புதன், 26 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் ::: பெரிய பிக் பாஸ் நகரம் ..



சிங்கப்பூரைப் பற்றி பல கட்டுரைகள் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு பார்வையில். இது எனது குறிப்பு.  நான் பார்த்த குர்கான் (GURGAON),  மும்பை. பெங்களூர் ஆகியவற்றை கலந்து சுத்தமாக வைத்தால் அதுதான் சிங்கப்பூர்.  சுத்தமென்றால் உங்கவீட்டு சுத்தம் எங்க வீட்டு சுத்தமில்லை..அத்தனை சுத்தம்.  அவர்கள் சுத்தத்திற்கு தரும் முக்கியத்துவதிற்கு ஒரு உதாரணம். ஒரு சீனர் தன்னுடைய 
நாயை அழைத்துவந்தார் ஒரு கையில் 
நாயை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் ஒரு பேப்பரை                         வைத்திருந்தார் ..  ` 

ஒரு வேளை அந்த நாய் ''காக்கா''   போய்விட்டால்,  இவர் தான் அதை 
அப்புறப்படுத்த சுத்தப்படுத்த வேண்டும்..  

அத்தனை பயம்..   சட்ம்.... சட்டம் .... அதை மூர்க்கத்தனமாக     அமல்படுத்துவதில் சிங்கப்பூர் நிர்வாகம் காட்டும்முனைப்பு உண்மையில் வியக்கவைக்கிறது.   சுத்ததிற்கு இன்னொரு உதாரணம்  ஒரு மெட்ரோ ரயில் பிளாட்பாரத்தில் லேசாக தண்ணீர் கொட்டி விட்டது . நான் அதன் அருகே சென்று விட்டேன் உடனே ஒரு சீன பெண் அதிகாரி அலறினாள்.  தன் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து பணியாளரை அழைத்து அதை துடைக்கவிட்டாள் . இந்த களேபரத்தில் அங்கங்கு மைக்கில் அறிவுப்பு அலறல் .. ஒரு சின்ன விஷயத்திற்கு எதோ வெடிகுண்டு வைத்திருப்பதைப்போல 

 சுத்தம் என்றாலும் ஒழுங்கு என்றாலும் சட்டத்தை நீட்டுகிறது சிங்கப்பூர் நிர்வாகம். அதை போல ஒரு இடத்தில் பிரதான ரோட்டிலிருந்து பாத சாரிகள் நடக்கும் ஒரு சிறு பாதை .. அங்கு ஒரு அறிவிப்பு..  இந்த இடத்தில் பெட்ரோல் வாகனமோ பைக்கோ வந்தால் சிங்கப்பூர் டாலர் 55000 அபராதம் அதாவது ரூ 29 லட்சம் ...சொத்தையே எழுதி வைக்க வேண்டும் .. இருந்தாலும் சீனர்களிடம் எனக்கு பிடித்தது .. அவர்கள் சட்டத்தை மதிக்கும் பண்பு மற்றும் பணிவு .  

.இந்த ஊருக்கு வந்தால் பொதுவாக விடுதி எடுத்து தங்குவது சிறப்பு..  பிறர் வீட்டில்  தங்குவது என்றால்...   ஒருவர் OK.. பலர் என்றால் சிங்கப்பூரின் டிஜிட்டல் கண்பார்வையில் தண்ணீர்  மின்சாரம் போன்றவை  எவ்வளவு செலவாகிறது என்கிற அளவீடுகள் காட்டிக்கொடுத்துவிடும். இங்கு காண்டோ டைப் அல்லது ஹவுசிங் போர்டு வீடுகள்..  ஒன்றை போலவே உள்ளது . தற்போது சென்னையிலும் காண்டோ டைப் பிளாட்டுகள் வந்துவிட்டது .. வீட்டு உரிமையாளர்கள் அனுமதி இன்றி யாரும் உள்ளே வரமுடியாது...  வெளியேயும் செல்ல முடியாது .   இங்கு தொலைந்து போய்விட்டார் என்கிற பேச்சே கிடையாது .. காரணம் ஊர் முழுவதும் பிக் பாஸ் வீட்டை போல காமிரா இருப்பதால் காட்டிக்கொடுத்துவிடும் `.

சில தகவல்கள் 
*இங்கு சீதோஷணம் நம் ஊரை போலத்தான் ஆனால் வியர்க்காது ....
*பெரும்பாலான சாலைகள் நான்கு மற்றும் அதற்க்கு மேல்  lane..சாலைகளில் நெருக்கடிகள் இல்லை.....
* அனைத்து வாகனங்களும் 100 கி மி மேல் செல்கிறது .....
நகரம் முழுவதும் இரவில் ஒளிர்கிறது மின் விளக்கால் வண்ண மயம்தான் ....
பெண்கள்  இரவில் எத்தனை  நேரத்திலும் பாதுகாப்பாக அலைகிறார்கள் ஒரு சின்ன EVE TEASING புகார் கிடையாது (காந்தி கண்ட கனவை நினைவாக்கும்  சிங்கப்பூர்
* LITTLE இந்தியா தவிர வேறு எங்கும் காவல் நிலையத்தை பார்க்கவில்லை ஆனால் எங்கும் போலீஸ் உஷார் நிலையில் இருக்கிறார்கள் ..
க்ரைம் ரேட் வெகு குறைவு 

 பிடித்த விஷயம் :: சீனர்கள் சுறுசுறுப்பு பணிவு உழைப்பு 
பிடிக்காத விஷயம்::: காஸ்டலி நகரம் 
வருத்தப்பட்ட விஷயம்::: பெரும்பாலும் உடல் உழைப்பு ஈடுபடுத்தப்படுபவர்கள்  இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் (சாலை பணி,  கட்டுமான பணி )
நண்பர் செந்தில் சொன்னார் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பொய்த்த பின் இங்கு பெரும்மையினர் வேலைக்கு வந்ததாக சொன்னார் 
(நண்பர்கள் சூரி செந்தில் மற்றும் லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றி )

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இறைவன் இருக்கிறானா .....

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

 இது கடந்த காலங்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையிலானது. 

இது இந்திய உள்துறை அமைச்சக தகவல்.(GRIHA MANTHRALAY) 

Image result for ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்கார

இத்தனை பக்தி பழங்கள்  நிறைந்த நாட்டில் இதுதான் நிலைமை என்றால் - இறைவன் இருக்கிறானா என்று கேட்பதை விட வேறு என்ன சொல்ல 

புதன், 5 செப்டம்பர், 2018

அறிவுள்ள பெண்...

  விமான நிலயத்தில்  இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறைமை அதாவது புரோட்டோகால் இருக்கிறது . அதை மீறுவது சரியில்லை என்பது என்னைப் பொறுத்த வரை சரியானதே.

 ஆனால் அதற்கான எதிர்வினை அந்தப் பெண் செய்த செயலைக் காட்டிலும் மோசமானதாகவே படுகிறது.  தமிழக முதல்வரை  சில மாதம் முன்பு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லத் தகாத வார்த்தை சொன்னார்.

 எஸ் வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை அவமதித்தார் என்று வழக்கும் பதியப் பட்டது.

 ஆனால் காவல்துறை என்ன செய்தது என்பது அனைவரும் அறிந்தததே.   இவ்வாறு நடப்பதுதான் உண்மையில் நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு அச்சறுத்தல் என கருதுகிறேன்.

தன்னை நோக்கி சிறு முனகல் கூட தேச விரோதம் என்பேன் அதே சமயம் நான் என்ன அத்துமீறல் செய்தாலும் அது நாட்டுக்கு நல்லது என்கிற மனோபாவம்  பெரும் ஆபத்தானது.  இதுதான் பெரும் கவலையளிக்கின்ற அச்சுறுத்தல்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ரூபம் இரண்டு


Image result for VISHWAROOPAM 2

ஒரு ஆங்கில ஹாலிவுட் படத்தை பார்த்ததை போல உள்ளது ...நேர்த்தி ...

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வெற்றிடம் .....

கண்ணீர் அஞ்சலி 







(படம் நன்றி நக்கீரன் )



தனித்து விடப்பட்டது  இந்த நாற்காலி மட்டும் அல்ல தமிழகமும்  .....


திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மாற்றும் ஏமாற்றும் ...

ஹீலர் பாஸ்கர் கைதை ஒட்டி  இந்த மாற்று மருத்துவ முறை விவாத பொருளாக பேசப்படுகிறது ..


நமது வழக்கத்தில் உள்ள அலோபதி மருத்துவ முறை பற்றி அதில் உள்ள குறைகளை பூதகரமாக்கித்தான் இவ்வித மாற்று மருத்துவமுறை பற்றி கதையாடல்     பின்னப்பட்டுள்ளது ..

 உண்மையில் அலோபதி மருத்துவ முறையில் குறைபாடுகள் இருக்கிறது அதை டாக்டர்களே மறுப்பதில்லை. ஆனால் அவற்றில் உள்ளவை குறைதான் தவிர அந்த மருத்துவ முறை தவறு என்று இந்த புதிய விஞ்ஞானிகள் கூறுவது சற்றும் ஏற்கமுடியாது...  அது ஒரு  சொத்தை வாதம் .. பெரும் கதை ..

காசு பார்ப்பது விளம்பரம் தேடுவது போன்றவையே இவர்களின் நோக்கமாக உள்ளது .. அலோபதி மருத்துவம் என்பது உலகலாவியது மேலும் மேலும் திருத்தப்படுவது - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டது .. எல்லாவற்றும் மேலாக அலோபதி மருத்துவ முறை என்பது வெளிப்படையானது - மூடு மந்திரமில்லாதது என்பதை உணரவேண்டும் .. 

அதை விடுத்தது அதன் மேல் சேற்றை வாரி இறைத்து இந்த மாற்றுக்கள் சொல்பவர்கள் முதலில் தங்களை நிரூபிக்கட்டும் .. 

அதை விடுத்தது மனித உயிர்களுடன் விளையாடக்கூடாது ...

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கலைஞர் ....


Congress president Rahul Gandhi meets DMK supremo M Karunanidhi

கலைஞரின்  வயோதிகமும் நோயும் அவரை துவள வைத்திருப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது 

கலைஞரின் உடல் நலிவு பற்றி பலரும் பல விமர்சனங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் சொல்லி விட்டார்கள் ..   

முன்பு அசமத்துவத்திற்கு ஆதரவானவர்கள்  அவரை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் .. இப்போதும் அவ்வாறே அந்த வகையில் எதிர்க்கிறார்கள்  

தற்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு என்று எதிர்ப்பவர்கள் சிலர்  உண்டு 

 
 தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களிடம் பேதமில்லை என்கிற பார்வையே கொண்டிருந்தார்   என்னை பொறுத்த வரை அதுதான் என் மனதில் கோபுரமாக அவரை உயர்த்தி வைத்திருக்கிறது 

. தமிழகத்தில் எனக்கு தெரிந்த உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளிடையே   இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம் (கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தவிர ..)

அவரிடம் உள்ள ஒரே குறை அவர் ஆட்சியில் இருந்த போது இந்த கொள்கையை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அது அவரின் தவறல்ல என்றாலும்..... அதே சமயம் அவர் குடும்பத்தினரின் அலைக்கழிப்புக்கு ஆளானர் என்பதும் ஒரு சோகமே ..

எப்படி இருந்தும் கலைஞரின் இந்த நலிவு வேதனை அளிக்கிறது