபதி மருத்துவ முறை என்பது வெளிப்படையானது - மூடு மந்திரமில்லாதது என்பதை உணரவேண்டும் ..
அதை விடுத்தது அதன் மேல் சேற்றை வாரி இறைத்து இந்த மாற்றுக்கள் சொல்பவர்கள் முதலில் தங்களை நிரூபிக்கட்டும் ..
அதை விடுத்தது மனித உயிர்களுடன் விளையாடக்கூடாது ...
லேபிள்கள்:
சமூகம்
,
மருத்துவ முறை
,
விஞ்ஞானம்
வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018
கலைஞர் ....

கலைஞரின் வயோதிகமும் நோயும் அவரை துவள வைத்திருப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது
கலைஞரின் உடல் நலிவு பற்றி பலரும் பல விமர்சனங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் சொல்லி விட்டார்கள் ..
முன்பு அசமத்துவத்திற்கு ஆதரவானவர்கள் அவரை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் .. இப்போதும் அவ்வாறே அந்த வகையில் எதிர்க்கிறார்கள்
தற்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு என்று எதிர்ப்பவர்கள் சிலர் உண்டு
தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களிடம் பேதமில்லை என்கிற பார்வையே கொண்டிருந்தார் என்னை பொறுத்த வரை அதுதான் என் மனதில் கோபுரமாக அவரை உயர்த்தி வைத்திருக்கிறது
. தமிழகத்தில் எனக்கு தெரிந்த உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளிடையே இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம் (கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தவிர ..)
அவரிடம் உள்ள ஒரே குறை அவர் ஆட்சியில் இருந்த போது இந்த கொள்கையை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அது அவரின் தவறல்ல என்றாலும்..... அதே சமயம் அவர் குடும்பத்தினரின் அலைக்கழிப்புக்கு ஆளானர் என்பதும் ஒரு சோகமே ..
எப்படி இருந்தும் கலைஞரின் இந்த நலிவு வேதனை அளிக்கிறது
செவ்வாய், 24 ஜூலை, 2018
உண்மை சுடும் ...
https://tamil.thehindu.com/ india/article24500604.ece
இன்றைய இந்து நாளேட்டின் சுட்டி ...
இன்றைய இந்து நாளேட்டின் சுட்டி ...
அப்போது எத்தனை பொய்கள் சொன்னீர் ...இப்போது நிலத்தடி வாரியம் யார் தலைமையில் இயங்குகிறது ...மத்திய அரசின் கீழ் இயங்குகிறது ...அப்போது அதுதான் அரசின் அதிகார பூர்வ கருத்து.....
இந்த கருத்தை சொன்னவன் தீவிரவாதி கிறிஸ்துவ மதவாதி பாதிரியாரிடம் பணம் வாங்கினவன் என்று எத்தனை அவதூறு... அவதூறின் எல்லைக்கே சென்றீர்கள் ....இப்போது மத்திய அரசை அப்படி சொல்லுங்கள் பாப்போம்....
மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா இத்தனை பேரை சுட்டு கொன்றீர்கள் ..
..ரஜினியை விட்டு போராட்டம் செய்பவர்கள் சமூக விரோதி என்றீர்களே .. மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா சமூக விரோதி பட்டம் ...
ஏதோ எவனோ எடுத்த பொய் வீடியோ போட்டு காட்டினீர்கள் எத்தனை பொய்கள் இப்பொது உண்மை உங்கள் முன் வெளிப்பட்டு நிற்கிறதே பொய் அம்பலப்பட்டு பல் இளிக்கிறதே ...
..புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் இனியாவது
லேபிள்கள்:
போராட்டம்
,
மக்கள்
,
ஸ்டெர்லைட்
வியாழன், 28 ஜூன், 2018
என்றெமதன்னை கை விலங்குகள் போகும் ....
திங்கள், 11 ஜூன், 2018
காலா.....
இன்றைய தினங்களில் வரும் பல குப்பை படங்களில் காலா சற்றே வித்தியாசமான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..
மேலும் எங்களது இலாகாவின் தொழிற்சங்க முன்னணி தோழர் ஆதவன் தீட்சண்யா வசனம் எழுதியுள்ளார் .....
வசனங்களும் மிக கூர்மையாக உள்ளது ....பெரும் பிரச்சார நெடி வாராமல் ஒரு படத்தை எடுப்பது மிக சிரமம்... அதை இயக்குனர் பா ரஞ்சித் நேர்த்தியாக செய்துள்ளார்...
ரஜினி இந்த படத்தில் இயக்குனருக்கு அடங்கி நடித்திருப்பதை போலத்தான் தெரிகிறது
இருந்தாலும்... இருந்தாலும்..... அவர் இயக்கிய மெட்ராஸ் மனதில் ஒட்டியதை போல மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அதே கலைத்தன்மை அவரின் அடுத்த படைப்பில் தருவார் என்கிற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்துக்கள்
லேபிள்கள்:
திரைப்படம்
,
ரஞ்சித்
,
ரஜினி
ஞாயிறு, 3 ஜூன், 2018
தலைகீழ் உலகம்.....
தந்தி டிவியில் வைகோவுடனான பாண்டேயின் கேள்விக்கென்ன பதில் பார்க்க நேர்ந்தது..
முதல் முறையாக பாண்டேயின் மீதான நம்பிக்கைத் தளர்ந்தது.. அதே சமயத்தில் இது நாள் வரை வைகோவைப் பற்றி சமூக ஊடகங்கள் எத்தனை மீம்ஸ்கள் கேலிகள் கிண்டல்கள் என அவரை நோகடித்திருக்கிறார்கள்...
அவர் தமிழரில்லை என்று வேறு அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்... அவர் ஒரு பஃபூன் போல எத்தனை சித்தரிப்புகள்... ஆனால் நேற்று அவர் பேட்டியைப் பார்த்த போது இது ஒரு குருட்டு உலகமடா என்கிற வேதனைதான் மிஞ்சியது..
வைகோ அத்தனை உண்மையும் போட்டு உடைக்கிறார்.. அதனால்தான் அவரை கோமாளி என்கிறார்கள் ..
மனதில் பட்டத்தை உள்ளொன்று வைத்து புறம் பேசத் தெரியவில்லை அதனால் அவரை பஃபூன் என்கிறார்கள்...
இதுதான் உலக நியதி போலும்...
எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத எந்த மக்கள் பிரச்சனைகளையும் பற்றித் தெரியாத வயதாகிய பிறகு இளைப்பாருவோமே என நினைப்பதற்கு அரசியல் என்பது பொழுது போக்கு அல்ல...
அது ரத்தம் சிந்தாத யுத்தம் என்பதே தெரியாது ஆளும் வர்க்கம் சொன்னதை கடமையாக ஏற்று மக்களுக்கு உபதேசம் செய்துவிட்டு போகும் மேனாமினிக்கிகள் எங்கே...
வாழ்நாள் முழுவதும் மக்கள் பிரச்சனைகள் என அலைந்து பல வழக்குகள் பல அச்சுறுத்துதள் சந்தித்து வரும் வைகோ எங்கே...
உண்மையான கதாநாயகன் இவர்தான்.... ஆனால் நாம் பொய்களின் பின்னால் அணிவகுக்கிறோம்...
வைகோ போன்ற முற்போக்கு சக்திகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற மக்கள் நேசர்கள் பக்கம் நிற்பதால் மட்டுமே சாதாரண சாமானிய மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது எத்தனை எளிய உண்மை....
THE GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH.....
லேபிள்கள்:
சமூகம்
,
மக்கள்
,
ஸ்டெர்லைட்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)

