மெட்ரோ ரயில்கள் ஒரு வழியாக (?), பல்வேறு அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி, ஓடத் தொடங்கிவிட்டன... சந்தோஷம்....
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
திங்கள், 29 ஜூன், 2015
சனி, 27 ஜூன், 2015
மனிதாபிமானத்தின் விலை 30 கோடி....
முதல்வர் வசுந்துரா ராஜே அவர்கள் ல்லித் மோடி குடியேற்றப்
பத்திரத்தில் கையெழுத்திட்ட விவகாரத்தில் முதலில் தான் கையெழுத்திடவில்லை
என்றார்.. பிறகு ஆமாம் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டேன்... ஒரு மனிதாபிமான
முறையில் என்றார்... தற்போது ராஜேயின் மகன் துஷ்யந்திற்கு கிட்டத்தட்ட 31
கோடி அளவிற்காக ஷேர்கள் வழங்கப்
பட்டிருக்கின்றன.. கேட்டால் அது ஒரு கிப்ஃட் போலவாம்......
மனிதாபிமானத்தின் விலை 30 கோடி போலும்....(டெல்லி வந்த வசுந்துரா அவர்களை பிரதமர் சந்திக்க மறுத்து விட்டாராம்...)
====================
எமர்ஜென்சி
ஜூன் மாதம் என்றால் எம்ர்ஜென்சியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.... இந்திராகாந்தி அவர்களால் நாட்டில் அவசரநிலை பிரகடனம்
செய்யப்பட்lடது.25 ஜூன் 1975…
நள்ளிரவில் அன்றைய ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமத் இதற்கான ஒப்புதலை அளித்தார்.
விடிவதற்குள் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மொராஜி தேசாய் ஜெயபிரகாஷ்நாராயணன்
ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்திற்கும் மின்சார
சப்ளை நிறுத்தப்பட்டது. அவசரநிலை காலத்தில் கடுமையான அடக்குமுறைகளும்
சொல்லி மளாதவை,,, மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன......சஞ்ஜய் காந்தியின் அதிகார ஆட்டம் மிகப் பிரசித்தம்... மத்திய அரசாங்க அலுவலகங்களில் கெடுபிடி பற்றி இன்னமும்
பலர் கூற கேட்டிருக்கிறேன்...
கலைஞர் துணிந்து (அன்றய கலைஞர்) நெருக்கடிநிலையை எதிர்த்து தீர்மானம் போட ஆட்சியதிகாரத்தை
இழந்தார்... 26.6.15 அன்று டிவியில்
ஸ்டாலின் எமர்ஜென்சி கொடுமைகளைப் பற்றிப் பேசினார்... சிட்டிபாபுவுக்கு ஏற்பட்ட கொடுமை அனைத்தையும் சொன்னார்... மனம் பதைபதைத்தது..
அன்றய திமுகவை உருவாக்கியது அதை வளர்த்த்த பல
தலைவர்களில் கலைஞர் ஒருவர்... ஆனால் திமுகவிற்காக கொட்ட்டியில் அடிபட்டவர்
ஸ்டாலின் என்று தோன்றியது....
லேபிள்கள்:
அரசியல்
,
எமர்ஜென்சி
,
காங்கிரஸ்
,
பா%க
செவ்வாய், 16 ஜூன், 2015
பழையன கழிதல்...
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.... பலம் வாய்ந்த ரயில்வே தொழிற் சங்கங்கள் இப்போதே போர்கொடி தூக்க தொடங்கியுள்ளன ... அரசு சற்று அடக்கித்தான் வாசிக்கும் என்று தெரியும்... பொதுவாக இந்த விசயத்தில் பல்வெரு கருத்து மாறுபாடுகள் எனக்கு உண்டு.. எங்கள் துறையை சார்ந்த மறைந்த தலைவர் ஓ பி குப்தா பேசும்போது சொல்வார் "நீங்கள் உடல் சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைக்கு செல்வீர்களா... அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்வீர்களா...." பலர் அவர் கூறுவதை கேட்டு கோபப்படுவார்கள்.. மனசாட்சியுடன் பதில் சொன்னால் நாம் தனியாருக்குத்தான் போவோம்... உயிர்ப் பிரச்கனை ஆயிற்றே..
காய்தல் உவத்தல் இல்லாமல் பார்த்தால் ... இரன்டும் இன்றய சுழலில் தேவை என்றே
தோன்றும்..... BSNL இல்லையா... ??? நாம்
கூடாது என்று சொல்லும் போதே நம்மிடம் weakness உள்ளது என்பது தெரியும்...கால
தேச வர்தமான மாற்றங்களுக்கு ஏதுவாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது..
முற்போக்கு
என்ற பார்வையில் சில கோட்பாடுகளை கொண்டு பழைய
முறை சமாச்சாரங்களை பார்த்து விட்டோம்... எனக்கு
அதில் நம்பிக்கை இல்லை... உண்மையில் அவை வெற்றி
பெறவில்லை என்பதே எனது துணிபு
லேபிள்கள்:
சமூகம்
,
தனியார்மயம்
திங்கள், 18 மே, 2015
புறம்போக்கும் பொது உடைமையும்...
பொது உடைமைதான் என்ன?“ என்பது பற்றி அரிச்சுவடி தெரியாதவர்கள் இந்தப் படத்தைப் பார்த்ததால் ”நல்ல
விறுவிறுப்பா ஜெயில் ப்ரேக் பத்தி சொல்லியிருக்காங்க....” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்... ஆனால் எனக்கு பொது உடைமை பற்றி அரிச்சுவடி வரை தெரியும் என்பதால் அப்படி முடித்துக்
கொள்ள விரும்பவில்லை..
முதலில் எனக்குத் தலைப்பு புரியவில்லை... பொதுஉடைமையை நக்கல் செய்வது போல அமைந்திருக்கிறது.. எல்லா புறம்போக்கு நிலமும் பொதுஉடைமைதான் ...
ஒரு வேளை அதுதான் தலைப்பா...?
போராளிகளின் திட்டம் தவிடு பொடியாகிறது.. அதனால்
அவர் கடல்கடந்து போவ்தாக ஒரு காட்சி வருகிறது... இந்தியாவை விட்டே தப்பிக்கிறாரா...?
ஒருவேளை போராளிகள் வெறும் சாகசவாதிகள் என்கிறாரா...?
மெக்காலே என்கிற பாத்திரப் பெயர் புரிகிறது... ஆனால் அந்த மெக்காலே கல்வி கற்ற போலீஸ்காரன்தான் ஜெயிக்கிறான்.. அவன் திட்டம்தான் துல்லியமாக இருக்கிறது...
ஒருவேளை மெக்காலே கல்விதான் சிறந்தது என்கிறாரா ஜனநாதன்...?
மொத்தத்தில் விறுவிறுப்பான குழப்பம்தான்....
லேபிள்கள்:
திரைப்படம்
,
ஜனநாதன்
வியாழன், 14 மே, 2015
உத்தம கமல் = வில்லன்...?
அனைவரும் எழுதிய பிறகு தாமதமாக எழுத வேண்டியிருக்கிறது... இருந்தும் படத்தைப் பற்றிய ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்
உத்தமவில்லன் மைனஸ் கமல் = படம் ஒரு அழகோவியம்
இந்த படத்திற்கு வில்லனாக அமைந்ததே கமல் என்கிற மாபெரும் personalityதான்... அவருக்கு எந்தப் பாத்திரமும் அனாயசம் என்றாலும் மனோரஞ்சன் மேல் அனுதாபம் வராததற்குக் காரணம் பாத்திரத்தை ஒரு மெகா ஸ்டார் பாத்திரமாக பார்க்காமல் கமலாகப் பார்ப்பதுதான்... ஒரு வேளை வேறு சிலர் அப்படிப் பார்க்காமல் போகலாம்,,... என்னால் இயலவில்லை... காரணம் அந்தப் பாத்திரமே கமல் சாயலாக முற்போக்குப் பேசுவது etc etc.,
மற்றபடி, சமீபகால இளம் இயக்குனர்கள் சிந்தனையார்கள் எடுக்கும் off-beat வகையில் அதற்கு சற்றும் சளைக்காமல் கமல் என்கிற படைப்பாளி இந்தப் படைப்பைத் தந்திருக்கிறார்...
உண்மையில் கமலுக்குப் போட்டியே மைனா மெட்ராஸ் கோலிசோடா ஜிகர்தண்டா போன்ற சமகாலப் படைப்புகள்தான்...
அந்த வகையில் கமல் என்கிற படைப்பாளியின் வெற்றியே உத்தமவில்லன்....
செவ்வாய், 12 மே, 2015
அந்த பத்து சதம்.......
தீர்ப்பின் மைய்யக்கருத்தே இதுதான்....
வருவாய்க்கு அதிகமாக ஜெயாவிற்கு ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகை என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது...( ஒரு முதலமைச்சர் தன் 5 ஆண்டு கால ஆட்சியில் கிட்டதட்ட 2.82 கோடி அளவுக்கு தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி என்பது நீதிமன்றத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டதா என்பதை விளக்கவில்லை)
அதற்கு நீதி மன்றம் காட்டும் ஆதாரம் ::::
கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின் வழக்கு ஒன்று
ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்பது இர்ண்டாது ஜெ க்கு சாதகமாவுள்ளது
கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின் வழக்கு ஒன்று
ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்பது இர்ண்டாது ஜெ க்கு சாதகமாவுள்ளது
இதே கருணை சிறையில் வாடும் மாருதி தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் மேலும் வழக்காடினால் கிடைத்திருக்கும் தண்டனைக் காடிலும் அதிக ஆண்டுகள் சிறையில் வாடும் 1 லட்ததிற்க்கும் அதிகமான UNDERTRAILS க்கு நீதி கிடைக்கவேண்டும்
இதை அரசு செய்யுமா..?
=============
காமெடி டயம்
நேற்று தந்தி டிவியில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக வுக்குப் பேசினாரா இல்லை நடுநிலையாக பேசினாரா என்று பெரும் காமெடி.....
கடந்த ஆறு மாதம் அரசு செயல்படவில்லை என்கிறார்... 10 சதம் வருமானம் அப்படித்தான் கூட குறைய வரும் என்கிறார் .. திமுக சார்பில் பேசிய அப்பாவு அந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மேட்டரே ஒரு உள் குத்து அது பண்ருட்டி சாருக்குத் தெரியும் என்ற போது , பேசாமல் சிரிக்கிறார்.
அவர் அதிமுகதானே இருக்கிறார்..?
லேபிள்கள்:
அதிமுக
,
சமூகம்
,
நீதி மன்றம்
வெள்ளி, 8 மே, 2015
இரு வேறு உலகத்து இயற்கை.....
அய்யன் வள்ளுவன் என்றோ எழுதினான் இந்தக் குறளை...
இரு வேறு உலகத்து இயற்கை. திரு வேறு
தெள்ளிய ராதலும் வேறு
ஆனால் தற்போது எழுதினால் சற்று மாற்றி எழுதுவான்... பணம் வேறு பணமில்லாதவர்கள் வேறு என்று... அவ்வளவுதான்
மீண்டும் சல்மான்கான்....
வெறுத்துப் போய்விட்டது... இதை எழுதாமலும் இருக்க முடியவில்லை.. சல்மான் ஒரு பாருக்குச் சென்றார்..செல்லட்டும்.. வயிறு முட்ட குடித்தார் குடிக்கட்டும்.. அவரிடம் பணமுள்ளது... கோடி கோடியாக சம்பாதிக்கிறார்.. சம்பாதிக்கட்டும்.. அதான் கொட்டிக் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்...
ஆனால் அப்படியே குடித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஏழை பராரியின்
மேல் ஏற்றி அவரைக் கொன்று ஒருவர் காலை ஒடித்து... இதை எப்படி ஏற்க முடியும்?
சரி .. நம் நீதிமன்றம் 13 வருடங்கள் நீதியை வரவழைக்க எடுத்துக் கொண்டது..
காரணம்... இழுத்தடிப்பு... சாட்சிகள் மிரட்டல்.... அந்த பிளாட்பார வாசிகள் செத்ததே காரால் இல்லை... காரை கிரேன் எடுத்த போது அது மோதி இறந்தார்கள் என்று நீதிமன்றத்தை குழப்பி, சல்மான் கோடிஸ்வரர்.. பல நற்காரியங்கள் புரிந்து நாட்டுக்கு நல்லது செய்தவர், அதனால் அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்று கெஞ்சி, இறுதியில் சல்மான் காரே ஓட்டவில்லை அவர் டிரைவர்தான் ஓட்டினார் என்று டிரைவரை ஓத்துக் கொள்ள வைத்து... என்ன செய்தும், ஒரு வழியாக அறிஞர் அண்ணா சொன்னதைப் போல இருட்டறையில் இருந்த நீதியை அந்த செசன்ஸ் நீதியரசர் சரியாக வெளிக் கொணர்ந்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு சொல்ல, ஒரு வழியாக நீதி வென்றது என்றால்...
முதலில் 2 நாள்கள் ஜாமீன் வாங்கி , தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டை செய்ய... அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் , தீர்ப்பு வரும்வரை தண்டனையை நிறுத்திவேறு வைத்திருக்கிறது...
குற்றவாளி என்று நிருபிக்க 13 வருடங்கள்.. ஆனால் ஜாமீன் கொடுக்க 2 நாட்கள் மட்டுமா...
சரி அடுத்த கதை...
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு போஸ்ட்மேன்... மணியார்டர் பணத்தைக் கையாடல் செய்துவிட்டாராம்........எத்தனை ரூபாய் தெரியுமா? ரூ 50 /-...... (?) அவரை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாம். அதை எதிர்த்து அவர் வழக்காட அந்த வழக்கு கிட்டத்தட்ட 350 முறைகள் விசாரணைக்கு வந்து முடிய கிட்டத்தட்ட 29 வருடங்கள் ஆகியதாம்.. இறுதியில் அவர் குற்றமற்றவர் என்றதாம் நீதிமன்றம்..
அதற்குள் அந்த ஆள் நொடிந்து போய்விட்டாராம்.. வழக்கு இருந்ததால் அவருக்கு வேறு எங்கும் வேலைக்கும் செல்ல முடியவில்லையாம்...
அய்யா...அறிஞர்களே, ஜனநாயகவாதிகளே...
ஏழைகளுக்கு எட்டாகனியாக நீதியை வைக்க அனுமதிக்காதீர்... ஜனநாயகத்துக்கு நாகரீகத்திற்கு பெரும் இழுக்கு....
நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்..
வேறு என்னத்தைச் சொல்ல....?
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)