500 /1000 ரூபாய்
விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது… சரியா தவறா என்கிற விவாதம் பெருமளவில்
காட்சி ஊடகங்களில் பேச்சுப் பொருளாக நடைபெற்று வருகிறது..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
ஞாயிறு, 13 நவம்பர், 2016
சரியா தவறா..?
லேபிள்கள்:
அரசியல்
,
கருப்புப் பணம்
,
கள்ளப்பணம்
புதன், 9 நவம்பர், 2016
உலகெங்கும் வலதுசாரிப் புயல் ...
வலதுசாரிகள் செல்வாக்கு உலகெங்கும் பட்டொளி வீசிப் பறந்து வருகிறது என்பதை ட்ரம்ப் வெற்றி DRUM அடித்து சொல்கிறது...
திங்கள், 24 அக்டோபர், 2016
உலக அதிபர் (?) போட்டி...
என்றுமில்லாத வகையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டி விசித்திரமாகச் சென்று கொண்டிருக்கிறது.. ஹிலாரி ட்ரம்ப் போட்டி என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே போட்டி என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது..
ஆரம்பத்திலிருந்து ட்ரம்ப் பற்றி வந்த செய்திகள் வினோதமானவை.. முதலில் இந்தியர்களை கேலி செய்து பேசினார்.. முஸ்லிம் மக்களை இருக்க விடமாட்டேன் என்றார்.. தற்போது ஒரு பெண் அதிபரானால் ராணுவம் எப்படி சல்யூட் அடிக்கும் என்கிற படு மோசமான பிற்போக்கு வாதத்தை உதிக்கிறார்... பொதுவாக அமெரிக்கா ஜனநாயகம் பரந்துபட்ட மக்களுக்கானாது என்றாலும் அவற்றில் தீவிர வலதுசாரி அம்சம் சற்று உறுத்தும்.. அதிலும் அடிப்படை மதவாதக் கருத்துக்கள் அதிகம் என்கிறார்கள்.. மேலும் ட்ரம்பின் வயது 70.. அவர் நிச்சயம் 15 வயதில் மதவாதக் கருத்துக்களுக்கு ஆளானாவர் என்பது அவரின் தற்போதையே பேச்சில் தெளிவாகத் தெரிகிறது... லிங்கன் வழிவந்தவரா இவர் என்கிற எண்ணத் தோன்றுகிறது...
அமெரிக்கா தன்னுடைய அதிபரை ஏறத்தாழ உலக அதிபர் என்கிற நிலையில்தான் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. உலகெங்கும் கம்யூனிச அரசுகள் மண்ணைக் கவ்வியவுடன் அமெரிக்கா மேலும் அனைவர் மேல் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறது... இந்நிலையில் ட்ரம்ப் போன்ற குடியரசு கட்சியின் வேட்பாளர்களின் பேச்சுக்களின் தொனி சற்று விசித்திரமாகவும் ஆபத்தாகவும்தான் உள்ளது.. ஹிலாரி ஈமெயில்களை அழித்தார் போன்ற புகார்கள் இருந்தாலும் ட்ரம்பின் எதிர்மறை அம்சத்தாலேயே ஹிலாரி வெற்றி பெற்றுவிடுவார் போல் உள்ளது.. .
இந்தியாவை பலர் படு பிற்போக்கு நாடு என்றும் மத நம்பிக்கை பெண்ணடிமைத்தனம் நிறைந்த நாடு என்றுதான் பலர் கூறுகிறார்கள்.. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில்தான் ஒரு பெண் விதவை - நேரு சாஸ்த்ரிக்குப் பிறகு - சர்வ வல்லமை பொருந்தியவராக பெரிய தலைவராக இருந்திருக்கிறார்.. அதை சராசரி இந்திய மனம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
லேபிள்கள்:
அதிபர் தேர்தல்
,
அமெரிக்கா
,
ட்ரம்ப்
செவ்வாய், 4 அக்டோபர், 2016
தண்ணிரில் தள்ளாடும் உண்மை...
பல் இளித்துவிட்டது நமது ஓட்டு வங்கி அரசியல்... ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கக் கூடிய அம்சம் இப்படி பலவீனமான போனது வரலாற்றுச் சோகம்தான்...
காவிரி விஷயத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்த்து எந்தக் கட்சிக்கும் ஆத்மார்த்தமான நிலைபாடே கிடையாது.. எப்படி அரசியல் பண்ணலாம்.. என்ன லாபம் கிடைக்கும் என்பதையே குறிக்கோளாகச் செயல்படும் ஓட்டுக் கட்சிகள் சுயலாபத்தைத்தான் பார்ப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது.. இந்த ஓட்டரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை.. அவர்களாலும் தமிழகத்தில் ஒரு நிலைபாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைபாடும்தான் எடுக்க முடிகிறது...
இதை வைத்து சீமான்கள் வளர ஒரு ராஜபாட்டை வேறு போட்டுவிட்டார்கள்... அனைத்து கட்சிகளும் அவரவர்கள் அரசியல் லாபம் பார்த்து விட்டார்கள்..
மீண்டும் உண்மை தனித்து விடப்பட்டிருக்கிறது...
லேபிள்கள்:
ஓட்டரசியல்
,
காவிரி
,
மேலாண்மை வாரியம்
வெள்ளி, 30 செப்டம்பர், 2016
சரியான பதிலடிதான்..
காஷ்மீர் மாநிலம், யூரியில் சமீபத்தில், அதிகாலை வேளையில் தூங்கிக்கொண்டிருந்த நமது ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவுத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது படு கேவலமானது.
இந்தத் தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. அநியாயமாக நமது 18 ராணுவ வீரர்களை பலி கொடுக்க நேர்ந்துவிட்டது,,
அதற்கு பதிலடியாக நேற்று நமது ராணுவ வீரர்கள் POKயில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்திருக்கிறார்கள்.. அதில் பாக் ராணுவ வீரர்களும் உண்டு..
ஏற்கனவே சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காததால் சார்க் மாநாடே காலியானது.. இத்தனை பட்டும் பாக் திருந்தாமல் காஷ்மீரத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறது..
நேற்று நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதல் போன்ற மொழிகள்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதை தொடர்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றே தோன்றுகிறது..
லேபிள்கள்:
தீவிரவாதம்
,
ராணுவம்
திங்கள், 19 செப்டம்பர், 2016
என்னத்தை சொல்ல...?
எதையும் சந்தேகத்திற்கிடமில்லாமல்
நீரூபிக்க வேண்டும்… நீதிமன்றம் அப்படி இல்லாவிட்டால் முற்றிலுமாக நிராகரித்துவிடும்…
அப்படி செய்ய முடியாத சூழலில் இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டுமா…,?
நம்முடைய புலனாய்வு
ஒரு காலத்தில் பிரமாதமாகப் பேசப்பட்டது… தற்போது
இந்தத் துறை மட்டுமல்ல எல்லா துறையும் பின்னடைவாகத்தான்
இருக்கிறது… காரணம்…
அதிகார துஷ்பிரயோகம்..
லஞ்ச லாவண்யம்..
மெத்தனம்… அசிரத்தை..
அரசியல் தலையீடு..
சாதிப்பாகுபாடு..
இத்தனையும் மீறித்தான்
நாம் வாழவேண்டியிருக்கிறது… சில சமயங்களில் சில நல்ல விஷயங்களும் நடக்கிறது…
நான் எதை குறிப்பிடுகிறேன்
என்று தெரிகிறதா… காவிரி பிரச்சனையைத்தான் சொல்கிறேன்… நீங்கள் வேறு எதையும் முடிச்சுப்
போட்டுக் கொள்ளாதீர்கள்…
வியாழன், 8 செப்டம்பர், 2016
இதை எந்தக் கணக்கில் சேர்ப்பது...?
இன்று டெல்லியில் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதித்தார்கள்..
அனைவரும் - கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்து - ஒருமித்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் எந்த முடிவையும் ஆதரிக்க முடியாது என்று கூட்டு முடிவை எடுத்திருக்கிறார்கள்..
உண்மையில் ஆதரிக்கப்பட வேண்டிய செய்திதான் ..
ஆனால் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு மாண்டியாவில் கூடிய கன்னட வெறி அமைப்பினர் காவிரி தாவாவின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல், தமிழக லாரிகளை அடித்து நொறுக்குவதும் சாலைகளை துண்டிப்பதும் தொடர் பந்த் செய்வதும் முதலில் நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளதா இல்லையா என்பதை அதே தேசிய கட்சிகள் கூற வேண்டும்,,,,
செய்வார்களா...?
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)